உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 8/8 பக். 19-21
  • குவாமின் மர்ம நோய்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குவாமின் மர்ம நோய்கள்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • லிட்டிகோ மற்றும் போடிக் என்றால் என்ன?
  • மர்மம் சிக்கலடைகிறது
  • மர்மத்தை விளக்க முயற்சித்தல்
  • எதை எதிர்பார்க்கலாம், எவ்வாறு சமாளிக்கலாம்
  • விசுவாசம் என்னைக் காத்துவருகிறது ALS நோயுடன் வாழ்க்கை
    விழித்தெழு!—2006
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2006
  • பார்க்கின்ஸன் நோயோடு வாழ்தல்
    விழித்தெழு!—1989
  • பராமரிப்பாளர்கள் என்ன செய்யலாம்?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 8/8 பக். 19-21

குவாமின் மர்ம நோய்கள்

குவாமிலுள்ள விழித்தெழு! நிருபர்

அவள் அதைச் சந்தேகப்பட்டாள். இருந்தபோதிலும் டாக்டரின் வார்த்தைகள் அவளுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது. “நாங்கள் செய்த அனைத்துப் பரிசோதனைகளும் உங்களுடைய அப்பாவுக்கு லிட்டிகோ மற்றும் போடிக் நோய்கள் இருப்பதை உறுதிப்படுத்துவனவாகத் தோன்றுகின்றன.” இவை இரண்டுமே மரணத்தில் முடிவடையும் நோய்கள் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது.

இந்த நோய்கள் உலகத்திலேயே குவாமில்தான் அதிகளவில், ஐக்கிய மாகாணங்களில் ஏற்படுவதைவிட பல மடங்குகள் அதிகளவில் ஏற்படுகின்றன. ஆனால் இப்பெண்ணின் அப்பாவுடைய உயிரை முடிவில் மாய்க்கப்போகிற, பயந்து நடுங்கவைக்கும் இந்த நோய்கள்தான் என்ன? அவற்றை ஏற்படுத்துவது எது? அவருடைய எஞ்சியிருக்கும் காலத்தை சகிக்கமுடிந்ததாக ஆக்க அவள் என்ன செய்யலாம்?

லிட்டிகோ மற்றும் போடிக் என்றால் என்ன?

லிட்டிகோ மற்றும் போடிக் என்ற இரண்டுமே, நரம்புத் தசைமண்டலத்தைச் சீர்குலைக்கும் நோய்களாக இருக்கின்றன. மருத்துவ உலகில் லிட்டிகோ, அமியோட்ராஃபிக் லேட்டரல் ஸ்க்லெராசிஸ் (ALS), அல்லது லூ கெரிக் நோய் என்றறியப்படுகிறது. நியூ யார்க் யாங்க்கீ தளக்கட்டுப் பந்தாட்ட வீரர், லூ கெரிக், 1941-ல் இந்த நோயால் இறந்தபோது, இது அவருடைய பெயரால் அழைக்கப்படலாயிற்று. லிட்டிகோ என்பது ALS-ன் உள்ளூர் பெயராகும்.

ALS தண்டுவடத்திலுள்ள இயங்கு நரம்பணுக்களையும் நரம்புகளையும் பாதிக்கிறது. கைகள், கால்கள், தொண்டை ஆகியவற்றின் தசைகள் சிறிது சிறிதாகவும் ஒரேவேகத்திலும் செயலற்றதாக ஆகிவிடுகின்றன. எனினும், சிறிது காலத்துக்கு, உணர்வுத் திறனும், இனப்பெருக்கத் திறனும், சிறுநீர்-மலம் கட்டுப்பாட்டுத் திறனும் நன்கு வேலை செய்கின்றன. உண்மையாகவே, ALS நோயாளிகளுக்கு அநேக பிள்ளைகள் பிறந்திருக்கின்றனர். 43 வயதில் இறந்துபோன ஒரு பெண் தன் மரணத்திற்குமுன் ALS வியாதியால் அவதிப்பட்ட 14 வருட காலத்தில் நல்ல ஆரோக்கியமான ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இருந்தாலும், ALS-ன் முற்றிய கட்டங்களில், சிறுநீர்த் தடங்களில் நோய்த்தொற்றுதல் (urinary tract infections), நுரையீரல் அழற்சி (pneumonia), அல்லது குறைமூச்சு (respiratory insufficiency) போன்றவை மரணத்திற்கு வழிநடத்தும். ALS 35-க்கும் 60-க்கும் இடைப்பட்ட வயதினருக்கு மிகவும் அடிக்கடி வருகிறது. குவாமில் இதற்குப் பலியானவர்களிலேயே எல்லாரையும்விட இளையவர் 19 வயதான ஒரு பெண்ணாக இருந்தாள்.

