-
யோசுவா 10:11-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 இஸ்ரவேலர்களின் கையிலிருந்து தப்பித்து, பெத்-ஓரோனிலிருந்து இறங்குகிற பாதையில் ஓடிக்கொண்டிருந்த எதிரிகள்மேல் வானத்திலிருந்து பெரிய ஆலங்கட்டிகளை* யெகோவா விழ வைத்தார். அசெக்காவரை அந்த ஆலங்கட்டிகள் அவர்கள்மேல் விழுந்து அவர்களைக் கொன்றுபோட்டன. சொல்லப்போனால், இஸ்ரவேலர்களின் வாளுக்குப் பலியானவர்களைவிட ஆலங்கட்டி மழைக்குப் பலியானவர்கள்தான் அதிகம்.
12 இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் எமோரியர்களை யெகோவா அடியோடு வீழ்த்திய நாளில், யோசுவா இஸ்ரவேலர்களுக்கு முன்பாக யெகோவாவிடம் ஜெபம் செய்து,
“சூரியனே, கிபியோன்மேல்+ அசையாமல் நில்.+
சந்திரனே, ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் அப்படியே நில்!”
என்று சொன்னார்.
13 அதனால், இஸ்ரவேல் தேசத்தார் எதிரிகளைப் பழிவாங்கித் தீர்க்கும்வரை சூரியன் அசையாமல் நின்றது, சந்திரனும் நகரவில்லை. இது யாசேரின் புத்தகத்தில்+ எழுதப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒருநாள் முழுக்க சூரியன் நடுவானத்தில் அசையாமல் நின்றது, அது மறையவே இல்லை. 14 யெகோவா ஒரு மனிதனுடைய வேண்டுதலைக் கேட்டு+ இப்பேர்ப்பட்ட அற்புதத்தைச் செய்த அந்த நாளைப் போல ஒரு நாள் அதற்கு முன்பும் இருந்ததில்லை, அதற்குப் பின்பும் இருந்ததில்லை. யெகோவா இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்தார்.+
-