-
யாத்திராகமம் 10:16-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக வரவழைத்து, “உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் எதிராக நான் பாவம் செய்துவிட்டேன். 17 அதனால், இந்த ஒரு தடவை மட்டும் என் பாவத்தை மன்னித்துவிட்டு, உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் தயவுசெய்து வேண்டிக்கொள்ளுங்கள். இந்தப் பயங்கரமான தண்டனையை எப்படியாவது நீக்கிவிடச் சொல்லுங்கள்” என்றான். 18 அதனால், அவர்* பார்வோனிடமிருந்து புறப்பட்டுப் போய், யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.+ 19 உடனே யெகோவா, கிழக்குக் காற்றை மிகவும் பலமான மேற்குக் காற்றாக மாற்றினார். அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலில் தள்ளியது. எகிப்து தேசத்தில் ஒரு வெட்டுக்கிளிகூட மிஞ்சவில்லை.
-