வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
மார்ச் 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 3
யெகோவாவை நம்புங்கள்
நீதிமொழிகள் 3:5, 6—‘உன் சுயபுத்தியின்மேல் சாயாதே’
“யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு.” எல்லா விஷயங்களையும் கடவுளுக்குப் பிடித்த மாதிரி நாம் செய்யும்போது, அவரை நம்பியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். முழு இதயத்தோடு நாம் அவர்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். பைபிளில், இதயம் என்பது பொதுவாக உள்ளுக்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. அதாவது, நம் உணர்ச்சிகள், லட்சியங்கள், யோசனைகள், குணங்கள் என எல்லாவற்றையும் குறிக்கிறது. அப்படியென்றால், கடவுளை முழு இதயத்தோடு நம்புவது என்பது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு செய்யும் விஷயமல்ல. இது நாம் நன்றாக யோசித்து எடுக்கும் ஒரு முடிவு. ஏனென்றால், நமக்கு எது சிறந்தது என்று நம்முடைய படைப்பாளருக்கு நன்றாகத் தெரியும் என்று நாம் முழுமையாக நம்புகிறோம்.—ரோமர் 12:1.
“உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே.” நாம் பாவிகளாக இருப்பதால், நாம் யோசிக்கும் விதம் சரியாக இருப்பதில்லை. அதனால் நம்மை நம்புவதற்கு பதிலாக, கடவுளை நம்ப வேண்டும். நாம் நம்மை மட்டுமே நம்பினால் அல்லது உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்தால் நம்முடைய தீர்மானங்கள் ஆரம்பத்தில் நல்லதாகத் தெரியலாம். ஆனால், கடைசியில் மோசமான பாதிப்புகள் வரலாம். (நீதிமொழிகள் 14:12; எரேமியா 17:9) நம்முடைய ஞானத்தைவிட கடவுளுடைய ஞானம் ரொம்ப ரொம்ப உயர்ந்தது. (ஏசாயா 55:8, 9) கடவுள் காட்டுகிற வழியில் நாம் நடக்கும்போது, நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.—சங்கீதம் 1:1-3; நீதிமொழிகள் 2:6-9; 16:20.
நீதிமொழிகள் 3:5, 6—‘உன் சுயபுத்தியின்மேல் சாயாதே’
“எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய்.” வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும்... எந்தவொரு முக்கியமான முடிவை எடுத்தாலும்... அது கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? வழிநடத்துதலுக்காக கடவுளிடம் ஜெபம் செய்ய வேண்டும். அதோடு, அவருடைய வார்த்தையான பைபிளில் அவர் சொல்லியிருக்கும் ஆலோசனைகளின்படி செய்ய வேண்டும்.—சங்கீதம் 25:4; 2 தீமோத்தேயு 3:16, 17.
“உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.” எப்படி? தன்னுடைய நீதியான நெறிமுறைகளின்படி வாழ நமக்கு உதவி செய்வதன் மூலம்தான். (நீதிமொழிகள் 11:5) அவருடைய நெறிமுறைகளின்படி நாம் வாழ்வதால், தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முடிகிறது, சந்தோஷமாகவும் வாழ முடிகிறது.—சங்கீதம் 19:7, 8; ஏசாயா 48:17, 18.
முன்னேற விரும்புங்கள்—வளர்ச்சி அடையுங்கள்
வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளை சந்தித்த பிறகு, ‘இந்தப் பிரச்சினையை நான் ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும்’ என நியாயங்காட்ட மனம் தூண்டும். மனம் சொல்வதை கேட்பது ஞானமான காரியமா? “நீ உன்னை ஞானியென்று எண்ணாதே” என நீதிமொழிகள் 3:7 எச்சரிக்கிறது. நாம் பெற்றிருக்கும் அனுபவம், வாழ்க்கையில் சில சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்ற நம் கண்ணோட்டத்தை நிச்சயமாகவே பரந்ததாக்க வேண்டும். ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் செய்கிறோம் என்றால், வெற்றி பெற நமக்கு யெகோவாவின் ஆசீர்வாதம் தேவை என்பதையும் அந்த அனுபவம் நம் மனதிலும் இருதயத்திலும் பதிக்க வேண்டும். ஆக, சூழ்நிலைகளை தன்னம்பிக்கையோடு சந்திப்பது அல்ல, ஆனால் வழிகாட்டுதலுக்காக உடனடியாக யெகோவாவிடம் திரும்புவதே நம் வளர்ச்சிக்கு அடையாளம். அவர் அனுமதிக்காமல் எதுவும் நடக்காது என்பதை நம்புவதும், நம் பரலோக தகப்பனோடு நம்பிக்கையும் பாசமும் நிறைந்த உறவை காத்துக்கொள்வதும் வளர்ச்சியின் வெளிக்காட்டுகள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
3:3. அன்புள்ள தயவையும் உண்மையையும் நாம் உயர்வாக மதிக்க வேண்டும்; கழுத்தில் அணியும் விலையுயர்ந்த ஆபரணத்தைப் போல, அக்குணங்களை யாவரறிய வெளிக்காட்ட வேண்டும். அதோடு, அவற்றை நம் இருதயப் பலகையில் எழுதிக்கொள்ள வேண்டும், அவற்றை நம் சுபாவத்தின் முக்கிய அங்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
மார்ச் 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 4
“உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்”
உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
4 நீதிமொழிகள் 4:23-ல் இருக்கிற ‘இதயம்’ என்ற வார்த்தை உள்ளான மனிதனை அல்லது உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘இதயம்’ என்ற வார்த்தை நம்முடைய யோசனைகளையும், உணர்வுகளையும், எண்ணங்களையும், ஆசைகளையும் குறிக்கிறது. முக்கியமாக, வெளித்தோற்றத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அல்ல, உள்ளுக்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது.
உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
10 இதயத்தைப் பாதுகாப்பதில் நாம் வெற்றிபெற வேண்டும் என்றால், முதலில் ஆபத்துகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். பிறகு, உடனடியாகச் செயல்பட வேண்டும். நீதிமொழிகள் 4:23-ல் “பாதுகாத்துக்கொள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை, காவல்காரன் செய்யும் வேலையை ஞாபகப்படுத்துகிறது. சாலொமோன் ராஜாவின் காலத்தில், நகரத்தின் மதில்கள்மேல் காவல்காரர்கள் நின்றுகொண்டு ஆபத்து வருகிறதா என்று பார்ப்பார்கள்; அப்படி ஆபத்து ஏதாவது வந்தால் உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்புவார்கள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்யும்போது, சாத்தான் நம் யோசனைகளைக் கறைபடுத்தாதபடி பார்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
11 கடந்த காலத்தில், வாயிற்காவலர்களோடு சேர்ந்துதான் காவல்காரர்கள் வேலை செய்தார்கள். (2 சா. 18:24-26) எதிரிகள் நகரத்தைத் தாக்க வரும்போது, வாயிற்கதவுகள் மூடப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்வதன் மூலம் அவர்கள் நகரத்தைப் பாதுகாத்தார்கள். (நெ. 7:1-3) பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம்முடைய மனசாட்சி, காவல்காரனைப் போல செயல்படுகிறது. சாத்தான் நம் இதயத்தைத் தாக்க முயற்சி செய்யும்போது, அதாவது நம் யோசனைகளையும் உணர்வுகளையும் எண்ணங்களையும் ஆசைகளையும் கெடுக்க முயற்சி செய்யும்போது, அது நம்மை எச்சரிக்கிறது. நம் மனசாட்சி அந்த எச்சரிக்கை ஒலியை எழுப்பும்போதெல்லாம் நாம் அதைக் கேட்டு, இதயம் என்னும் கதவை அடைத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
14 நம் இதயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், கெட்ட விஷயங்களைத் தவிர்ப்பதற்காக நம் இதயம் என்ற கதவை மூடினால் மட்டும் போதாது; நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்வதற்காக அதைத் திறக்கவும் வேண்டும். மதில் சூழ்ந்த நகரத்தின் உதாரணத்தை மறுபடியும் யோசித்துப்பாருங்கள். எதிரிகள் நகரத்தைத் தாக்க வரும்போது வாயிற்காவலர் நகரத்தின் கதவுகளை மூடுவார். ஆனால், உணவுப் பொருள்களும் மற்ற தேவையான பொருள்களும் வரும்போது கதவுகளைத் திறந்து வைப்பார். கதவுகள் திறக்கப்படவே இல்லை என்றால் மக்கள் பசியில்தான் வாடுவார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவாவின் யோசனைகள் நம்மை வடிவமைக்க வேண்டும் என்றால், தவறாமல் நம் இதயக் கதவைத் திறக்க வேண்டும்.
