எதிர்காலத்துக்காக திட்டமிடுதல்
1. செப்டம்பர் மாதத்தில் புதிய ஊழிய ஆண்டு ஆரம்பித்துவிட்டதனால் ராஜ்ய சேவையில் அக்கறையுள்ள அனைவரும் நாம் இதுவரையில் என்ன சாதித்திருக்கிறோம், வரும் ஆண்டில் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதை யோசித்துப் பார்ப்பது நன்மையாக இருக்கும். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதுபோல: “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அது முதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு ஒரே சிந்தையாயிருப்போமாக.”—பிலி. 3:16.
2. அக்டோபர் மாதத்தில், முதல் வாரக்கடைசிநாட்களை அனுகூலப்படுத்திக்கொண்டு, உங்கள் சபையில் உள்ள பயனியர்களோடு சேர்ந்து ஊழியம் செய்து புதிய ஊழிய ஆண்டில் நீங்கள் ஊழியத்தை நல்ல விதத்தில் ஆரம்பிக்கலாம் அல்லவா? சில இளைஞர்கள் தங்கள் உடன் மாணவரிடம் சாட்சி கொடுப்பதற்கும் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்வதற்கும் இலக்கு வைத்திருக்கின்றனர். அல்லது பெற்றோராக இருக்கக்கூடிய நீங்கள் உங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிடுவதன் காரணமாக மீண்டுமாக துணைப்பயனியர் சேவையை அனுபவித்து மகிழ்வதற்கு இது ஒரு நல்ல மாதமாக இருக்கக்கூடுமா? உங்கள் மணிநேர தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு உதவியாக இந்த மாதத்தில் உங்களுக்குக் கூடுதலான ஒரு ஞாயிற்றுக்கிழமை இருக்கும்.
3. இளம் பிரஸ்தாபிகளுக்கு பள்ளி ஆண்டின்போது அதிக வீட்டுப் பாடங்கள் இருக்கும். உங்கள் வீட்டுப் பாடங்களோடுகூட தேவ ராஜ்ய பாடங்களுக்காகவும் நீங்கள் நேரத்தை திட்டமிடுவீர்களா? இது நீங்கள் முழு நேர சேவைக்குத் தகுதிபெறுவதற்கும் அத்துடன் ஜீவனுக்கான பாதையில் நிலைத்திருப்பதற்கும் உதவி செய்யும். (ஏசா. 30:21) சில சமயங்களில் இதைக் காட்டிலும் அதிகம் நம்மால் செய்ய முடியாத அளவுக்கு நாம் அதிக வேலையாக இருக்கிறோம் என்று நாம் உணரக்கூடும். ஆனால் விலைமதிப்புள்ள அந்த நேரத்தை முதலிடம் பெறவேண்டிய தேவராஜ்ய காரியங்களுக்காக ஏன் பயன்படுத்தக்கூடாது?—1 தீமோ. 4:15.
4. வானத்து மேகங்கள் கடந்தோடிப்போவதைப் போன்று மணிநேரமும் மாதங்களும் கடந்துபோய்விட அனுமதியாதீர்கள். அதற்கு மாறாக, யெகோவாவுக்கு மகிமை கொண்டுவரும் விதத்தில் உங்களுடைய வாழ்க்கையை பயன்படுத்துவதற்கு நேரத்தைத் திட்டமிட்டு, இலக்குகளைக் கொண்டிருங்கள்.—பிர. 11:4.