தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
பிப்ரவரி 24, 2014-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
எதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும்படி ஏவாளைச் சாத்தான் தூண்டினான்? தடைசெய்யப்பட்ட பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் ஏவாள் எதைக் காட்டிவிட்டாள்? (ஆதி. 3:6) [ஜன. 6, காவற்கோபுரம் 11 5/15 பக். 16-17 பாரா 5]
உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள ஆபேலுக்கு எது உதவியிருக்கலாம்? இதன் பலன் என்ன? (ஆதி. 4:4, 5; எபி. 11:4) [ஜன. 6, காவற்கோபுரம் 13 1/1 பக். 12 பாரா 3; பக். 14 பாரா. 4-5]
சுத்தமான மிருகங்கள், சுத்தமல்லாத மிருகங்கள் என எதன் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டன? (ஆதி. 7:2) [ஜன. 13, காவற்கோபுரம் 04 1/1 பக். 29 பாரா 7]
ஆதியாகமம் 19:14-17, 26-ல் உள்ள லோத்து மற்றும் அவரது மனைவியைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்? [ஜன. 27, காவற்கோபுரம் 03 1/1 பக். 16-17 பாரா 20]
ஈசாக்கின் சந்ததியில்தான் வாரிசு வருவார் என்ற வாக்குறுதியிலும் உயிர்த்தெழுதலிலும் விசுவாசம் இருப்பதை ஆபிரகாம் எப்படிக் காட்டினார்? (ஆதி. 22:1-18) [பிப். 3, காவற்கோபுரம் 09 4/1 பக். 15 பாரா 4]
ஆதியாகமம் 25:23-ல் உள்ள “மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” என்ற தீர்க்கதரிசனத்திலிருந்து என்ன உண்மையைத் தெரிந்துகொள்கிறோம்? [பிப். 10, காவற்கோபுரம் 03 10/15 பக். 29 பாரா 2]
‘ஏணியைக்’ குறித்து யாக்கோபு கண்ட சொப்பனத்தின் அர்த்தம் என்ன? (ஆதி. 28:12, 13) [பிப். 10, காவற்கோபுரம் 04 1/15 பக். 28 பாரா 6]
தூதாயீம் கனிகளுக்காக தன் கணவரோடு உடலுறவு கொள்ளும் வாய்ப்பை ராகேல் ஏன் விட்டுக்கொடுத்தாள்? (ஆதி. 30:14, 15) [பிப். 17, காவற்கோபுரம் 04 1/15 பக். 28 பாரா 7]
போராடி ஆசீர்வாதத்தைப் பெற்ற யாக்கோபை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (ஆதி. 32:24-29) [பிப். 24, காவற்கோபுரம் 04 1/15 பக். 28 பாரா 9]
தீனாளுக்கு வந்ததைப் போன்ற பின்விளைவுகள் நமக்கு ஏற்படாமலிருக்க நாம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்ன? (ஆதி. 34:1, 2) [பிப். 24, காவற்கோபுரம் 01 8/1 பக். 20-21]