தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 30, 2013-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழேயுள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் பள்ளிக்காகத் தயாரிக்கும்போது ஆராய்ச்சி செய்ய அது உதவும்.
1. உலக அதிகாரிகளிடம் சாந்த குணத்தைக் காட்ட கிறிஸ்தவர்களுக்கு எது உதவும்? (தீத். 3:2) [நவ. 4, காவற்கோபுரம் 03 4/1 பக். 25 பாரா. 18-19]
2. பிலேமோன் 4, 5, 7 வசனங்களில் பவுல் பிலேமோனுக்கு சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [நவ. 4, காவற்கோபுரம் 08 10/15 பக். 31, பாரா. 1, 2; காவற்கோபுரம் 92 7/15 பக். 25 பாரா 2]
3. இன்று கிறிஸ்தவர்கள் எப்படிக் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்? (எபி. 4:9-11) [நவ. 11, காவற்கோபுரம் 11 7/15 பக். 28 பாரா. 16, 17]
4. “நீதியை” நிலைநாட்டிய சாமுவேல், நீதிபதிகள் மற்றும் தீர்க்கதரிசிகளிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்? (எபி. 11:32, 33) [நவ. 18, காவற்கோபுரம் 11 7/1 பக். 17 பாரா. 5, 6]
5. ‘ஞானம் முதலாவது சுத்தமானதாகவும், பின்பு சமாதானம் பண்ணுவதாகவும்’ இருக்கிறது என்று யாக்கோபு சொன்னதன் அர்த்தம் என்ன? (யாக். 3:17) [நவ. 25, காவற்கோபுரம் 11 8/15 பக். 30-31 பாரா 15]
6. “மரித்தோரான” யாருக்கு “சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது”? (1 பே. 4:6) [டிச. 2, காவற்கோபுரம் 08 11/15 பக். 21 பாரா 8]
7. 1 யோவான் 2:7, 8-ல், “பழைய” கட்டளை “புதிய” கட்டளை என யோவான் எதைக் குறிக்கிறார்? [டிச. 9, காவற்கோபுரம் 08 12/15 பக். 27 பாரா 6]
8. “அல்பாவும், ஓமெகாவும்,” ‘ஆதியும் அந்தமும்’ யாரைக் குறிக்கின்றன? (வெளி. 1:8, 17) [டிச. 16, காவற்கோபுரம் 09 1/15 பக். 30 பாரா 6]
9. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் என்ன இரண்டு அர்த்தங்களில் ‘முத்திரையிடப்படுகின்றனர்’? (வெளி. 7:3) [டிச. 23, காவற்கோபுரம் 07 1/1 பக். 31 பாரா 2]
10. எதிர்கால ஆசீர்வாதங்கள் நிறைவேறுமென்று நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்? இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்? (வெளி. 21:5, 6) [டிச. 30, வெளிப்படுத்துதல் பக். 304 பாரா 9]