9 தகப்பன் என்மேல் அன்பு காட்டியதைப் போல்+ நான் உங்கள்மேல் அன்பு காட்டியிருக்கிறேன், அதனால் நீங்கள் என் அன்பில் நிலைத்திருங்கள். 10 நான் என் தகப்பனுடைய கட்டளைகளின்படி நடந்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போலவே, நீங்களும் என் கட்டளைகளின்படி நடந்தால் என்னுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள்.