‘கண்ணால் காண்பதன்படி நடக்காமல் விசுவாசத்தின்படி நடங்கள்’
எருசலேமை அழிப்பதற்காக ரோம படை அதை சுற்றி வளைத்தது. அதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்பு அப்போஸ்தலன் பவுல் ஒரு முக்கியமான விஷயத்தை சொன்னார். ‘சிறந்த படைவீரர்களாக’ கிறிஸ்தவர்கள் நிறைய கஷ்டங்களை எதிர்பார்க்க வேண்டும் என்று சொன்னார். வசதியாக வாழ்வதற்கு அவர்கள் முதலிடம் கொடுக்கக் கூடாது என்றும் சொன்னார். (2 தீ. 2:3, 4) நாம் வாழும் இந்த உலகமும் சீக்கிரத்தில் அழியப்போகிறது. நமக்கு யெகோவாமீது உறுதியான நம்பிக்கை இருந்தால்தான் அவருடைய சேவைக்கு முதலிடம் கொடுப்போம். (2 கொ. 4:18; 5:7) ‘கண்ணால் காண்பதன்படி நடக்காமல் விசுவாசத்தின்படி நடங்கள்’ என்ற வீடியோவை பாருங்கள். (jw.org வெப்சைட்டில் வெளியீடுகள் > வீடியோ என்ற தலைப்பில் பாருங்கள்.) அதில் நாகாமும் அபித்தாளும் எப்படி பண ஆசையால் அழிந்தார்கள் என்று பார்த்திருப்பீர்கள். இப்போது, பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
(1) முதல் நூற்றாண்டில், “பரிசுத்தமான இடத்தில்” நின்ற “பாழாக்கும் அருவருப்பு” எது, எருசலேமில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் என்ன முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது? (மத். 24:15, 16) (2) எருசலேமை விட்டு ஓடுவதற்கு ஏன் விசுவாசம் தேவைப்பட்டது? (3) எருசலேமை விட்டு ஓடுவதற்கு எதையெல்லாம் தியாகம் செய்ய வேண்டியிருந்தது? (4) நாகாமும் அபித்தாளும் ஏன் உடனடியாக கிளம்பவில்லை? (மத். 24:17,18) (5) எருசலேமை விட்டு போகும்போது ராகேலுக்கு வேறு என்ன பிரச்சினை வந்தது? (மத். 10:34-37; மாற். 10:29, 30) (6) யெகோவா மீது முழு நம்பிக்கை வைப்பதில் ஏத்தான் மற்றவர்களுக்கு எப்படி நல்ல உதாரணமாக இருந்தார்? (7) பெல்லாவில் கிறிஸ்தவர்கள் என்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள்? (8) நாகாம் மற்றும் அபித்தாளின் விசுவாசம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது? (9) பெல்லாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை யெகோவா எப்படி பார்த்துக்கொண்டார்? (மத். 6:33; 1 தீ. 6:6-8) (10) முடிவு நெருங்கும் சமயத்தில் வாழ்கிற நாம் எப்படி ஆபிரகாமையும் சாராளையும் பின்பற்றலாம்? (எபி. 11:8-10) (11) நாகாமும் அபித்தாளும் திரும்பவும் எருசலேமுக்கு போக ஏன் முடிவு செய்தார்கள்? அது ஏன் தவறான முடிவாக இருந்தது? (லூக்கா 21:21) (12) நாகாமும் அபித்தாளும் எருசலேமுக்கு திரும்பி வந்தபோது நிலைமை எப்படி இருந்தது? (13) சாத்தானுடைய உலகத்துக்கு முடிவு வரப்போகும் இந்த நேரத்தில் நம் விசுவாசத்தை பலப்படுத்துவது ஏன் முக்கியம்?—லூக்கா 17:31, 32; 21:34-36.
விசுவாசத்தின்படி நடக்க நாம் மூன்று விஷயங்களை செய்ய வேண்டும்: (1) யெகோவா சொல்வதை முழுமையாக நம்ப வேண்டும், (2) அதன்படி நடக்க வேண்டும், (3) பொருள் சேர்ப்பதைவிட யெகோவாவுடைய சேவையை உயர்வாக மதிக்க வேண்டும். அதாவது, அதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். “இந்த உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவா. 2:17) அதனால், நாம் எப்போதும் கண்ணால் காண்பதன்படி நடக்காமல் விசுவாசத்தின்படி நடக்க வேண்டும்.