நேர்மையான இருதயமுள்ளோர் மகா பாபிலோனிலிருந்து தப்பிக்க உதவுங்கள்
1 நம்முடைய காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கையில், வெளிப்படுத்துதல் 18:4-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்தப் பலமான எச்சரிப்பின் அவசரத்தன்மை அதிகரித்திருக்கிறது. மகா பாபிலோனின் உண்மை அடையாளம் பற்றிய எந்த ஒரு சந்தேகமும் நீக்கப்பட்டுவிட்டது. கடவுளுடைய “ஸ்திரீ”யின் வித்துவுக்கு எதிராக போர் செய்வதற்கு சாத்தானால் பயன்படுத்தப்படும் பொய் மத உலகப் பேரரசு வெளிப்படுத்தப்பட்டு அவளுடைய வேடம் கலைக்கப்பட்டிருக்கிறது.
2 அவளுக்குள்ளாகவே நிலைத்திருப்பதானது ஒருவரை அவளுடைய பாவங்களுக்குப் பங்குள்ளவராக ஆக்குகிறது. என்றபோதிலும் வெறும் பொய் மதத்தை விட்டு வெளியேறும் செயலைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. உண்மை வணக்கம் சம்பந்தமாக அலட்சிய மனப்போக்குடையவராக இருந்து கொண்டு அதே சமயத்தில் யெகோவாவின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. பாபிலோனை விட்டு வெளியேறக்கூடியவர்கள் கடவுளுடைய வார்த்தையைக் கண்டிப்பாக படிக்க வேண்டும், நற்செய்தியை பிரசங்கிப்பதில் சேர்ந்து கொள்ளவேண்டும், கடவுளுடைய ஒப்புக்கொடுத்த முழுக்காட்டுதல் பெற்ற ஊழியர்களாக ஆகவேண்டும்.
3 மார்ச் 22-ம் தேதி ஞாபகார்த்த தினத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பாபிலோனை விட்டு வெளியேற வேண்டிய அவசரத்தையும் யெகோவாவுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்த ஊழியராக ஆகவேண்டிய அவசரத்தையும் உணர்ந்தார்கள். இருமனமுள்ளவர்களாயிருக்கக் கூடியவர்கள் யெகோவாவின் பக்கமாக தங்கள் நிலைநிற்கையை எடுப்பதற்கு நாம் உதவ வேண்டும். (யாக். 1:8; 4:8) குறிப்புகளை மிகப் பலமாக தெளிவுபடுத்திடும் ஏப்ரல் மற்றும் மே மாத காவற்கோபுர இதழ்களை (இந்திய மொழிகளில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை இதழ்கள்) அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வதற்கு விசேஷ முயற்சிகளை எடுங்கள். எஞ்சியிருக்கும் காலம் குறுகினது என்பதையும் அவர்கள் தங்களுடைய நிலைநிற்கையை இப்பொழுதே எடுப்பதற்கான மிக அவசர தேவை இருக்கிறது என்பதையும் அவர்கள் மதித்துணர உதவுங்கள்.—மத். 12:30.
புதியவர்களுக்கு உதவுங்கள்
4 ஞாபகார்த்த ஆசரிப்பு இன்னமும் அப்படியே நம் நினைவில் இருப்பதால், தாங்கள் இயேசு கிறிஸ்துவின் தியாக பலியை உண்மையிலேயே உயர்வாக மதிக்கிறார்கள் என்பதை காட்டுவதற்கு வெளி ஊழியத்தில் கலந்து கொள்வதே மிகச் சிறந்த ஒரு வழிவகை என்பதைப் புதியவர்கள் கண்டுணருவதற்கு உதவி செய்ய மே மாதம் ஒரு நியாயமான காலப்பகுதி. ஆம், யெகோவாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் நமக்காக எதை செய்திருக்கிறார்களோ அதை நாம் எவ்வளவாய் போற்றுகிறோம் என்பதைச் செயலில் காட்டுவதற்கு இது ஓர் அவசியமான வழியாக இருக்கிறது!
