பொருளடக்கம்
செப்டம்பர் 15, 2012
© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்
அக்டோபர் 22-28, 2012
இந்த உலகம் எப்படி அழிவைச் சந்திக்கும்?
பக்கம் 3 • பாடல்கள்: 133, 132
அக்டோபர் 29, 2012–நவம்பர் 4, 2012
சமாதானம்—ஆயிரம் ஆண்டுகளுக்கும்... அதற்கு அப்பாலும்...
பக்கம் 8 • பாடல்கள்: 55, 134
நவம்பர் 5-11, 2012
யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் பொறுமையைக் கற்றுக்கொள்ளுங்கள்
பக்கம் 18 • பாடல்கள்: 35, 90
நவம்பர் 12-18, 2012
“உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது”
பக்கம் 23 • பாடல்கள்: 43, 92
நவம்பர் 19-25, 2012
மாநாடுகள் — யெகோவாவின் மக்களுக்குச் சந்தோஷமான தருணங்கள்
பக்கம் 28 • பாடல்கள்: 119, 118
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-12
உலகையே உலுக்கப்போகும் சம்பவங்கள் சீக்கிரத்தில் அரங்கேறவிருக்கின்றன. நாம் நினைவில் வைக்க வேண்டிய பத்துச் சம்பவங்களைப் பற்றி இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன. முதல் ஐந்து, சாத்தானுடைய உலகிற்கு வரப்போகும் அழிவுடன் சம்பந்தப்பட்டவை. மற்ற ஐந்து, புதிய உலகத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களுடன் சம்பந்தப்பட்டவை.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 18-22
இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவு வரும் நாளுக்காகவும் பூஞ்சோலை பூமியில் குடியேறும் தினத்திற்காகவும் நாம் எல்லாருமே ஆவலாய்க் காத்திருக்கிறோம். நம்மில் சிலர் மாதக்கணக்காக காத்திருக்கலாம் அல்லது ஆண்டாண்டு காலமாகக் காத்திருக்கலாம். ஆனால், நாம் பொறுமையாய் இருப்பது ஏன் அவசியம்? நாம் எப்படி அதிக பொறுமையாய் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை நமக்கு உதவி செய்யும்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 23-27
இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவு வரும் நாளுக்காக கடவுளுடைய மக்களான நாம் அனைவருமே ஆசையாய்க் காத்திருக்கிறோம். முடிவு வரும் நாளும் நேரமும் நமக்குத் தெரியாமல் இருப்பதால் என்ன நன்மைகள் உள்ளன என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
படிப்புக் கட்டுரை 5 பக்கங்கள் 28-32
மாநாடுகள் காலங்காலமாக உண்மை வணக்கத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வந்திருக்கின்றன. பூர்வ காலத்திலும் நவீன காலத்திலும் முத்திரை பதித்த சில மாநாடுகளின் சிறப்பம்சங்களை இந்தக் கட்டுரை சிறப்பித்துக் காட்டுகிறது. அவற்றில் கலந்துகொள்வதால் நமக்குக் கிடைக்கும் பலன்களையும் நினைப்பூட்டுகிறது.
இதர கட்டுரை
13 தேவராஜ்ய பள்ளிகள்—யெகோவாவின் அன்பிற்கு அத்தாட்சி
அட்டை: பிலிப்பைன்ஸில் சகோதரர்கள் எல்லா மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கிறார்கள்—சைடுகார் இணைக்கப்பட்ட மோட்டர்பைக்கில் அமர்ந்திருக்கும் (வட லுஜோனைச் சேர்ந்த) இந்த நபர் உட்பட!
பிலிப்பைன்ஸ்
பிரஸ்தாபிகள்
1,77,635
ஒழுங்கான பயனியர்கள்
29,699
2011-ல் ஞானஸ்நானம் பெற்றவர்கள்
8,586
மொழிபெயர்க்கப்படும் மொழிகள்
21