w12-E 5/1 பக். 32 பாரா 2
“உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்”
நம்முடைய இதயத்தை நாம் ஏன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? “எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள். ஏனென்றால், உன் உயிர் அதைச் சார்ந்தே இருக்கிறது” என்று சாலொமோன் ராஜாவைக் கடவுள் எழுத வைத்தார். (நீதிமொழிகள் 4:23) நம் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கும்... எதிர்காலத்தில் எப்படி இருக்கும்... என்பதெல்லாம் நம்முடைய இதயம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள கடவுள் நம் இதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார். (1 சாமுவேல் 16:7) அப்படி அவர் தெரிந்துகொள்ளும் விஷயங்களை வைத்துதான், அதாவது நம் “இதயத்தில் மறைந்திருக்கிற” குணங்களை வைத்துதான், நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர் முடிவு செய்கிறார்.—1 பேதுரு 3:4.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருக்கிறீர்களா?
4 “நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற விடியற்கால வெளிச்சம்போல் இருக்கிறது” என்று நீதிமொழிகள் 4:18 சொல்கிறது. யெகோவா அவருடைய விருப்பத்தை நமக்குப் படிப்படியாக வெளிப்படுத்துவதைப் பற்றி இந்த வசனம் சொல்கிறது. ஆனால், இன்னொரு விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கும் இந்த வசனம் உதவுகிறது. அதாவது, ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்து யெகோவாவிடம் நெருங்கிப்போவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும் என்பதையும் காட்டுகிறது. பைபிளையும் அமைப்பு கொடுக்கிற பிரசுரங்களையும் ஆழமாகப் படிக்கும்போதும், அதன்படி நடந்துகொள்ளும்போதும், கிறிஸ்து காட்டிய அதே குணங்களைக் காட்டுவதற்கு படிப்படியாகக் கற்றுக்கொள்ள முடியும். அதோடு, யெகோவாவைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியும். இந்த விஷயத்தை இயேசு எப்படிப் புரிய வைத்தார் என்று இப்போது பார்க்கலாம்.
மார்ச் 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 5
பாலியல் முறைகேட்டின் பக்கத்தில்கூடப் போகாதீர்கள்!
ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பு
இந்த வசனங்களில், தரங்கெட்டு நடப்பவள் “பரஸ்திரீயாக,” அதாவது விலைமகளாக குறிப்பிடப்படுகிறாள். அவள் வலையில் விழும் பேதைகளை வஞ்சிக்கும் அவளுடைய வார்த்தைகள் தேனைவிட தித்திப்பானது, ஒலிவ எண்ணெய்யிலும் மிருதுவானது. ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கு வழிநடத்தும் காரியங்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஆரம்பிக்கிறதல்லவா? இதற்கு ஓர் உதாரணம் இதோ! பார்ப்போரின் கவனத்தை சுண்டியிழுக்கும் அழகுடைய உஷாவுக்கு வயது 27. காரியதரிசியாக பணிபுரியும் இவள் சொல்வதாவது: “என்னோட வேலை செய்யற ஆள், என்னை சதா புகழ்ந்துகிட்டே இருப்பான். மத்தவங்க நம்மை கவனிக்கனும்னு நெனைக்கறது இயல்புதான். ஆனா, இவனோட நெனப்பே வேற! இதுக்கெல்லாம் மசியற ஆளில்ல நான்.” நம்மை வஞ்சிக்க நினைக்கும் ஆட்களின் புகழ் மாலைகள் கவர்ச்சியானவை. அவர்களுடைய உண்மையான சுபாவம் தெரியாதவரை அந்த வார்த்தைகள் நமக்கு அமிர்தமாய் இனிக்கும். அவர்களுடைய பொய்ப் போர்வையை கிழித்தெறிய நமக்கு தேவை சிந்தனா சக்தி.
ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பு
ஒழுக்கங்கெட்ட நடத்தையின் கோர விளைவோ, எட்டிக்காயைவிடக் கசப்பாக இருக்கும். இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைவிடவும் கூராக தைக்கும். ஆம், வேதனையைத் தருவது, சாவில் முடியக்கூடியது. உறுத்தும் மனசாட்சி, வேண்டாத கர்ப்பம், பாலின நோய் போன்றவையே சோரம்போவதன் கசப்பான விளைவுகள். ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டவரின் மணத்துணை எதிர்ப்படும் சொல்லொணா வேதனையை சற்று யோசித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட செயலை ஒரே ஒரு தடவை செய்தாலும் அதனால் ஏற்படும் காயம் வாழ்நாள் முழுவதும் ஆறாமல் நீடிக்கும். ஒழுக்கக்கேடு ரணத்தை உண்டுபண்ணிவிடும்.
ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பு
ஒழுக்கக்கேடான வாழ்க்கை நடத்தும் ஆட்களிடமிருந்து எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் விலகியிருப்பது அவசியம். அப்படியென்றால், இழிவான இசை, தரக்குறைவான பொழுதுபோக்குகள், ஆபாசப் புத்தகங்கள் போன்றவற்றில் நேரத்தை வீணடித்து ஏன் அவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்ள வேண்டும்? (நீதிமொழிகள் 6:27; 1 கொரிந்தியர் 15:33; எபேசியர் 5:3-5) இப்படிப்பட்டவர்களுடைய கண் நம்மீது பட அழைப்பு விடுவதுபோல் காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவது அல்லது உடை, சிகையலங்காரத்தில் மட்டுக்குமீறி செல்வது மிகவும் முட்டாள்தனமானது!—1 தீமோத்தேயு 4:8; 1 பேதுரு 3:3, 4.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பு
ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் பெரும் இழப்பை சாலொமோன் வலியுறுத்துகிறார். மதிப்பிழந்து அல்லது மானங்கெட்டு நிற்பதே விபசாரத்தால் ஏற்படும் விளைவு. நம்முடைய அல்லது யாரோ ஒருவருடைய வக்கிர ஆசைக்கு இடம்கொடுப்பது இழிவானதல்லவா? விவாகத்துணையை விட்டு வேறு யாருடனோ பாலுறவில் ஈடுபடுவது தன்மானமின்றி நடப்பதல்லவா?
