ஊழியர்களாக நம்முடைய திறமைகளை முன்னேற்றுவித்தல்
1 ராஜ்ய அக்கறைகள் நம்முடைய வாழ்க்கையில் முதல் இடத்தை எடுத்துக் கொள்ளுவதால் நாம் தெரிந்துகொண்ட பணியாக ஊழியத்தில் மேம்பட்டு விளங்குவதற்கு நாம் தூண்டப்பட வேண்டும். (மாற்கு 13:10) நாம் எவ்வளவு காலமாக பிரசங்க வேலையை செய்து வந்தபோதிலும் ஊழியர்களாக நமது திறமையில் நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். இதை நாம் எவ்வாறு செய்யலாம்?
2 தொழில்துறையில் வெற்றிகரமாக செயலாற்றும் அநேக ஆட்கள் தங்களுடைய அறிவையும் திறமைகளையும் காலத்துக்கேற்ற புத்தம் புதிதாக ஆக்கிக்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். இதன்பேரில் அவர்களுடைய அன்றாட பிழைப்பு சார்ந்திருக்கக்கூடும். எனவே மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட ஊழியனாக சீஷர்களை உண்டுபண்ணுவதற்காகவும் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்காகவும் நமது திறமைகளை முன்னேற்றுவித்துக்கொள்வதற்கு நாமும்கூட ஊக்கந்தளராத ஆட்களாக இருக்க வேண்டும். எல்லா வகையான ஆட்களையும் கவரக்கூடிய நலமான மற்றும் புதுமையான அணுகுமுறைகளுக்காக நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.—மத். 28:19, 20.
சவாலை எதிர்ப்படுங்கள்
3 செம்மறியாட்டைப் போன்ற ஆட்களைக் கூட்டிச் சேர்ப்பதை இப்பொழுது யெகோவா தீவிரப்படுத்திக் கொண்டிருக்கையில் நம்மில் அநேகர் நம்முடைய அயலாரை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருக்கிறோம். மிக அதிகமான பிரஸ்தாபிகளாலும் பயனியர்களாலும் செய்யப்படும் அதிகரிக்கப்பட்ட சாட்சி வேலை உலக பிராந்தியத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. நம்முடைய அதிகரிக்கப்பட்ட சாட்சி வேலையின் காரணமாக, ஒரு காலத்தில் பலன்தரத்தக்க ஒன்றாக இருந்த அறிமுக வார்த்தைகள் நாம் சந்திக்கும் ஆட்களுக்கு இப்பொழுது கவர்ச்சியான ஒன்றாக இருக்காது. ஆகவே நம்முடைய ஊழியத்தின் தரத்தில் முன்னேற்றம் செய்வது அவசியம்.
4 நம்முடைய வேலையில் நாம் மெய்யாகவே திறம்பட்டவர்களாக இருக்க வேண்டுமானால் ஜனங்களோடு பேசுகையில் நம்பிக்கையான மனநிலையை கொண்டிருப்பது அவசியம். ஜூலை 15, 1988 ஆங்கில காவற்கோபுரம் பிரதியில் கொடுக்கப்பட்ட நடைமுறையான ஆலோசனைகளை நன்கு பயன்படுத்துவதானது இவ்விஷயத்தில் நமக்கு உதவியாக இருக்கக்கூடும். உதாரணமாக, பக்கம் 16, பாரா 6 நீங்கள் ஒவ்வொரு வாரமும் சந்திக்கக்கூடிய மற்றும் உங்களை நன்கு அறிந்திருக்கும் பிராந்தியங்களில் உங்களை நீங்கள் எப்படி இனிமையான மற்றும் நம்பிக்கையான முறையில் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்பதைக் கலந்தாலோசிக்கிறது. “என்னுடைய சொந்த சர்ச் காரியங்களில் நான் ஆழ்ந்திருக்கிறேன். அது என்னுடைய ஆவிக்குரிய தேவைகள் அனைத்தையும் கவனித்துக்கொள்கிறது” என்று உங்களிடம் கடந்த வாரம் சொன்ன ஒருவரை எப்படி அணுகுவது என்பதன்பேரில் தகவலை அளிக்கிறது. இது பக்கம் 16, பாரா 5-ல் காணப்படுகிறது.
