பொருளடக்கம்
அக்டோபர் 15, 2008
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
டிசம்பர் 1–7
யெகோவாவின் “ஒளிவீசும் கண்கள்” நம்மைச் சோதித்தறிகின்றன
பக்கம் 3
பாட்டு எண்கள்: 160, 34
டிசம்பர் 8-14
யெகோவா நம்மைக் கண்காணிக்கிறார் —நம் நன்மைக்காக
பக்கம் 7
பாட்டு எண்கள்: 81, 80
டிசம்பர் 15-21
உள்ளப்பூர்வமான ஜெபத்திற்கு யெகோவா தரும் பதில்
பக்கம் 12
பாட்டு எண்கள்: 74, 90
டிசம்பர் 22-28
கனம்பண்ணுவதில் முந்திக்கொள்கிறீர்களா?
பக்கம் 21
பாட்டு எண்கள்: 216, 155
டிசம்பர் 29–ஜனவரி 4
நித்திய ஜீவனைப் பெற என்ன தியாகம் செய்வீர்கள்?
பக்கம் 25
பாட்டு எண்கள்: 177, 212
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11
நமக்கு நடக்கும் எல்லாவற்றையும் யெகோவா முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதை இந்த முதல் இரண்டு கட்டுரைகளும் காட்டுகின்றன. நம் சகிப்புத்தன்மையைப் போற்றுகிறார்; நம் கவலைகளையும் அறிந்திருக்கிறார். தம் ஊழியர்களின் கடின முயற்சிகளையும் அவர்களைப் பாதிக்கிற ஒவ்வொரு காரியத்தையும் அவர் அறிந்திருக்கிறார். இதை அறிவது நமக்கு எவ்வளவு ஆறுதலளிக்கிறது!
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 12-16
சங்கீதம் 83:17-ஐ நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம். ஆனால் அந்தச் சங்கீதத்தின் மற்ற வசனங்களை அறிந்திருக்கிறோமா? 83-ஆம் சங்கீதம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு அதிக உற்சாகமூட்டுகிறது என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 21-25
“கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” என்று பவுல் கூறினார். மற்றவர்களுக்கு மரியாதை காட்டுவது என்றால் என்ன? யார் மரியாதை காட்ட வேண்டும், யாருக்குக் காட்ட வேண்டும்? இது சம்பந்தமாக பைபிளில் என்ன உதாரணங்கள் உள்ளன? நாம் எப்படி ஒருவரையொருவர் கனம்பண்ணலாம் என்பது இக்கட்டுரையில் கலந்தாராயப்படும்.
படிப்புக் கட்டுரை 5 பக்கங்கள் 25-29
“மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என்று இயேசு ஒரு நாள் கேட்டார். அந்தக் கேள்விக்கு நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்? உங்கள் ஜீவனை மிகவும் முக்கியமானதாய்க் கருதுகிறீர்கள் என்பதை நீங்கள் வாழும் விதம் காட்டுகிறதா? இயேசு கேட்ட சிந்தனையைத் தூண்டும் கேள்வியைப் பற்றி ஆழமாய்ச் சிந்தித்துப் பார்க்க இக்கட்டுரை உங்களுக்கு உதவும்.
இதர கட்டுரைகள்:
“இதுவே கடவுளின் மிகவும் பரிசுத்தமான, மகத்தான பெயர்”
பக்கம் 16
பக்கம் 17
பக்கம் 30