மார்ச் 24-30
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 6
எறும்பிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
it-1-E பக். 115 பாரா. 1-2
எறும்பு
‘இயல்பாகவே ஞானமுள்ளது.’ எறும்புகள் எப்படிப் புத்திசாலித்தனமாக நடந்துகொள்கின்றன? அந்த இயல்புணர்ச்சியைப் படைப்பாளர்தான் அவற்றுக்குக் கொடுத்திருக்கிறார். எறும்புகள், ‘கோடைக் காலத்தில் உணவைச் சேமித்து வைக்கின்றன. அறுவடைக் காலத்தில் உணவுப் பொருள்களைச் சேர்த்து வைக்கின்றன’ என்று பைபிள் சொல்கிறது. (நீதி 6:8) பாலஸ்தீனாவில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை எறும்பு, எக்கச்சக்கமான தானியங்களை வசந்த காலத்திலும் கோடைக் காலத்திலும் சேர்த்து வைக்கும். பிறகு, உணவு கிடைக்காத காலங்களில், உதாரணத்துக்கு குளிர்காலங்களில், அந்தத் தானியங்களைப் பயன்படுத்தும். ஒருவேளை, தானியங்கள் மழையில் நனைந்துவிட்டால், அதையெல்லாம் கொண்டுபோய் வெயிலில் காயவைக்கும்! சொல்லப்போனால், தானியங்கள் முளைக்காமல் இருப்பதற்காக அவற்றின் கருப்பகுதியைக்கூட எறும்புகள் எடுத்துவிடும்!
மெச்சத்தக்க குணங்கள். “சோம்பேறியே, நீ போய் எறும்பைப் பார். அது செய்வதையெல்லாம் கவனித்து, ஞானத்தைப் பெற்றுக்கொள்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி 6:6) எறும்புகளைப் பற்றி நாம் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்தால் இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். எதிர்காலத்துக்காக சேர்த்து வைப்பது மட்டுமல்லாமல், விடாமுயற்சியோடும் உறுதியோடும் அவை வேலை செய்கின்றன. அவற்றின் எடையைவிட இரண்டு மடங்கு அல்லது அதற்கும் அதிகமான எடையை அவற்றால் சுமந்துசெல்லவோ இழுத்துசெல்லவோ முடியும். எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது அவை செய்து முடித்துவிடும். கீழே விழுந்தாலும் சரி, சருக்கினாலும் சரி, உருண்டு விழுந்தாலும் சரி, ஆரம்பித்த வேலையை முடிக்காமல் விடாது. எறும்புகள் ரொம்பவே ஒற்றுமையாக இருக்கும், அவற்றின் புற்றைச் சுத்தமாக வைத்திருக்கும். அதோடு, ஒன்றையொன்று ரொம்ப அக்கறையாகக் கவனித்துக்கொள்ளும். உதாரணத்துக்கு, காயப்பட்ட அல்லது சோர்ந்துபோன எறும்புகளைச் சிலசமயங்களில் புற்றுக்குத் தூக்கிக்கொண்டு வரும்.
நல்ல பேரை வாங்க வேண்டும்
எறும்பைப்போல நாமும் நம் வேலையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டாமா? மற்றவர்கள் பார்த்தாலும்சரி பார்க்காவிட்டாலும்சரி கடுமையாக உழைத்து, முன்னேறுவது நல்லது. பள்ளியிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, கடவுளுடைய சேவையிலும் சரி, நாம் கடுமையாக உழைக்க வேண்டும். எறும்பு தன் கடும் உழைப்பால் அநேக நல்ல பலன்களை பெறுகிறது, அதேபோல நாமும், “படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே” நம் கடவுளின் விருப்பம். (பிரசங்கி 3:13, 22; 5:18) அவ்வாறு கடுமையாக உழைப்பதனால் வரும் பலன்கள், சுத்தமான மனசாட்சியும் மனதிருப்தியுமே.—பிரசங்கி 5:12.
சோம்பேறிகளை எழுப்பி அவர்களது நிலையை உணர்த்துவதற்கு, சிந்திக்க வைக்கும் இரண்டு ஆழமான கேள்விகளை சாலொமோன் ராஜா கேட்கிறார்: “சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” பின்னர், “இன்னுங்கொஞ்சம் தூக்கம், இன்னும் சிறிது நித்திரை, இன்னும் கைமுடக்கிச் சிறிது உறக்கம் என்பாயோ?” என கேட்டுவிட்டு, “தரித்திரம் வழிபறிப்பவன்போல் வரும், வறுமை ஆயுதமணிந்தவன்போல் வரும்” என்கிறார். (நீதிமொழிகள் 6:9-11, தி.மொ.) சோம்பேறி எந்த வேலையும் செய்யாமல் சாவகாசமாக உட்கார்ந்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தால், தரித்திரமும் வறுமையும் வழிபறிப்பவனைப் போலவும் ஆயுதமணிந்தவனைப் போலவும் திடீரென அவனை தாக்கும். அதேபோல சோம்பலாயிருக்கும் விவசாயியின் நிலத்தில் முற்களும் தேவையற்ற செடிகளும்தான் முளைக்கும். (நீதிமொழிகள் 24:30, 31) சோம்பேறியின் வியாபாரம் சீக்கிரத்திலேயே நஷ்டத்தை தழுவும். கம்பெனியில் வேலை செய்பவர் சோம்பேறியாக இருந்தால், அவருடைய முதலாளி எவ்வளவு நாள்தான் பொறுத்திருப்பார்? சீக்கிரமே வேலையிலிருந்து நீக்கி விடுவார். அதேபோல ஒரு மாணவி சோம்பேறியாக இருந்தால், அவள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறமுடியுமா, அவள் புத்திசாலிப் பெண்ணாகத்தான் இருப்பாளா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நல்ல பேரை வாங்க வேண்டும்
நீதிமொழிகள் குறிப்பிடும் இந்த ஏழு தவறான செயல்களும் பொதுவாக எல்லாவித தவறுகளையும் உட்படுத்தும். ஏனென்றால் எல்லா தீமைக்கும் இவைதான் அடிப்படை. “மேட்டிமையான கண்” மற்றும் “துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்” மனதளவில் செய்யப்படும் பாவங்களாகும். “பொய்நாவு” மற்றும் “அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி” வார்த்தையால் செய்யும் பாவங்கள். “குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை” மற்றும் “தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்” கொடூரமான செயல்கள். யெகோவா வெறுக்கும் மற்றொரு முக்கியமான தீமையும் இருக்கிறது. ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பவர்கள் மத்தியில் கலகம் மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை, அதில் சந்தோஷப்படுபவர்களையே யெகோவா அடியோடு வெறுக்கிறார். அந்த வசனங்களில் முதலில் ஆறு குணம் என்று சொல்லிவிட்டு பிறகு ஏழு என அதிகரிப்பது அந்த பட்டியல் முடிந்துவிடவில்லை என்பதை குறிக்கிறது. ஏனென்றால், மனிதரின் பாவங்கள் அல்லது தீய செயல்கள் கூடிக்கொண்டேதான் போகின்றன.
