உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 19:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 வழிதவறிப்போனவர்களைத் தேடுவதற்கும் மீட்பதற்குமே மனிதகுமாரன் வந்தார்”+ என்று சொன்னார்.

  • யோவான் 12:47
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 47 ஆனால், ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிக்காமல்போனால், நான் அவனை நியாயந்தீர்க்க மாட்டேன். ஏனென்றால், நான் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக வரவில்லை, இந்த உலகத்தை மீட்பதற்காகவே வந்தேன்.+

  • 1 கொரிந்தியர் 15:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல்,+ கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.+

  • 2 கொரிந்தியர் 5:18, 19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 எல்லாம் கடவுளிடமிருந்தே வந்திருக்கின்றன. அவர்தான் கிறிஸ்துவின் மூலம் எங்களைத் தன்னோடு சமரசமாக்கி,+ சமரசமாக்கும் ஊழியத்தை எங்களிடம் ஒப்படைத்தார்.+ 19 அதாவது, உலக மக்களுடைய குற்றங்களை நினைத்துப் பார்க்காமல்,+ கிறிஸ்துவின் மூலம் அவர்களைத் தன்னோடு சமரசமாக்கி,+ சமரசமாக்கும் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.+

  • 1 தீமோத்தேயு 1:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்+ என்ற வார்த்தை உண்மையானது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்.+

  • 1 யோவான் 2:1, 2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 சின்னப் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காக இந்த விஷயங்களை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும், நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற நீதியுள்ளவரான+ இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக* இருப்பார்.+ 2 நம்முடைய பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலி*+ அவர்தான்; நம்முடைய பாவங்களுக்கு மட்டுமல்ல, முழு உலகத்தின் பாவங்களுக்கும் பிராயச்சித்த பலி அவர்தான்.+

  • 1 யோவான் 4:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 அதுமட்டுமல்ல, பரலோகத் தகப்பன் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு மீட்பராக அனுப்பியதை+ நாங்கள் நேரடியாகப் பார்த்திருக்கிறோம், அதைப் பற்றிச் சாட்சி கொடுத்தும் வருகிறோம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்