தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 27, 2015-ல் ஆரம்பிக்கிற வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழே உள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் பள்ளிக்காக தயாரிக்கும்போது ஆராய்ச்சி செய்ய அது உதவும்.
அன்புமாறா கருணை என்றால் என்ன, சக கிறிஸ்தவர்களிடம் இந்த குணத்தை நாம் எப்படி காட்டலாம்? (ரூத் 1:16, 17) [மார்ச் 2, w10 8/15 பக். 21, 24 பாரா. 3, 16]
“குணசாலி” என்ற பெயர் ரூத்துக்கு எப்படி கிடைத்தது? (ரூத் 3:11) [மார்ச் 2, w05 3/1 பக். 28 பாரா 6]
நமக்கு பிரச்சினைகள் வரும்போது அன்னாளின் உதாரணத்தை பற்றி யோசித்து பார்ப்பது ஏன் நல்லது? (1 சா. 1:16-18) [மார்ச் 9, w07 3/15 பக். 16 பாரா. 4-5]
இளம் சாமுவேல் யெகோவாவின் ‘சந்நிதியில் வளர்ந்த’ சமயத்தில் ஏலியின் மகன்களை போல் நடக்காமல் இருக்க அவருக்கு எது உதவியது? (1 சா. 2:21) [மார்ச் 9, w11 4/1 பக். 16 பாரா. 2-3]
சிலர் சவுலின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, அவர் முட்டாள்தனமாக நடந்துகொள்ளவில்லை. இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (1 சா. 10:22, 27) [மார்ச் 23, w05 3/15 பக். 23 பாரா 1]
யெகோவாவுக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக அவருக்கு பலி செலுத்தினால் போதும் என்று சவுல் நினைத்தார். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (1 சா. 15:22, 23) [மார்ச் 30, w07 6/15 பக். 26 பாரா. 3-4]
யெகோவாவுக்கு நம்மை பற்றி எந்தளவு தெரியும்? (1 சா. 16:7) [ஏப். 6, w09 11/15 பக். 5 பாரா 13]
நீதிமொழிகள் 1:4-ல் சொல்லியிருக்கிறபடி, கஷ்டங்கள் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்? (1 சா. 21:12, 13) [ஏப். 13, w05 3/15 பக். 24 பாரா 5]
தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் உணவு கொடுத்து அனுப்பியதால் அபிகாயில் தன்னுடைய கணவனின் தலைமை ஸ்தானத்துக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று அர்த்தமா? (1 சா. 25:10, 11, 18, 19) [ஏப். 20, w10 1/1 பக். 16 பாரா 3]
செய்யாத தப்புக்கு அபிகாயில் மன்னிப்பு கேட்டதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 சா. 25:24) [ஏப். 20, w02 11/1 பக். 5 பாரா. 1, 4]