போடிக் என்பது மூளையின் செல்கள் அழிந்துகொண்டுபோவதைக் குறிக்கும் உள்ளூர் பதமாகும். மருத்துவரீதியில் பார்க்கின்சனிஸம்-டிமென்ச்சா (PD) என்றழைக்கப்படுகிற இது, பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் ஆல்ட்ஸ்ஹைமர்ஸ் நோய் ஆகிய இரண்டின் அறிகுறிகளும் சேர்ந்தது என்பதாக விவரிக்கப்படுகிறது. பார்க்கின்சன்ஸனின் அறிகுறிகளோ (மந்தமாக செயல்படுதல், தசைகளின் இறுக்கம், நடுக்கங்கள்), மனதோடு தொடர்புடைய மாற்றங்களோ (ஞாபக சக்தியிழப்பு, சூழல் உணர்விழப்பு, ஆளுமை மாற்றங்கள்) முதலில் தோன்றலாம். சிலசமயங்களில் இந்த இரண்டு நோய்களின் அறிகுறிகளுமே ஒரேசமயத்தில் தோன்றலாம். முற்றிய நிலையில் நோயாளிக்கு படுக்கைப் புண்கள், சிறுநீர் மற்றும் மலம் கட்டுப்பாடிழப்பு, எலும்பு மெலிதல், எலும்பு முறிவுகள், இரத்தசோகை போன்றவை ஏற்பட்டு இறுதியில் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்.

லிட்டிக்கோவும் போடிக்கும் இரண்டு நோய்களாகக் கருதப்படுகின்றன. எனினும், ஆராய்ச்சி அவை இரண்டும் வெவ்வேறு அறிகுறிகளை வெளிக்காட்டக்கூடிய ஒரே நோய்தான் என்று சிலரை நம்பவைத்திருக்கிறது.

மர்மம் சிக்கலடைகிறது

ஆராய்ச்சி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் முக்கிய கேள்விகளில் கீழ்க்கண்டவை சில: (1) மரியானா தீவுகளில் ALS மற்றும் PD-க்கு பலியானவர்களில் ஏன் 98 சதவீதத்தினர் கலப்பற்ற கமாரோ இனத்தவராகவும் மீதியுள்ள சிலர் வெகுகாலமாக குவாமில் குடியிருக்கும் பிலிப்பினோக்களாகவும் இருக்கின்றனர்? (2) இந்நோய் பரவலாக பாதிக்கும் மற்ற பகுதிகள் ஏன் அதே தீர்க்கரேகையில் மற்ற இடங்களில் அமைந்துள்ளன? (3) மரியானா தீவுகளில் உள்ள அநேக நோயாளிகளுக்கு ALS மற்றும் PD ஆகிய இரண்டும் வந்திருக்கும்போது மற்ற இடங்களில் ஒன்று அல்லது மற்றொன்று மட்டுமே வந்திருப்பது ஏன்? (4) அடர் அலுமினியம் இந்தப் பலியாட்களுடைய மத்திய நரம்பு மண்டலத்திற்குள் புகுவது எவ்வாறு? (5) அலுமினியத்தின் அளவு அதிகம் உள்ள மூளைச் செல்களில் குறைந்த அளவு துத்தநாகம் மட்டும் காணப்படுவது ஏன்? இந்த நோய் பரவலாக ஏற்படும் மேற்கத்திய பசிபிக் பகுதிகளின் மண்ணிலும் தண்ணீரிலும் அலுமினியம், மாங்கனீஸ், இரும்பு போன்றவை அதிகளவிலும், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்றவை குறைந்தளவிலும் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகள் காண்பித்தன.