மார்ச் 31–ஏப்ரல் 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 7
தப்பு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளைத் தவிருங்கள்
‘என் கட்டளைகளைக் காத்துக்கொண்டு பிழைத்திரு’
சாலொமோன் பலகணி வழியாக பார்க்கிறார். இது, கண் போன்ற துளைகளும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் நிறைந்த ஜன்னலாக இருந்திருக்கலாம். சூரியன் மறையும் வீதியை காரிருள் கவ்வுகிறது. அப்போது மனதில் உறுதியே இல்லாத ஒரு வாலிபன் அவர் கண்களில் தென்படுகிறான். அவனுக்குப் பகுத்துணர்வும் மதிநுட்பமும் இல்லாதபடியால் அவன் மதிகெட்டவனாயிருக்கிறான். அவன் எப்படிப்பட்ட ஒரு வீதிக்குள் வந்திருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியும், அங்கே வந்தால் அவனுக்கு என்ன நேரிடும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவன் ‘அவள் இருக்கும் சந்தை ஒட்டிய தெருவின்’ வழியாய் நடந்துபோகிறான். அவள் யார்? அவள் வேலை என்ன?
‘என் கட்டளைகளைக் காத்துக்கொண்டு பிழைத்திரு’
அந்தப் பெண்ணின் உதடுகள் இனிமையாய் இருக்கின்றன. முகத்தில் நாணமில்லாமல் வார்த்தைகள் நம்பிக்கையோடு வருகின்றன. அந்த வாலிபனை வசீகரிப்பதற்காகவே தன் வார்த்தைகளை கவனமாக எண்ணி பேசுகிறாள். சமாதான பலிகளைச் செலுத்தி அன்றைக்குத்தான் தன் பொருத்தனைகளை நிறைவேற்றியதாக சொல்கிறாள். அவள் தன்னை நீதியுள்ளவளாக காட்டிக்கொண்டு தான் ஆன்மீகத்தில் ஒன்றும் குறைந்தவளல்ல என்பதை மறைமுகமாக சொல்வதுபோல் தெரிகிறது. எருசலேம் ஆலயத்தில் சமாதான பலிகளில் இறைச்சியும் மெல்லிய மாவும் எண்ணெயும் திராட்சரசமும் செலுத்தப்பட்டது. (லேவியராகமம் 19:5, 6; 22:21; எண்ணாகமம் 15:8-10) பலி செலுத்துகிறவர் சமாதான பலிகளிலிருந்து தனக்கும் தன் குடும்பத்துக்கும் வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம் என்பதால், வீட்டில் புசிப்பதற்கும் குடிப்பதற்கும் நிறைய இருப்பதாக அவள் தெரிவிக்கிறாள். குறிப்பு தெளிவாக உள்ளது: வாலிபன் அங்கு வந்து ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம். இவனைத் தேடிக்கொண்டுதான் அவள் வீட்டிலிருந்து வந்திருக்கிறாள். இந்தக் கதையை நம்பிவிட்டால் ஒருவர் எப்படி நெகிழ்ந்து போவார். “அவள் யாராவது மாட்டுவார்களா என்று தேடிக்கொண்டு வந்திருப்பது என்னவோ உண்மைதான், ஆனால் அவள் உண்மையில் இந்த வாலிபனையே தேடி வந்தாளா? இவனைப் போல ஒரு முட்டாள்தான் அவள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவான்” என்று ஒரு பைபிள் கல்விமான் கூறுகிறார்.
தன் உடையினாலும், புகழ்ச்சியான வார்த்தைகளாலும், அவனைத் தொட்டு தழுவியதாலும், உதட்டின் ருசியாலும், அவனை மயக்கிவிட்ட அந்த வெட்கங்கெட்ட ஸ்திரீ அடுத்து அங்கே நறுமணத்தை விவரிக்கிறாள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்து தேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.” (நீதிமொழிகள் 7:16, 17) எகிப்திலிருந்து வந்த வண்ண வஸ்திரங்களால் அவள் தன் மஞ்சத்தை ஜோடித்து வெள்ளைப்போளமும் சந்தனமும் இலவங்கப்பட்டையும் கொண்டு படுக்கைக்கு வாசனை தெளித்திருக்கிறாள்.
“வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்” என்று தொடர்ந்து சொல்கிறாள். இரண்டு பேரும் இன்பமாக இரவு சாப்பாட்டை அனுபவிப்பதற்கு மட்டுமே இது ஒரு அழைப்பாக இல்லை. உடலுறவை அனுபவிக்கலாம் என்றே அவள் அவனை அழைக்கிறாள். வாலிபனுக்கோ அந்த வேண்டுகோள் துணிச்சலானதாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது! கூடுதலாக அவனை இணங்க வைப்பதற்காக அவள் இவ்வாறு கூறுகிறாள்: “புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான். பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான்.” (நீதிமொழிகள் 7:18-20) அவர்களுக்கு எந்த பயமுமில்லை என்று அவள் அடித்துக் கூறுகிறாள். வேலை விஷயமாக அவள் புருஷன் வெளியூர் சென்றிருக்கிறான், இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவன் வரமாட்டான். ஒரு வாலிபனை எவ்வளவு சாமர்த்தியமாக ஏமாற்றிவிடுகிறாள்! “தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.” (நீதிமொழிகள் 7:21) யோசேப்பைப் போன்ற மனவுறுதி படைத்த ஒருவரே இத்தனை கவர்ச்சியாக இருக்கும் வேண்டுகோளை மறுக்க முடியும். (ஆதியாகமம் 39:9, 12) இந்த வாலிபனுக்கு அந்த உறுதி இருக்கிறதா?
‘என் கட்டளைகளைக் காத்துக்கொண்டு பிழைத்திரு’
அந்த அழைப்பை வாலிபனால் மறுக்கவே முடியவில்லை. பகுத்தறிவை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ‘ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோல’ அவள் பின்னே செல்கிறான். விலங்கிடப்பட்ட ஒரு மனிதன் எப்படி தண்டனையைத் தப்பித்துக்கொள்ள முடியாதோ அதே போல அந்த வாலிபனும் பாவத்துக்குள் இழுத்துச் செல்லப்படுகிறான். “அம்பு அவன் ஈரலைப் பிள”க்கும் வரை, அதாவது மரணத்துக்கேதுவாக அவன் காயப்படும்வரை, அவன் அதன் ஆபத்தை உணராதிருக்கிறான். அது சரீர மரணமாக இருக்கலாம்; பாலுறவினால் கடத்தப்படும் நோயினால் ஏற்படும் மரணத்தைக் குறிக்கலாம். காயம் ஆவிக்குரிய மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும்—‘அவன் உயிரே அதில் உட்பட்டிருக்கிறது.’ அவனுடைய முழு வாழ்க்கையும் பாழாகிறது, அவன் கடவுளுக்கு எதிராக பெரும் பாவத்தை செய்துவிடுகிறான். இதன் காரணமாக ஒரு குருவி கண்ணியில் விழத் தீவிரிக்கிறது போல மரணத்தின் பிடிக்குள் விரைந்து செல்கிறான்!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘என் கட்டளைகளைக் காத்துக்கொண்டு பிழைத்திரு’
“அவைகளை [என் கட்டளைகளை] உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்” என்று சாலொமோன் தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 7:3) விரல்கள் எப்போதும் நம் கண்களுக்கு முன்பாக இருக்கின்றன, நம்முடைய வேலைகளைச் செய்வதற்கு அவை மிகவும் அவசியமாக இருக்கின்றன. அதைப்போலவே, பைபிள் நியமங்களின் அடிப்படையில் வளர்க்கப்பட்டதால் அல்லது பைபிள் அறிவை பெற்றுக்கொண்டதால் கற்ற பாடங்கள் நாம் செய்யும் அனைத்திலும் எப்போதும் நமக்கு நினைப்பூட்டுதலாக இருந்து நம்மை வழிநடத்த வேண்டும். அவற்றை நம்முடைய இருதய பலகையில் எழுதிக்கொண்டு நம் இயல்பின் பாகமாகவே ஆக்கிக்கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 8
இயேசுவின் ஞானமான வார்த்தைகளைக் கேளுங்கள்
“தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன்”
7 வசனம் 22-ல் ஞானம் இவ்வாறு சொல்கிறது: “யெகோவா என்னைத்தான் முதன்முதலில் உருவாக்கினார். படைப்புகளிலேயே முதல் படைப்பாக என்னைப் பல காலங்களுக்கு முன்னால் உருவாக்கினார்.” இந்த வசனம் வெறுமனே ஞானத்தைக் குறிப்பதில்லை; ஏனென்றால், அந்தப் பண்பு ‘படைக்கப்படவில்லை.’ அதற்கு ஒரு தொடக்கம் இருக்கவில்லை; காரணம், யெகோவாவுக்குத் தொடக்கமில்லை, அவர் எப்போதுமே ஞானம் பொருந்தியவராய் இருந்து வந்திருக்கிறார். (சங்கீதம் 90:2) கடவுளுடைய மகனோ “படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிறார். ஆகவே அவர் படைக்கப்பட்டார், மற்ற எல்லாவற்றிற்கும் முன்னரே படைக்கப்பட்டார். (கொலோசெயர் 1:15) நீதிமொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, வானமும் பூமியும் உண்டாக்கப்படுவதற்கு முன்பே மகன் இருந்தார். அந்த மகன் கடவுளுடைய வார்த்தையாக, அதாவது சார்பு பேச்சாளராக, இருப்பதால் யெகோவாவுடைய ஞானத்தின் மொத்த வடிவமாக விவரிக்கப்பட்டிருக்கிறார்.—யோவான் 1:1.
“தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன்”
8 கடவுளுடைய மகன் இந்தப் பூமிக்கு வருவதற்கு முன் யுகா யுகங்களாக என்ன செய்துகொண்டிருந்தார்? அவர் கடவுளுக்கு அருகே “கைதேர்ந்த கலைஞனாக” இருந்தார் என 30-வது வசனம் சொல்கிறது. அதன் அர்த்தம் என்ன? கொலோசெயர் 1:16 விளக்குகிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, . . . ஆகிய எல்லாம் . . . அவர் மூலம்தான் படைக்கப்பட்டன. எல்லாமே அவர் வழியாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன.” படைப்பாளரான யெகோவா, கைதேர்ந்த கலைஞனான தமது மகனின் மூலம் எல்லாவற்றையும் படைத்தார். ஆம், பரலோகத்திலுள்ள தேவதூதர்கள்... பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சம்... அதிலுள்ள பூமி... அந்தப் பூமியிலுள்ள வகைவகையான செடிகொடிகள்... விலங்கினங்கள்... அதோடு, பூமிக்குரிய படைப்புகளில் மணிமகுடமாய் விளங்கும் மனிதர்கள்... என எல்லாவற்றையும் தம் மகன் மூலமாகவே படைத்தார். தகப்பனும் மகனும் சேர்ந்து செயல்பட்ட விதத்தை, ஒரு கட்டிடக் கலைஞரும் அதைக் கட்டுபவரும் சேர்ந்து செயல்படும் விதத்திற்கு ஒப்பிடலாம். கட்டுபவர், கட்டிடக் கலைஞரின் புதுமையான வடிவமைப்புகளுக்கு உயிர்கொடுத்து கட்டிடத்தை எழுப்புகிறார். நம்மைச் சுற்றியுள்ள படைப்புகளைப் பார்த்து நாம் பிரமிக்கும்போது, உண்மையில் அவற்றை வடிவமைத்த மாபெரும் சிற்பிக்கே புகழ் சேர்க்கிறோம். (சங்கீதம் 19:1) அதேசமயத்தில், படைப்பாளரும் அவரது ‘கைதேர்ந்த கலைஞனும்’ சந்தோஷத்துடன் நெடுங்காலமாய் சேர்ந்து உழைத்ததை நினைத்துப் பார்க்கவும் நாம் தூண்டப்படுகிறோம்.
9 அபூரண மனிதர்கள் இருவர் சேர்ந்து வேலை செய்கையில் ஒருவரையொருவர் அனுசரித்துப்போவது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் இடையே அப்படியல்ல! கோடானுகோடி ஆண்டுகள் மகன் தமது தகப்பனுடன் வேலை செய்தார்; “அவர்முன் எப்போதும் சந்தோஷமாக இருந்தேன்” என்று இயேசு சொல்வதாக பைபிள் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 8:30) தகப்பனுடன் இருப்பது மகனுக்குப் பேரானந்தத்தைத் தந்தது, தகப்பனுக்கும் அப்படியே. அதனால்தான், காலங்கள் உருண்டோடுகையில், மகன் தம் தகப்பனின் குணங்களை அப்படியே பின்பற்றி, அவரைப் போலவே ஆனார். தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே முறிக்க முடியாத பந்தம் ஏற்பட்டதில் ஆச்சரியமே இல்லை! எனவே, இந்தப் பிரபஞ்சத்தில் அவர்களுடைய பந்தமே நெடுங்கால பந்தம், உறுதியான பந்தம் என்று சொன்னால் மிகையல்ல.
w09 4/15 பக். 31 பாரா 14
பெரிய தாவீதும் பெரிய சாலொமோனுமான இயேசுவை மதித்துணருதல்
14 சாலொமோனுடைய ஞானத்தை விஞ்சிய மனிதர் ஒரே ஒருவர்தான். அவரே இயேசு கிறிஸ்து; அவர் தம்மை “சாலொமோனைவிடப் பெரியவர்” என்பதாகக் குறிப்பிட்டார். (மத். 12:42) அவர் ‘முடிவில்லா வாழ்வைத் தரும் வார்த்தைகளை’ பேசினார். (யோவா. 6:68) உதாரணமாக, சாலொமோன் சொன்ன நீதிமொழிகள் சிலவற்றின் நியமங்களை இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் விரிவுபடுத்தினார், கூடுதலான நியமங்களையும் அளித்தார். சாலொமோன், யெகோவாவை வழிபடுவோருக்குச் சந்தோஷத்தைத் தரும் பல விஷயங்களை விவரித்தார். (நீதி. 3:13; 8:32, 33; 14:21; 16:20) இயேசு, யெகோவாவின் வழிபாட்டிலிருந்தும் அவருடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்திலிருந்தும் கிடைக்கும் சந்தோஷமே உண்மையான சந்தோஷம் என்பதை வலியுறுத்தினார். “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுக்குரியது” என்று அவர் சொன்னார். (மத். 5:3) இயேசுவின் போதனைகளிலுள்ள நியமங்களைப் பின்பற்றுவோர் ‘ஜீவ ஊற்றாகிய’ யெகோவாவிடம் நெருங்கி வருகிறார்கள். (சங். 36:9; நீதி. 22:11; மத். 5:8) கிறிஸ்து ‘கடவுளுடைய ஞானத்தின்’ பிரதிபிம்பமாக இருக்கிறார். (1 கொ. 1:24, 30, 31) மேசியானிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, ‘ஞானத்தை அருளும்’ கடவுளுடைய சக்தியைப் பெற்றிருக்கிறார்.—ஏசா. 11:2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘ஞானம் உங்களை அழைக்கிறது!’ அது உங்களுக்குக் கேட்கிறதா?
