சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஜூன் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 71 (102)
8 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். இந்த சனிக்கிழமையன்று எல்லாரும் பத்திரிகை ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள். உள்ளூர் பிராந்தியத்துக்கு பொருத்தமான இரண்டு அல்லது மூன்று சுருக்கமான பத்திரிகை அளிப்புகளை நடித்துக் காட்டுங்கள். ஒவ்வொரு நடிப்பும் ஒரே ஒரு கட்டுரையை முக்கியப்படுத்தி காட்டுவதாய் இருக்கட்டும்.
17 நிமி: ‘செவிகொடுக்கும் மனச்சாய்வுள்ளவர்களிடம் “வாருங்கள்!” என்று தொடர்ந்து சொல்லுங்கள்.’ கேள்வி-பதில். நேரம் அனுமதிக்குமானால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் அனுபவங்கள் சொல்லப்படலாம். ஒவ்வொரு பொருத்தமான சந்தர்ப்பத்திலும் காவற்கோபும், விழித்தெழு! ஆகிய இரண்டிற்கும் சந்தா அளிப்பதை வலியுறுத்துங்கள். கால தாமதமின்றி மறுசந்திப்புச் செய்யவும் அக்கறையுள்ள ஆட்களிடம் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கவும் பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: மருத்துவ தகவல் சேவைகள். தகுதிவாய்ந்த மூப்பரால் கையாளப்பட வேண்டும். “கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு அவசியமான காரியங்களைச் செய்தல்” என்ற ஏப்ரல் 1988 நம் ராஜ்ய ஊழியம் இதழில் வெளிவந்த கட்டுரையை விமர்சிக்கவும் அங்கு குறிக்கப்பட்டிருக்கும் காரியங்களை சிலர் இன்னும் தங்களுடைய மருத்துவரிடம் பேசவில்லை என்று அறிக்கைகள் காட்டுகின்றன. பின்வருமாறு கேளுங்கள். மருத்துவ பத்திர அட்டையை நீங்கள் முழுவதுமாக பூர்த்தி செய்துவிட்டீர்களா? நீங்கள் கையொப்பமிட்டுவிட்டு, மற்றவர்களுடைய கையொப்பமும் அதில் வாங்கிவிட்டீர்களா? வியாதியுள்ளவர்களையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பவர்களையும் போய் பார்க்கும் உத்தரவாதம் உள்ளூர் சபை மூப்பர்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்தவும். (1 பேதுரு 5:2; 1 தெச. 2:7, 8) ஆங்கில காவற்கோபுரம் மார்ச் 1, 1989 பக்கங்கள் 30-1, மற்றும் ஆங்கில விழித்தெழு! பிப்ரவரி 22, 1989 பக்கங்கள் 26-ல் பிரசுரிக்கப்பட்ட தகவல்களை நன்கு அறிந்துகொள்ளும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 216 (18), முடிவு ஜெபம்.
ஜூன் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 26 (3)
10 நிமி: சபை அறிவிப்புகளும் தேவ ராஜ்ய செய்திகளும்.
20 நிமி: “மாநாடுகளிலிருந்து பயனடைய இளைஞருக்கு உதவிசெய்யுங்கள்.” கேள்வி-பதில். முன்மாதிரியுள்ள இரண்டு அல்லது மூன்று இளைஞர் தொகுதியோடு முக்கியக் குறிப்புகளை கலந்தாலோசிக்க கடைசி எட்டு நிமிடங்களைப் பயன்படுத்துங்கள். மாநாட்டு நிகழ்ச்சிநிரலிலிருந்து அவர்கள் எப்படி நன்மையடைந்தார்கள்? நன்மையடைய அவர்களுடைய பெற்றோரும் மற்றவர்களும் எப்படி அவர்களுக்கு உதவினார்கள்? மாநாடுகளில் கவனச் சிதறலைத் தவிர்க்க அவர்கள் என்ன செய்கிறார்கள்? மாநாடுகளில் அவர்கள் மிகுதியாக அனுபவித்து மகிழ்ந்தவை என்ன?
15 நிமி: உத்தமத்தைக் காத்துக்கொண்ட இளைஞர் 1989-ம் ஆண்டு வருடாந்தர புத்தகத்தில் காணப்படும் ஆஸ்ட்ரியா நாட்டு இளைஞரின் விசுவாசத்தைப் பற்றிய அனுபவங்களை சிறப்பித்துக் காட்டும் உற்சாகமான பேச்சு. பக்கங்கள் 111-12, 118-19 மற்றும் 123-25 (இந்தியமொழிகளில்: காவற்கோபுரம், பிப்ரவரி 1989, “யெகோவா விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் பலனளிக்கிறார்.”)
பாட்டு 160 (88), முடிவு ஜெபம்.