5 ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பை நாம் நடத்துகிறோம் என்ற நேரடி அணுகுமுறையின் மூலம் உங்கள் பிராந்தியத்தில் நீங்கள் ஊழியம் செய்திருக்கிறீர்களா? உங்கள் சபை வட்டாரத்திலிருக்கக்கூடிய வியாபார பிராந்தியங்களில் நீங்கள் ஊழியம் செய்கிறீர்களா? பொருத்தமான பலன்தரக்கூடிய மணிநேரத்தில் தெரு ஊழியம் செய்வது கூடிய காரியமா? ஜூலை 15, 1988 ஆங்கில காவற்கோபுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறந்த ஆலோசனைகளை கட்டாயமாக விமர்சித்து பாருங்கள். இந்த ஆலோசனைகளை பொருத்திப் பிரயோகிப்பது ஊழியர்களாக நமது திறமைகளை முன்னேற்றுவிக்க அது நமக்கு உதவக்கூடும்.
6 திறம்பட்டவர்களாக இருப்பதானது முழுமையாக செய்து முடிப்பதையும் உட்படுத்துகிறது. (எபே. 6:13) ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியிருப்பதை கவனிக்க விழிப்புள்ளவர்களாயிருங்கள். ஒரு சில ஆட்கள் அடுக்கு மாடிக் கட்டிடங்களின் அடித்தளங்களிலும் மோட்டார் வாகனங்களுக்குரிய கொட்டில்களின் மேற்கூரைகளிலும் வீட்டின் முன்வாசல் வழியாக நேரிடையாக செல்ல முடியாத மற்ற இடங்களிலும் குடியிருக்கிறார்கள். பல்வேறு குடும்ப அங்கத்தினர்களை சாதாரணமாக வீட்டுவாசற்படிக்கு வர இயலாத நிலையிலிருக்கும் ஒரு வயதானவரை அல்லது வழக்கமாக வீட்டில் சந்திக்க செல்லும்போது வேலைக்குச் சென்றிருக்கக்கூடிய ஒருவரைத் தேடி கண்டுபிடியுங்கள். ஒருவேளை வேறொரு மணிநேரத்தில் செல்வதன் மூலம் நீங்கள் மற்ற குடும்ப அங்கத்தினரைச் சந்திக்க நேரிடும். மாலை ஊழியம் பெரும்பாலும் இப்படிப்பட்ட வாய்ப்புகளை அளிக்கிறது.
நம்முடைய இலக்காக வைத்துக்கொள்ளுங்கள்
7 ஊழியத்தில் நமது திறமைகளை முன்னேற்றுவிப்பது தகுதி வாய்ந்த இலக்காகும். நம்மில் பெரும்பான்மையோர் அதை அடையலாம். இதற்கு இதயப்பூர்வமான ஜெபமும் முன்தயாரிப்பும் தேவைப்படுகிறது. வெளி ஊழியத்தில் நமது திறமைகள் வளரும்போது வேறு யாராகிலும் அதே விதமான முன்னேற்றத்தை செய்வதற்கு நாம் உதவிசெய்யக்கூடும்.—கலா. 6:6.
8 நமது கற்பிக்கும் வேலை “மிகுந்த உபத்திரவத்துடன்” முடிந்துவிடாது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். (மத். 24:21) யெகோவாவின் வழிகளை உயிர்த்தெழுப்பப்படும் ஆட்கள் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்யும் ஆண்டுகளை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். ஆயிர வருட ஆட்சியினூடே கற்றுக்கொண்ட ஆட்கள் கிறிஸ்துவின் ஆட்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்துவதை நாம் காண்கையில் நமது மகிழ்ச்சி நிச்சயமாகவே மிகுதியாகும். பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் நம்முடைய திறமைகளை நாம் முன்னேற்றுவிப்பதன் மூலம், யெகோவாவுக்குக் கனமும் துதியும் உண்டாக நமது ஊழியத்தில் நாம் அதிகத்தை சாதிக்கலாம்.