5 மாணவர்களை வெளி ஊழியத்தில் ஆயத்தம் செய்யவேண்டும் என்ற நோக்குநிலையோடு நீங்கள் பைபிள் படிப்புகளை நடத்துகிறீர்களா? இந்தக் கிறிஸ்தவ உத்தரவாதத்திற்குப் போற்றுதலை வளர்ப்பதற்காக வேண்டி அவர்களுக்குப் படிப்படியான உதவியும் உற்சாகமூட்டுதலும் தேவைப்படுகிறது. வெளி ஊழியத்தின் முக்கியத்துவத்தை உங்கள் மாணாக்கருக்கு விளக்கிக் காட்டுங்கள். அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை நடித்துக் காட்டுங்கள், கடவுளுடைய சித்தத்தைச் செய்தல் [Doing God’s Will] என்ற ஆங்கில புரோஷூர் இவ்விஷயத்தில் உங்களுக்கு உதவக்கூடும்.
தகுதிகளைப் பூர்த்தி செய்தல்
6 ஒரு பைபிள் மாணவர் மெய்யான முன்னேற்றத்தைச் செய்து, மத்தேயு 24:14-ஐ நிறைவேற்றுவதில் உதவி செய்வதற்கான ஆவலைக்காட்டும் போது நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 98, 99-ல் குறிப்பிடப்பட்டிருப்பதை விமர்சிப்பது பயனுள்ளதாக இருக்கும். அப்பொழுது அவர் “சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்”கக்கூடிய நிலைக்குத் தகுதி பெறக்கூடும். (2 தீமோ. 2:15) வெளி ஊழியத்தில் பங்கு பெறுவதற்கு மூப்பர்கள் அனுமதி வழங்கும் வரையில் முதல் தடவையாக உங்களுடன் ஊழியத்தில் கலந்து கொள்ளும்படி நீங்கள் அவர்களை அழைக்காதீர்கள். வேதப்பூர்வமான அமைப்பு சார்ந்த தகுதிகளை அவர் பூர்த்தி செய்கிறார் என்று உங்களுக்குத் தோன்றுமானால் அவருடைய முன்னேற்றத்தை நடத்தும் கண்காணிக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பைபிள் மாணவர் ஒருவருடன் மூப்பர்கள் மே மாதத்தில் சந்தித்து பேசி வெளி ஊழியத்தில் பங்கு பெறுவதற்கு அவர்கள் அனுமதியை வழங்குவார்களானால், காவற்கோபுர சந்தாவை அளிப்பது எப்படி என்பதை அவருக்குக் கற்றுக்கொடுங்கள். வீட்டுக்குவீடு வெளி ஊழியத்தில் அவருக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பியுங்கள்.—ஆங்கில காவற்கோபுரம் நவம்பர் 15, 1988, பக்கங்கள் 16, 17, பாராக்கள் 7-10-ஐ பார்க்கவும்.
7 மகா பாபிலோன் முற்றிலுமான அழிவை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது. அது நிகழ்வதற்கு முன்பாக நேர்மை இருதயமுள்ள ஆட்கள் அவளுடைய பிடியிலிருந்து தப்பிக்கவும் யெகோவாவின் அமைப்பிற்குள் வரவும் நாம் உதவி செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு ஏற்கெனவே இலட்சக்கணக்கானோர் உதவப்பட்டிருக்கிறார்கள். யெகோவாவுக்குச் சித்தமானால் நம்முடைய பிராந்தியத்திலுள்ள நேர்மை இருதயமுள்ள ஆட்களைக் கண்டு பிடிப்பதற்கும் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்குமான நமது ஊக்கமான முயற்சியை அவர் ஆசீர்வதிக்கையில் இன்னும் அதிகமான ஆட்கள் பாபிலோனுக்குள்ளிருந்து விரைந்தோடி வருவதற்கு உதவப்படலாம்.—எரே. 50:8.