▪ த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது, “சரித்திரத்திலேயே பைபிள்தான் அதிகமாக விநியோகிக்கப்படும் புத்தகம். எந்தவொரு புத்தகத்தையும்விட பைபிள்தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒரே மொழியில் வித்தியாசமான மொழிபெயர்ப்புகளும் (Versions) இருக்கின்றன.” முழுமையாகவோ பகுதியாகவோ பைபிள் 2,600 மொழிகளில் கிடைக்கிறது. உலகத்திலுள்ள 90 சதவீத மக்களுக்கு அது கிடைக்கிறது.
▪ அதேசமயம் ஞானம் நம்மை ‘அழைக்கிறது.’ எப்படி? மத்தேயு 24:14 சொல்கிறது, “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு [இந்த பொல்லாத உலகத்திற்கு] முடிவு வரும்.” இந்த ‘நற்செய்தியை’ எல்லோருக்கும் சொல்வதன் மூலம் ஞானம் உங்களை ‘அழைக்கிறது.’
ஏப்ரல் 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 9
ஞானமுள்ளவர்களாக இருங்கள், கேலி செய்கிறவர்களாக இருக்காதீர்கள்
‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் கேள்’
4 யாராவது நமக்கு நேரடியாக ஆலோசனை கொடுக்கும்போது நமக்கு வருத்தமாக இருக்கலாம். அதை ஏற்றுக்கொள்வதும் கஷ்டமாக இருக்கலாம். ஏன்? நாம் எல்லாருமே குறை உள்ளவர்கள் என்பதை ஒத்துக்கொண்டாலும் நம்மிடம் இருக்கிற குறையை ஒருவர் சுட்டிக்காட்டி அதற்கு ஆலோசனை கொடுக்கும்போது அதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். (பிரசங்கி 7:9-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, நாம் நம்மை நியாயப்படுத்துவோம். ஆலோசனை கொடுத்தவர் எதையோ மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறார், அவர் பேசிய விதமும் சரியில்லை என்றெல்லாம் காரணம் சொல்வோம். அவரைக் குறை சொல்லவும் ஆரம்பித்துவிடுவோம். ‘அவர் மட்டும் ஒழுங்கா? எனக்கு ஆலோசனை கொடுக்க அவருக்கு என்ன தகுதி இருக்கு?’ என்று கேட்போம். அதோடு, அவர் சொன்ன ஆலோசனை நமக்குப் பிடிக்காவிட்டால் அதைத் தட்டிக்கழித்துவிடுவோம். இல்லையென்றால், நமக்கு ஏற்ற விதமாக யார் பேசுவாரோ அவரிடம் போய்க் கேட்போம்.
‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் கேள்’
12 ஆலோசனையை ஏற்றுக்கொள்ள நமக்கு எது உதவும்? நாம் பாவம் செய்பவர்கள், சிலசமயம் முட்டாள்தனமாக நடந்துகொள்வோம் என்பதை ஞாபகம் வைத்து மனத்தாழ்மையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே பார்த்த விதமாக, யோபு முதலில் யோசிக்காமல் பேசிவிட்டார். பின்பு, தான் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொண்டார். அதனால், யெகோவாவும் அவரை ஆசீர்வதித்தார். யோபுவால் தன்னை எப்படி மாற்றிக்கொள்ள முடிந்தது? ஏனென்றால், அவர் மனத்தாழ்மையாக இருந்தார். தன்னைவிட எலிகூ வயதில் சிறியவராக இருந்தாலும், அவர் கொடுத்த ஆலோசனையை யோபு ஏற்றுக்கொண்டதால் தனக்கு மனத்தாழ்மை இருப்பதைக் காட்டினார். (யோபு 32:6, 7) ஒருவேளை, ஒருவர் கொடுக்கும் ஆலோசனை நமக்குப் பொருந்தாத மாதிரி தெரிந்தாலும், அவர் நம்மைவிட வயதில் சிறியவராக இருந்தாலும், நமக்கு மனத்தாழ்மை இருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம். கனடாவில் இருக்கிற ஒரு மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “மத்தவங்க நம்மள பார்க்கிற மாதிரி நாம நம்மள பார்க்கறது இல்ல. அப்ப யாருமே நமக்கு ஆலோசனை கொடுக்கலனா நாம எப்படி முன்னேறுவோம்?” கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் நன்றாக ஊழியம் செய்வதற்கும் நாம் எல்லாருமே முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.—சங்கீதம் 141:5-ஐ வாசியுங்கள்.
13 ஆலோசனை கிடைக்கும்போது அதை கடவுளுடைய அன்புக்கு அடையாளமாக பாருங்கள். யெகோவா நமக்கு சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (நீதி. 4:20-22) பைபிள், பைபிள் பிரசுரங்கள், அல்லது அனுபவமுள்ள சகோதர சகோதரிகள் மூலமாக யெகோவா நமக்கு ஆலோசனை கொடுக்கும்போது நம்மேல் வைத்திருக்கிற அன்பைக் காட்டுகிறார். “நம்முடைய நன்மைக்காக நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார்” என்று எபிரெயர் 12:9, 10 சொல்கிறது.
14 என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள், எப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்காதீர்கள். சிலசமயம் நமக்கு ஆலோசனை கொடுக்கப்பட்ட விதம் சரியில்லை என்று நாம் நினைக்கலாம். சொல்லப்போனால், ஆலோசனை கொடுப்பவர்களும், அதைச் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். (கலா. 6:1) நமக்கு ஆலோசனை கொடுத்தவர் அதை இன்னும் நல்ல விதமாகச் சொல்லியிருக்கலாம் என்று நமக்குத் தோன்றினாலும், ஆலோசனை எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதைப் பார்க்காமல் என்ன ஆலோசனை கொடுக்கப்பட்டது என்பதைப் பார்ப்பது நல்லது. அதற்காக, நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘அவங்க ஆலோசனை சொன்ன விதம் எனக்கு பிடிக்கலதான். ஆனா அதிலிருந்து நான் ஏதாவது கத்துக்க முடியுமா? ஆலோசனை சொன்னவருடைய குறைகள பார்க்காம அவர் சொன்ன விஷயம் எனக்கு எப்படி பிரயோஜனமா இருக்கும்னு பாக்கறேனா?’ என்ன ஆலோசனை கிடைத்தாலும், அது எப்படி நமக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று யோசிக்கும்போது ஞானமுள்ளவர்களாக இருப்போம்.—நீதி. 15:31.
‘ஞானத்தால் நம் நாட்கள் பெருகும்’
கடிந்துகொள்ளப்படுகையில் ஞானமுள்ளவர், பரியாசக்காரருக்கு நேர் எதிர்மாறாக நடந்துகொள்கிறார். சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்.” (நீதிமொழிகள் 9:8ஆ, 9அ) “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என்பது ஞானமுள்ளவருக்குத் தெரியும். (எபிரெயர் 12:11) புத்திமதி வேதனையளிப்பதாக தோன்றினாலும் அதை ஏற்றுக்கொள்வது நம்மை ஞானமுள்ளவர்களாக ஆக்குமென்றால் எதிர்ப்பு தெரிவிக்காமல் அதை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?
“நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்” என்று ஞானமுள்ள அரசன் தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 9:9ஆ) அறிவை வளர்க்க தேவைப்படாத அளவுக்கு யாருமே பெரும் ஞானியாக அல்லது அதிக வயதானவராக இருக்க முடியாது. தள்ளாடும் வயதிலுள்ளவர்களும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதைக் காண்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! கற்றுக்கொள்ள எப்போதும் மனமுள்ளவராக, மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள நாமும் முயலுவோமாக.
