பிப்ரவரி 24-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 69; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 10 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 32-35 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
8 நிமி: “மார்ச் 22-லிருந்து நினைவுநாள் அழைப்பிதழை விநியோகிப்போம்.” ஊழியக் கண்காணியின் பேச்சு. சபையாருக்கு அழைப்பிதழைக் கொடுத்து அதிலுள்ள தகவலைச் சிந்தியுங்கள். மூப்பர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலிருந்து பொருத்தமான குறிப்புகளைச் சொல்லுங்கள். அழைப்பிதழை பிராந்தியத்தில் கொடுத்து முடிப்பதற்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைச் சொல்லுங்கள்.
22 நிமி: “தேடிக் கண்டுபிடித்துப் பிரசங்கியுங்கள்.” கேள்வி-பதில். கட்டுரையில் உள்ள தகவலை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று சொல்லுங்கள். உங்கள் சபையில் வேறொரு மொழி தொகுதி இருந்தால் அல்லது உங்கள் மொழியைப் பேசுகிற ஆட்களை நீங்கள் தேட வேண்டியிருந்தால் பாரா 5-ஐ சிந்திக்கையில் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். தேடும்போது என்ன சொல்லலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 96; ஜெபம்