உங்கள் ராஜ்ய மன்றத்தை நீங்கள் மதிக்கிறீர்களா?
1. “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது!” (சங். 133:1) ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்கள் நம்முடைய சகோதரர்களோடு ஐக்கியப்பட்டிருப்பதற்கும் அதன் மூலம் ஒருவரையொருவர் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் உற்சாகப்படுத்துவதற்கும் வாய்ப்பை அளிக்கிறது.—எபி. 10:24, 25.
2. ராஜ்ய மன்றம் நமது வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு முக்கியமான செயல் நடப்பிப்பதன் காரணமாக அதற்கு நாம் உண்மையில் மரியாதை காட்டுகிறோமா? ராஜ்ய மன்றம் அந்தப் பிராந்தியத்தில் மெய் வணக்கத்தின் மையமாக இருக்கிறது. ஆகையால் அதை நாம் உயர்வாக மதிக்க வேண்டும். அதைச் சுத்தமாகவும் நல்ல நிலையிலும் வைப்பதில் பங்குகொள்வதற்கான அவசியத்தை நாமனைவரும் உணரவேண்டும். நம்முடைய புத்தகப்படிப்பு தொகுதி ராஜ்யமன்றத்தைச் சுத்தம் செய்வதற்கு நியமிக்கப்படும் சமயம் வரக்கூடும். நம்மால் கூடுமிடத்தை நாம் உடையவர்களாய் இருக்க விரும்புகிறோம் என்பதை நாம் காண்பிப்போம்.
3. நாம் சுத்தம் செய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறோமோ இல்லையோ ராஜ்ய மன்றத்திற்காக நாமனைவருமே ஆர்வம் காட்டலாம். எப்படி? ராஜ்ய மன்றத்தினுள்ளே பிரவேசிக்கையில் அழுக்கை உள்ளே கொண்டுவராமலிருப்பதற்காக நம்முடைய பாதங்களைத் துடைத்துவிட்டு வருவதைப் போன்ற எளிய செயல்கள் மூலம் காட்டலாம். விசேஷமாக சீதோஷ்ண நிலை மிக மோசமாக இருக்கும் சமயங்களில் இது உண்மையாகவே இருக்கிறது. ஓய்வு அறையை உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிலிருக்கும் முகங்கழுவும் தொட்டியை அடுத்த நபர் பயன்படுத்துவதற்காக சுற்றிலும் துடைத்து சுத்தமாக வைத்துவிட்டு வரலாம். இலக்கிய மற்றும் பத்திரிகை இலாக்காக்களில் வேலை செய்யும் சகோதரர்கள் கலிசெய்யப்பட்ட அட்டைப்பெட்டிகளை உடனடியாக அகற்றிவிடுவதன் மூலம் தங்கள் அக்கறையைக் காட்டலாம். எல்லாக் குப்பைகளும் அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் தொட்டியிலோ அல்லது பெட்டியிலோ போடப்பட வேண்டும். நாம் தரையிலே வேண்டாத தாள்களையோ அல்லது மற்ற அசுத்தங்களையோ பார்த்தால் வேறு யாராவது அதைப் பொறுக்கி எடுக்கட்டும் என்று விட்டுவிடாமல் நாம் அதைப் பொறுக்கி எடுப்பது நல்லது பிப்ரவரி 1989-க்கான நம் ராஜ்ய ஊழியம் தகவல் பலகையை நேர்த்தியாக வைத்துக்கொள்வதற்கு ஆலோசனைகளைக் கொடுத்தது இந்த அறிவுரை பின்பற்றப்படுகிறதா என்று நிச்சயப்படுத்திக்கொள்வதன் மூலம் மற்றவர்கள் நடத்தும் கண்காணியோடு ஒத்துழைக்க வேண்டும்.—நம் ராஜ்ய ஊழியம். பிப்ரவரி 89, பக்.3.
4. நாம் மற்றவர்களுக்கோ அல்லது கன்வென்ஷன்களுக்கோ ஆஜராகையிலும்கூட இதே நியமம் பொருந்துகிறது. மாநாடு நடைபெறும் இடமானது மெய்வணக்கத்தின் மையமாக இருக்கிறது. அது நம்முடைய சொந்த மாநாட்டு மன்றங்களாக இருந்தாலுஞ்சரி அதுவும் மதிப்புடன் கருதப்பட வேண்டும். நமது இருக்கையைவிட்டுச் செல்லும்போது அவ்விடத்தைச் சுத்தமாக விட்டுச்செல்கிறோமா என்று நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் உதவிசெய்யும் மனப்பான்மையுடையோராக இருக் வேண்டும். சுத்தம் செய்வதற்கு நியமிக்கப்பட்டவர்கள் பிறகு அதைப் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கக்கூடாது.
ஒரே மன்றத்தைப் பகிர்ந்துகொள்ளுகையில்
5. சொந்த மன்றங்களுக்கான செலவு மிக உயர்வாக இருப்பதன் காரணமாக அநேக ராஜ்யமன்றங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சபையினரால் பயன்படுத்தப்படுகிறது நகர்ப்புற பிராந்தியங்களில் ஒரே ராஜ்யமன்றங்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட சபையினரால் பயன்படுத்தப்படுகிறது. நகர்ப்புற பிராந்தியங்களில் ஒரே ராஜ்ய மன்றத்தை ஐந்து அல்லது ஆறு சபைகள் வரையிலுமாக பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு சபையும் ராஜ்யமன்றத்தின்பேரில் அக்கறையைக் காட்ட வேண்டும். அது யெகோவாவுக்குச் சொந்தமானது என்பதையும் கண்டுணரவேண்டும். எனவே ராஜ்ய மன்றத்துக்காக நாம் காட்டும் மரியாதையானது நமது அன்பை யெகோவாவுக்கு மட்டுமல்ல ஆனால் அந்த மன்றத்தை உபயோகிக்கும் மற்ற சகோதரர்களுக்கும் காண்பிப்பதை இன்றியமையாத ஒன்றாக ஆக்குகிறது.
6. பொதுவில், ராஜ்யமன்றத்தை சுத்தம் செய்யும் வேலையானது வாரத்துக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. மன்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் உபயோகிக்கும்போது ஒவ்வொரு கூட்டம் முடிந்த பின்பும் ஓரளவிற்கு சுத்தம் செய்வது அவசியமாக இருக்கும். அப்பொழுது அடுத்தப்படியாக உள்ளே வரக்கூடிய ஞாயிற்று கிழமைகளுக்கும் இது பொருந்தும். நேரம் அனுமதிக்கும் அளவுக்கு உள்ளே வரக்கூடிய அடுத்த சபையினருக்காக சுத்தம் செய்தல் நல்லது. ஒரே நாளில் பல்வேறு சபைகள் பயன்படுத்தக்கூடிய மன்றமானது யாருமே சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் அந்த நாளின் முடிவில் மிகவும் அசுத்தமாக இருக்கக்கூடும்.
7. ஆவிக்குரிய காரியங்களுக்கு வருகையில் “பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையுமுள்ளவர்களாய் நாம் எப்படி சீர்ப்பொருந்தியிருக்கிறோமோ” அதுபோல நம்முடைய ராஜ்யமன்றங்களுக்கு மரியாதைக் காட்டும் விஷயத்திலும் நாம் சீர்ப்பொருந்தியிருப்போமா.— 1 கொரி. 1:10.