‘ஞானத்தால் நம் நாட்கள் பெருகும்’
ஞானத்தை சம்பாதிக்க மும்முரமாக முயற்சி செய்வது நம்முடைய தனிப்பட்ட பொறுப்பாகும். இந்த உண்மையை வலியுறுத்தி சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய்.” (நீதிமொழிகள் 9:12) ஞானி தன் ஞானத்தால் பயனடைகிறான், பரியாசக்காரன் தன்னுடைய துன்பங்களுக்குத் தானே காரணமாகிறான். உண்மையில், நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுக்கிறோம். அப்படியென்றால் ‘நம் செவியை ஞானத்துக்குச் சாய்ப்போமாக.’—நீதிமொழிகள் 2:1.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
9:17—“திருட்டுத் தண்ணீர்” என்பது என்ன, அது ஏன் ‘தித்திக்கிறது’? மணவாழ்வில் பாலியல் நெருக்கத்தை அனுபவிப்பதை, கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட புத்துணர்ச்சி அளிக்கும் தண்ணீரைக் குடிப்பதோடு பைபிள் ஒப்பிடுகிறது. ஆகவே, திருட்டுத் தண்ணீர் என்பது கள்ளத்தனமான பாலியல் தொடர்புகளையே குறிக்கிறது. (நீதிமொழிகள் 5:15-17) கள்ளத்தனமாக பாலியல் தொடர்பு கொள்ளும்போது அந்தத் தண்ணீர் அவர்களுக்குத் தித்திப்பதுபோல் தெரிகிறது.
ஏப்ரல் 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 10
உண்மையிலேயே செல்வந்தராக இருப்பது எப்படி?
‘நீதிமானுக்கு ஆசீர்வாதங்கள் கிட்டும்’
நீதிமான் மற்றொரு விதத்திலும் ஆசீர்வதிக்கப்படுகிறான். “சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். கோடை காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக் காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.”—நீதிமொழிகள் 10:4, 5.
அறுப்பு சமயத்தில் வேலை செய்பவர்களுக்கே ராஜாவின் வார்த்தைகள் அதிக பொருத்தமானவை. அறுப்பு காலம் தூங்குவதற்கான காலமல்ல. அது சுறுசுறுப்பாகவும் பல மணிநேரமும் உழைக்க வேண்டிய காலம். அது அவசரமாய் செயல்படுவதற்கான காலம்.
பயிர்களை அல்ல, ஜனங்களை அறுவடை செய்வதை மனதில் வைத்தே இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் [யெகோவா தேவன்] தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத்தேயு 9:35-38) 2000-மாவது வருடத்தில் இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பிற்கு 1.4 கோடிக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இது யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். ஆக, ‘வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருப்பதை’ எவராவது மறுக்க முடியுமா? (யோவான் 4:35) அதிகமான வேலையாட்கள் வேண்டும் என உண்மை வணக்கத்தார் எஜமானிடம் கேட்கின்றனர். அதே சமயம், சீஷராக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவதன் மூலம் தங்களுடைய ஜெபங்களுக்கு இசைவாக செயல்படுகின்றனர். (மத்தேயு 28:19, 20) யெகோவாவும் அவர்களுடைய முயற்சிகளை பன்மடங்கு ஆசீர்வதித்திருக்கிறார்! 2000-மாவது ஊழிய ஆண்டில் 2,80,000-த்திற்கும் அதிகமானோர் முழுக்காட்டுதல் பெற்றனர். இவர்களும் கடவுளுடைய வார்த்தையின் போதகராவதற்கு முயலுகின்றனர். சீஷராக்கும் வேலையில் முழுமையாக பங்கு பெறுவதன் மூலம் இந்த அறுப்பின் காலத்தில் திருப்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிப்போமாக.
‘செம்மையான பாதையில்’ நடவுங்கள்
நீதி எவ்வளவு முக்கியம் என்பதை சாலொமோன் சுட்டிக்காட்டுகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்:“ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும். நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.”—நீதிமொழிகள் 10:15, 16.
அரணான பட்டணம் அதில் வசிப்பவர்களுக்கு ஓரளவு பாதுகாப்பை அளிப்பது போலவே, வாழ்க்கையின் நிச்சயமற்ற சில சந்தர்ப்பங்களில் செல்வம் பாதுகாப்பை அளிக்கலாம். எதிர்பாராத சில சம்பவங்கள் நேரிடுகையில் ஏழ்மை, நிலைமையை மிக சீர்குலைத்துவிடும். (பிரசங்கி 7:12) ஆனால் செல்வத்தில் செழித்தாலும், வறுமையில் வாடினாலும் இரண்டிலுமே ஆபத்து இருப்பதை ஞானமுள்ள ராஜா குறிப்பால் உணர்த்துவதாகவும் இருக்கலாம். ஒரு பணக்காரன், மதிப்புமிக்க தன் பொருட்கள் “உயர்ந்த மதில்போலி”ருப்பதாக எண்ணி தன்னுடைய செல்வத்தையே முழுவதுமாக நம்பியிருக்கலாம். (நீதிமொழிகள் 18:11) அதேவிதமாக பரம ஏழையும் வறுமையால் தன் எதிர்காலமே இருண்டுவிட்டதாக தப்புக்கணக்குப் போடலாம். இவ்வாறு இரு தரப்பினருமே கடவுளிடம் நல்ல பெயரை எடுக்க தவறிவிடலாம்.
it-1-E பக். 340
ஆசீர்வாதம்
யெகோவா மனிதர்களை ஆசீர்வதிக்கிறார். “யெகோவா தரும் ஆசீர்வாதம்தான் ஒருவருக்குக் கிடைக்கும் சொத்து. அதனோடு சேர்த்து அவர் எந்த வேதனையையும் கொடுக்க மாட்டார்.” (நீதி 10:22) யெகோவாவின் அங்கீகாரம் யாருக்கு இருக்கிறதோ, அவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். எப்படி? அவர்களைப் பாதுகாக்கிறார், வழிநடத்துகிறார், வெற்றி பெற உதவுகிறார், தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார். அதனால், அவர்கள் ஏராளமான நன்மைகளை அனுபவிக்கிறார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உத்தமத்தில் நடப்பதால் வரும் சந்தோஷங்கள்
18 ‘யெகோவாவின் ஆசீர்வாதம்’—இதுதான் அவரது மக்களை ஆன்மீக ரீதியில் செழித்தோங்கச் செய்திருக்கிறது. “அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்ற உறுதியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (நீதிமொழிகள் 10:22) அப்படியென்றால், கடவுளுக்கு உத்தமமாக இருப்பவர்களில் அநேகருக்கு வேதனையைத் தரும் சோதனைகளும் கஷ்டங்களும் ஏன் வருகின்றன? வலியும் வேதனையும் முக்கியமான மூன்று காரணங்களால் வருகின்றன: (1) நம்முடைய பாவமுள்ள மனச்சாய்வு (ஆதியாகமம் 6:5; 8:21; யாக்கோபு 1:14, 15), (2) சாத்தான் மற்றும் அவனுடைய பேய்கள் (எபேசியர் 6:11, 12), (3) பொல்லாத உலகம் (யோவான் 15:19). யெகோவா துன்பத்தை அனுமதிக்கிறார், ஆனால் அவர் எவ்விதத்திலும் துன்பத்திற்குக் காரணர் அல்ல. சொல்லப்போனால், “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது.” (யாக்கோபு 1:17) யெகோவாவின் ஆசீர்வாதங்கள் வேதனையைத் தருவதே இல்லை.