மர்மத்தை விளக்க முயற்சித்தல்

குவாம், ஜப்பான், கனடா ஆகிய நாடுகளிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த மர்ம நோய்களைப் பற்றிய உண்மைகளை விளக்க பல வருடங்களாக முயற்சித்து வந்தனர். இந்த ஆராய்ச்சிக் குழுக்களால் வெளிப்படுத்தப்பட்ட பல கருத்துக்களில், அபூர்வமான ஒரு மரபணு காரணி, மெதுவாக தொற்றும் ஒரு வைரஸ் தொற்று, நீண்டகால ட்ரேஸ் மெட்டல் நச்சேற்றம் போன்ற பல காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

மூளை செல்களில் இரண்டிலிருந்து மூன்று மில்லிகிராம் போன்ற மிகக் குறைந்தபட்ச அளவு அலுமினியம் இருந்தாலும் அது மூளையின் இயல்பான வேலைகளைத் தடைசெய்யக்கூடும் என்பதாக ஒரு மருந்தியல் வல்லுநர் உறுதியாகக் கூறியிருக்கிறார். மண்ணிலும் தண்ணீரிலும் மட்டுமல்லாமல், சமையல் சோடா, கேக் மற்றும் பேன்கேக் கலவைகள், தானாக புளிக்கும் மாவு, உறையவைக்கப்பட்ட மாவு, அமில எதிர்ப்பிகள், நாற்றம் போக்கிகள், மூலநோய் மருந்துகள் போன்றவற்றிலும் அதிகளவான அலுமினிய கூட்டுப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தன. பொதிவதற்கு பயன்படுத்தும் அலுமினிய பேப்பர்களும், அலுமினிய சமையல் பாத்திரங்களும் இதற்குக் காரணமாக இருக்கின்றன; ஏனென்றால் அவற்றிலிருந்து அலுமினியம் கசிகிறது. சிறப்பாக அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையுள்ள உணவுகளை அவற்றில் சமைக்கும்போது இவ்வாறு கசிகிறது.

நரம்பியல் வல்லுநராகவும் இந்த அபூர்வ நோய்களின் பேரிலான நிபுணருமாயிருக்கும் டாக்டர் க்வாங்-மிஞ் ச்சன் இவ்வாறு சொன்னார்: “தேசிய நரம்பியல் மற்றும் தொற்றுநோய்கள், தாக்குதல் ஆராய்ச்சி நிலையத்தால் (NINCDS) கடந்த 30 வருடங்களாக ஆழ்ந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனாலும், குறிப்பிடத்தக்க வகையில் பரவலாக ஏற்பட்டதன் மர்மத்தையும், மனிதவர்க்கத்தின் அறிவுக்கெட்டிய மத்திய நரம்பு மண்டலத்தைத் (CNS) தாக்கும், படுமோசமான நாசத்தை விளைவிக்கும் இந்தப் புதிரான நோய்களுக்கான காரணத்தையும் ஒன்றும் விளக்கிவிடவில்லை.” இருந்தபோதிலும், அபூர்வமான ஒரு மரபணு காரணியைவிடவோ, மெதுவாக தொற்றும் ஒரு வைரஸ் தொற்றைவிடவோ, நீண்டகால ட்ரேஸ் மெட்டல் நச்சேற்றம் மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுக் காட்டினார். ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. பதில் கண்டுபிடிக்கப்படும்வரை, ஒருவரால் செய்யமுடிவதெல்லாம் பிரச்சினைகளுக்கு ஈடுகொடுத்து, அவதிப்படுபவருக்கு முடிந்தளவு அதிக ஒத்தாசை செய்ய முயற்சிப்பதேயாகும்.