ஜூன் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 59 (31)
8 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. கொடுக்கப்பட்ட பொருளாதார ஆதரவுக்காக சபையை பாராட்டவும். சங்கம் பெற்றுக்கொண்ட நன்கொடைகளுக்குப் போற்றுதலைத் தெரிவியுங்கள். வார இறுதி நாட்களுக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளைக் குறிப்பிடவும். உங்களுடைய பிராந்தியத்துக்குப் பொருத்தமான 30-60 வினாடி பத்திரிகை அளிப்பை நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “கடவுளுடைய பிரமாணங்களை ‘உள்ளத்திற்குள்’ பதியச் செய்தல்.” முதல் நான்கு பாராக்களின் பேரில் கேள்வி-பதில். இந்தப் பகுதியை கையாளும் சகோதரர் பாராக்கள் 5-7-ஐ மும்முனை கலந்தாலோசிப்பு செய்வதற்கு முன்மாதிரியுள்ள இரண்டு பிரஸ்தாபிகளை மேடைக்கு அழைக்கிறார். புதிய பிரசுரங்களுக்குப் பாராட்டு குறிப்புகளை வரவேற்போம். தனிப்பட்ட படிப்பு ஆராய்ச்சியிலிருந்து தாங்கள் அல்லது மற்றவர்கள் எப்படி நன்மை பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்லலாம்.
12 நிமி: சபையின் தேவைகள் அல்லது திறமையான சபை புத்தகப்படிப்பு நடத்துபவர் புத்தகப்படிப்பு தொகுதியிலுள்ள இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளுக்கு சபை பிராந்தியத்துக்குப் பொருத்தமான முன்னுரையை இம்மாத சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளுடன் இணைத்துக் காட்டுகிறார். நியாயங்கள் புத்தகம் பக்கங்கள் 9-15-ஐ பயன்படுத்தவும்.
5 நிமி: அனுபவங்கள். சந்தா அளிப்பின்போது காணப்பட்ட அக்கறையைக் குறித்து இரண்டு அல்லது மூன்று அனுபவங்களை பிரஸ்தாபிகள் சொல்லட்டும்.
பாட்டு 92 (51), முடிவு ஜெபம்.
ஜூன் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 18 (55)
10 நிமி: சபை அறிவிப்புகள் இந்த வார இறுதியில் பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்துங்கள். ஜூலை மாத முதல் ஞாயிற்றுக்கிழமைக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.
15 நிமி: பள்ளியில் மத சம்பந்தமான நடவடிக்கைளில் ஈடுபடுவதைத் தவிர்க்க இளைஞருக்கு உதவி செய்யுங்கள். நியாயங்கள் புத்தகத்தைப் பயன்படுத்தி நன்கு தயார் செய்யப்பட்ட நடிப்பைக் கொண்டிருங்கள். எதிர்ப்புகளை சந்திப்பதற்கும் இந்தப் பிரச்னைகளின் பேரில் நமது நிலைநிற்கையைக் குறித்த உள்ளப்பூர்வமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள். இந்த நடிப்புகள் பள்ளியில் நடைபெறும் ஜெபம், சடங்குகள் ஆகிய மத சம்பந்தமான ஈடுபாடுகளைத் தவிர்க்க பிள்ளைகளுக்கு உதவும்படி பெற்றோர் நியாயங்கள் புத்தகம் பக்கங்கள் 323-325-ஐ மற்றும் 327 பயன்படுத்துங்கள். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் யெகோவாவை பிரியப்படுத்துவது அவரோடு நல்லுறவை காத்துக்கொள்வது ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.
20 நிமி: ஆவிக்குரிய தன்மையைக் கட்டியமைப்பதற்கு அனுதின நினைப்பூட்டுதல்கள். தினவாக்கியம், வருடாந்தர வாக்கியம், மற்றும் காலண்டரிலுள்ள தகவல்கள் ஆகியவற்றிலிருந்து தனி நபர்கள் மற்றும் குடும்பத் தொகுதிகள் எவ்வாறு நன்மையடையலாம் என்பதை தகுதிவாய்ந்த சகோதரர் இரண்டு முன்மாதிரியுள்ள பிரஸ்தாபிகளுடன் கலந்துபேசுகிறார்கள். யெகோவாவிடமிருந்து நமக்கு நினைப்பூட்டுதல்கள் அவசியம். (சங். 119:2; அப். 17:11) அடிக்கடி கொடுக்கப்படும் நினைப்பூட்டுதல்கள் நம்மை எவ்வாறு உற்சாகப்படுத்தக்கூடும் மற்றும் ஊழியத்துக்குப் பயனுள்ளதாக நிரூபிக்கக்கூடும் என்பதைக் காட்டுங்கள்.
பாட்டு 91 (29), முடிவு ஜெபம்.
ஜூலை 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 138 (71)
8 நிமி: சபை அறிவிப்புகள் மற்றும் கேள்விப்பெட்டி. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்துக்குச் செல்ல உற்சாகப்படுத்துங்கள்.
22 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—மெய்ச் சமாதானம் புத்தகத்தோடு.” கேள்வி-பதில் கட்டுரையின் கலந்தாலோசிப்பு.
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது “கடவுளை நாம் எவ்விதமாக அறிந்துக் கொள்ளலாம்?” ஆங்கில காவற்கோபுரம் ஏப்ரல் 1, 1987, பக்கங்கள் 4-7-ன் அடிப்படையில் பேச்சு. (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம், ஏப்ரல் 88.)
பாட்டு 152 (82), முடிவு ஜெபம்