ஏப்ரல் 27-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஏப்ரல் 27-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 95; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 45, 46 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 26-31 (8 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்துக்கான வசனம்: ஞானமுள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள், “நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.”—எபே. 5:15, 16.
17 நிமி: காவற்கோபுர படிப்புக்கு தயாரிப்பது எப்படி? காவற்கோபுரம் நடத்துகிறவர் இந்த பகுதியை கலந்தாலோசிப்பார். ஊழியப் பள்ளி புத்தகம் பக்கம் 28 பாரா 3-லிருந்து பக்கம் 31 பாரா 2 வரை உள்ள தகவலையும், பக்கம் 70 பாரா 1-3-ல் உள்ள தகவலையும் அதே பக்கத்தில் உள்ள பெட்டியையும் கலந்துபேசுவார். பின்வரும் கேள்விகளை சபையில் இருக்கிறவர்களிடம் கேட்பார்: (1) காவற்கோபுரத்தில் இருக்கிற ஒவ்வொரு படிப்பு கட்டுரையையும் நன்றாக படிப்பது ஏன் முக்கியம்? (2) புது காவற்கோபுரம் வந்தவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்? (3) காவற்கோபுர படிப்புக்கு நாம் எப்படி நன்றாக தயாரிக்கலாம்? (4) கட்டுரையில் கொடுத்திருக்கிற வசனங்களையும் கட்டுரையின் முக்கிய கருத்தையும் ஏன் கவனமாக பார்க்க வேண்டும்? (5) படித்த விஷயங்களை நாம் எப்படி மறுபார்வை செய்யலாம்? (6) கட்டுரையை படித்து முடிக்கும்போது என்னென்ன விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்? (7) பதில்களை எப்படி தயாரிக்கலாம்? (8) ஒரே கேள்விக்கு பல கோணங்களில் எப்படி பதில் சொல்லலாம்? காவற்கோபுர படிப்பில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்று சபையில் இருக்கிற சிலரிடம் கேளுங்கள்.—யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 61, 62-ஐ பாருங்கள்.
13 நிமி: “ஊழியத்தில் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை வெளிக்காட்டுங்கள்.” கலந்தாலோசிப்பு. கலந்தாலோசித்த பின்பு, இரண்டு நடிப்புகள் இருக்கும். முதல் நடிப்பு: ஒரு பிரஸ்தாபி, ஊழியத்தில் ஒருவரை சந்திக்கிறார். 2 தீமோத்தேயு 3:16, 17-ல் இருக்கும் ஒருசில வார்த்தைகளை பைபிளை திறக்காமல் மனப்பாடமாக சொல்லிவிட்டு, நற்செய்தி சிற்றேட்டை கொடுக்கிறார். இரண்டாம் நடிப்பு: முதல் நடிப்பில் செய்தது போலவே பிரஸ்தாபி பேச ஆரம்பிக்கிறார். ஆனால் இந்த முறை, ஆர்வம் இருக்கிறதா என்று பார்க்கிறார். ஆர்வம் இருப்பது தெரிந்தவுடன் அதே வசனத்தை பைபிளில் இருந்து வாசிக்கிறார். இரண்டாவது நடிப்பு ஏன் பலன் தரும் என்று சபையாரை கேளுங்கள்.
பாட்டு 124; ஜெபம்