எதை எதிர்பார்க்கலாம், எவ்வாறு சமாளிக்கலாம்

பரிசோதனையின் முடிவைத் தெரிந்தபோது அவர்கள் பயந்து கவலையோடிருந்தபோதிலும், அவர்களுடைய மனப்பான்மை வருவதை ஏற்றுக்கொள்ளும் ஒன்றாக இருந்தது என்று குவாமில் பேட்டி காணப்பட்ட குடும்பங்கள் கூறின. சிகிச்சை ஒன்றுமில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

நோயாளியும் அவருடைய குடும்பத்தினரும் பெருத்த ஏமாற்றமடைந்து மனம் உடைந்திருக்கிறார்கள். அவருக்கு மிகவும் துயரத்தைத் தந்தது எது என்று வினவினபோது, PD-க்கு பலியான ஒருவர் சொன்னார்: “தெளிவாகப் பேசமுடியாமலிருப்பதும் வீட்டில் நடக்க முடியாமலிருப்பதும் என்னைப் பெரிதும் ஏமாற்றமடையச் செய்கிறது.” ஆளுமை மாற்றங்களும் ஞாபகமறதியும் குடும்பத்தினருக்கு சமாளிப்பது கடினமாக இருக்கின்றன. படுக்கைப் புண்களும், சிறுநீர் மற்றும் மலம் கட்டுப்பாடிழப்பும் அவர்களைப் பராமரித்துக் கொள்வதைக் கடினமானதாக்குகின்றன. ALS நோயாளி மனது சம்பந்தமாக விழிப்புடன் இருப்பதனால், அவனுடைய மனப்பான்மை பொதுவாகவே அதிக ஒத்துழைப்பைக் காட்டுவதாய் இருக்கிறது. ஆனால் நோயின் முற்றிய நிலையில் அவனை முழுக்க முழுக்க கவனிக்கவேண்டியதாக இருக்கிறது.

ALS அல்லது PD நோயாளியின் தொண்டையைச் சுத்தம் செய்துவிட பெரும்பாலும் ஒரு உறிஞ்சும் பம்பு (suction pump) பொருத்த வேண்டியதாயிருக்கிறது. தொண்டையில் அடைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு உணவு மிருதுவாக இருக்கவேண்டும், சிறிய ஸ்பூனில் சிறிது சிறிதாக தொண்டையின் ஆழத்தில் வைத்துக் கொடுக்கவேண்டும். மூச்சுவிடுவதற்குத் திணறும்போது ஆக்சிஜன் கொடுக்கவேண்டும்.

உடற்பயிற்சி மருத்துவம், நோய்த்தொற்றுத் தடை, உணர்ச்சி சம்பந்தமான ஆதரவு போன்றவை ஹோம் கேர் சர்வீஸ் ஏஜன்ஸியால் அளிக்கப்படுகின்றன. மற்ற அத்தியாவசிய தேவைகளோடு குவாம் லிட்டிக்கோ மற்றும் போடிக் சங்கம், இடுப்புப் பட்டைகள், சிம்புகள், மருத்துவ படுக்கைகள் மற்றும் மெத்தைகள், சக்கர நாற்காலிகள், படுக்கை மலத்தட்டுகள் போன்றவற்றை வழங்குகிறது. 1970-லிருந்து PD நோயாளிகள் L-டோப்பா உபயோகித்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இது தசையின் இறுக்கத்தைத் தளர்த்திவிட்டு மந்தமாக செயல்படுவதை முன்னேற்றுவிக்கிறது. வருந்தத்தக்கவகையில், டிமென்ச்சா நோயாளிகளுக்கோ ALS நோயாளிகளுக்கோ பலன்தரும் மருந்து எதுவும் கிடையாது.

இந்த நோய்கள் பீடிக்கும்போது வழக்கமாக குடும்பத்தாரின் நெருங்கிய ஒத்துழைப்பு மிகச் சிறந்ததாக இருந்திருக்கிறது. ALS அல்லது PD நோயினால் தன்னுடைய அப்பாவையும், அக்காவையும், குடும்ப அங்கத்தினர்களில் ஆறுபேரையும் இழந்துவிட்ட ஒரு பெண், இவ்வாறு சொல்லி தன் குடும்பத்தினரைப் பாராட்டினாள்: “உதவுவதற்கு அவர்கள் எல்லாரும் நல்லவர்களாயிருந்தனர்.” நோய்வாய்ப்பட்டுக் கிடந்த அவளுடைய அக்காவின் கணவருடைய உதவியைப்பற்றி பிரியத்துடன் நினைவுகூருபவளாய், அவள் சொன்னாள்: “அவர் அந்த அளவுக்கு நேசித்தார்! தினமும் அவர்களைச் சக்கர நாற்காலியில் உட்காரவைத்து உலாவுவதற்குக் கொண்டுபோனார்.”

