16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல்+ விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து,+ இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார். 17 இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கு அல்ல, மீட்பதற்கே கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பினார்.+