ஏப்ரல் 28–மே 4
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 11
சொல்லாதீர்கள்!
உத்தமம் செம்மையானவர்களை நடத்தும்
நேர்மையானவர்களின் உத்தமமும் பொல்லாதவர்களின் பொல்லாப்பும் மற்றவர்கள்மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. “மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்” என இஸ்ரவேலின் ராஜா சொல்கிறார். (நீதிமொழிகள் 11:9) அவதூறு, தீங்கிழைக்கும் கிசுகிசுப்பு, ஆபாச பேச்சு, வெட்டிப் பேச்சு போன்றவை மற்றவர்களுக்கு கெடுதல் செய்யும் என்பதை யார்தான் மறுப்பார்கள்? நீதிமானோ சுத்தமான பேச்சை பேசுகிறார், நன்கு சிந்தித்து பேசுகிறார், பரிவோடு பேசுகிறார். அறிவினால் அவர் தப்புகிறார்; ஏனென்றால், குற்றப்படுத்துகிறவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதை நிரூபிப்பதற்குத் தேவைப்படும் அத்தாட்சியை அவரது உத்தமம் அளிக்கிறது.
உத்தமம் செம்மையானவர்களை நடத்தும்
நேர்மையான பட்டணவாசிகள் சமாதானத்தையும் சமூக நலனையும் முன்னேற்றுவித்து சமுதாயத்திலுள்ள மற்றவர்களை கட்டியெழுப்புகின்றனர். இவ்வாறு பட்டணம் நிலைபெற்றோங்குகிறது—செழித்தோங்குகிறது. அவதூறான, புண்படுத்தும், தவறான விஷயங்களை பேசுபவர்கள் சந்தோஷத்தையும் ஐக்கியத்தையும் குலைத்து கலக்கத்தையும் பிரச்சினையையும் ஏற்படுத்தலாம். அதுவும் இவர்கள் பெரும் புள்ளிகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம். அப்படிப்பட்ட பட்டணம் ஒழுங்கற்று, சீர்கெட்டு, ஒழுக்க ரீதியிலும் ஒருவேளை பொருளாதார ரீதியிலும்கூட மோசமடைகிறது.
நீதிமொழிகள் 11:11-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நியமம், பட்டணம் போன்று விளங்கும் சபைகளில் கூட்டுறவு கொள்ளும் யெகோவாவின் மக்களுக்கும் அவ்விதமாகவே பொருந்துகிறது. ஆவிக்குரிய மக்களின்—உத்தமத்தால் நடத்தப்படும் நேர்மையானவர்களின்—செல்வாக்குள்ள ஒரு சபை, கடவுளுக்கு மகிமை சேர்க்கும் சந்தோஷமான, சுறுசுறுப்பான, உதவியளிக்கிற மக்களின் ஒரு தொகுதியாக இருக்கிறது. யெகோவா அந்த சபையை ஆசீர்வதிக்கிறார், அது ஆவிக்குரிய விதத்தில் செழித்தோங்குகிறது. காரியங்கள் செய்யப்படும் விதத்தைக் குறித்து இழித்தும் பழித்தும் பேசும் திருப்தியற்ற சிலர், “விஷ வேர்” போன்று இருக்கிறார்கள்; இந்த விஷ வேர் படர்ந்து சென்று ஆரம்பத்தில் பாதிக்கப்படாமல் ஒதுங்கி இருந்தவர்களிலும் நஞ்சேற்றும். (எபிரெயர் 12:15, NW) அப்படிப்பட்டவர்கள் பெரும் அதிகாரத்தையும் உயர்ந்த அந்தஸ்தையும் கைப்பற்ற துடிக்கிறார்கள். சபையிலோ மூப்பர்களின் மத்தியிலோ அநீதி, இன தப்பெண்ணம், அல்லது அது போன்றவை இருப்பதாக புரளியைக் கிளப்பிவிடுகிறார்கள். அவர்களது வாய் நிச்சயமாகவே சபையில் பிரிவினைகளை ஏற்படுத்தலாம். நாம் அவர்கள் பேச்சிற்கு செவிசாய்க்காமல், சபையின் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் முன்னேற்றுவிக்கும் ஆவிக்குரிய நபர்களாக இருக்க கடினமாய் முயல வேண்டாமா?
உத்தமம் செம்மையானவர்களை நடத்தும்
விவேகம் இல்லாதவன் அல்லது “மதிகெட்டவன்” எப்பேர்ப்பட்ட தீங்கை ஏற்படுத்துகிறான்! புறங்கூறும் அல்லது அவதூறு பேசும் அளவுக்கு அவன் வம்புப் பேச்சை வளர்க்கலாம். நியமிக்கப்பட்ட மூப்பர்கள் இப்படிப்பட்ட தகாத செல்வாக்கிற்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும். விவேகியோ, ‘மதிகெட்டவனுக்கு’ நேர்மாறாக, எப்போது மௌனமாயிருப்பது என்பதை அறிந்திருக்கிறார். நம்பி சொல்லப்பட்ட இரகசியத்தை வெளியில் சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்கிறார். விவேகமுள்ள நபர், நாவை அடக்காவிட்டால் மிகுந்த தீங்கு விளையும் என்பதை அறிந்து ‘ஆவியில் உண்மையுள்ளவராக’ இருக்கிறார். தன் சக விசுவாசிகளிடம் உண்மையுடன் நடந்துகொள்கிறார்; அவர்களுக்கே ஆபத்தாய் முடியும் இரகசியங்களை வெளிப்படுத்த மாட்டார். உத்தமத்தைக் காக்கும் இப்படிப்பட்டவர்கள் சபைக்கு எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
g20.1 பக். 11, பெட்டி
மன அழுத்தத்தைச் சமாளிக்க டிப்ஸ்
“மன அழுத்தத்தை விரட்டும் கருணை”
“கருணையுள்ளவன் தனக்கு நன்மை செய்துகொள்கிறான். ஆனால், கொடூரமானவன் தனக்குக் கஷ்டத்தை தேடிக்கொள்கிறான்.”—நீதிமொழிகள் 11:17.
ஓவர்கமிங் ஸ்ட்ரெஸ் என்ற புத்தகத்திலுள்ள ஒரு அதிகாரத்தின் தலைப்பு, “மன அழுத்தத்தை விரட்டும் கருணை.” மற்றவர்களிடம் கருணையோடு நடந்துகொள்வது ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க உதவும் என்பது அந்தப் புத்தகத்தின் ஆசிரியரான டாக்டர் டிம் கான்டெஃபெரின் கருத்து. ஆனால், கல்நெஞ்சக்காரராக இருக்கும் ஒருவருக்குச் சந்தோஷம் கிடைப்பதில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட ஒருவரை யாருக்கும் பிடிக்காது, அவரோடு யாரும் ஒட்டவும் மாட்டார்கள்.
நம்மீதே நாம் கருணை காட்ட வேண்டும். அதுவும்கூட மன அழுத்தத்திலிருந்து விடுபட நமக்கு உதவும். உதாரணத்துக்கு, நம்மால் செய்ய முடியாத ஒன்றை, செய்தே ஆக வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அதேசமயத்தில் நம்மை நாமே குறைவாக எடைபோடவோ மட்டம் தட்டவோ கூடாது. “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு சொன்னார்.—மாற்கு 12:31.