தன்னுடைய அம்மாவைக் கவனித்துக்கொள்வதற்காக ஒரு பெண் பல வருடங்களுக்குத் திருமணமின்றி இருப்பதைத் தெரிந்துகொண்டாள். அவளுடைய குடும்பம் ஏற்கெனவே ALS நோயால் மூன்று அங்கத்தினர்களை இழந்துவிட்டது. மற்றவர்கள் அறிகுறிகளை வெளிக்காட்ட தொடங்கினர். 24 வருடங்களாக முழுவதும் செயலற்றுப்போன மற்றொரு பெண்ணுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். தங்களுடைய அம்மாவை நன்கு கவனித்துக்கொள்வதற்காக அவர்களில் இருவர் பள்ளியைவிட்டு நின்றுவிட்டனர். இரவும் பகலும் 30-நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்கவைக்கப்பட்டாள். இடைவிடா கவனிப்பு தேவைப்படுவதால், சில குடும்பங்கள் நோயாளிகளை மருத்துவமனைகளில் வைத்து, பயிற்சி பெற்ற பணியாளர்கள் அவர்களுடைய தேவையைப் பூர்த்திசெய்யும்படி பார்த்துக்கொள்வதை அவசியமாகக் கண்டிருக்கின்றனர்.

ALS மற்றும் PD நோய்களுக்கு வெற்றிகரமாக ஈடுகொடுத்திருக்கும் குடும்பங்கள் இந்த ஆலோசனைகளைக் கொடுக்கின்றன: அன்பாயிருங்கள் ஆனால் கண்டிப்புடன் இருங்கள். பொறுமையிழக்காதீர்கள் அல்லது நோயாளியிடமிருந்து அதிகத்தை எதிர்பார்க்காதீர்கள். கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருங்கள். அடிக்கடி ஜெபம் பண்ணுங்கள். பெரும்பாலான நேரத்தை நோயாளியோடு செலவுசெய்யும் குடும்ப அங்கத்தினர் தனிப்பட்டவகையில் நேரத்தை செலவுசெய்வதற்கு ஏற்பாடுசெய்யுங்கள். சிலசமயங்களில் நோயாளியை உலாவுவதற்கு வெளியே கொண்டுபோங்கள்; கிராம அல்லது பொது விழாக்களுக்குக் கூட்டிக்கொண்டு போங்கள். குடும்பத்தில் ஒரு நோயாளியைக் கொண்டிருப்பதைப்பற்றி வெட்கப்படாதிருங்கள். நோய்க்கு ஆளானவர்கள் பெரும்பாலும் தன்னந்தனியாக இருப்பதனால் அவர்களைப் போய்ப் பார்க்கும்படி பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் நண்பர்களையும் உற்சாகப்படுத்துங்கள்.

இந்த நோய்களுக்கு மருத்துவ அறிவியல் திட்டவட்டமான ஒரு விளக்கத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் நோயினால் தாக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நம்பிக்கை இருக்கிறது. விரைவில் கடவுளுடைய புதிய உலகில், எல்லா நோய்களும், வலியும், மரணமும் என்றென்றுமாக ஒழிக்கப்படும் என்று பைபிள் காட்டுகிறது. அதற்கு மாறாக நித்திய ஜீவனுக்கான எதிர்பார்ப்போடு, மனதின், உடலின் பரிபூரணம் இருக்கும். மரித்த அன்பார்ந்தவர்கள்கூட பூமியில் உயிர்த்தெழுப்பப்பட்டு உயிருடன் கொண்டுவரப்படுவார்கள். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் அன்பார்ந்தவரும் கடவுளுடைய அற்புதகரமான எதிர்கால நம்பிக்கையைப்பற்றி கற்றுக்கொள்ளும்படி தயவுசெய்து கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை அவருக்கு வாசித்துக்காட்டுங்கள்.—சங்கீதம் 37:11, 29; ஏசாயா 33:24; 35:5-7; அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 21:3-5.

[பக்கம் 20-ன் படம்]

மரணத்தில் முடிவடையும் அத்தகைய வியாதிகளைச் சமாளிப்பதைக் குடும்பத்தினர் கடினமானதாகக் காண்கின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்