உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/91 பக். 3
  • 1991-ற்கான ஞாபகார்த்த ஆசரிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1991-ற்கான ஞாபகார்த்த ஆசரிப்பு
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விசேஷ அழைப்பிதழ்களை உபயோகியுங்கள்
  • தேவையான தயாரிப்புகள்
  • யெகோவாவின் சாட்சிகள்—பெயருக்குப் பின்னாலிருக்கும் அந்த அமைப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • பலப்படுத்தி, கல்வி புகட்டி, செயல்பட தூண்டும் உபகரணங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2000
  • அவளுடைய முயற்சி பலன் தந்தது
    விழித்தெழு!—2002
  • சாட்சி கொடுக்கும் வீடியோக்களால் வரும் நன்மைகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 2/91 பக். 3

1991-ற்கான ஞாபகார்த்த ஆசரிப்பு

1 சனிக்கிழமை, மார்ச் 30, 1991, கிறிஸ்துவின் மரணத்தின் 1958-ஆவது ஞாபகார்த்த நாளாகும். ஆஜராவதற்கு நமது சொந்த திட்டங்களை போடுகையில், ஏதோவொரு வழியில் நம் தனிப்பட்ட உதவியோ அல்லது ஓர் அழைப்பிதழோ தேவைப்படும் மற்றவர்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். ஞாபகார்த்த நாளுக்கு தயாரிப்புகளைச் செய்ய ஆரம்பிப்பதற்கும், மற்றவர்களை அழைப்பதைப் பற்றி சிந்திப்பதற்கும் இப்பொழுதே காலமாயிருக்கிறது.—பக்கம் 3-ல் உள்ள “ஞாபகார்த்த நாளுக்கு தயார் செய்ய வேண்டிய காரியங்கள்” என்பதை தயவு செய்து பாருங்கள்.

2 ஞாபகார்த்த நாளுக்கு ஆஜராவதை நாம் எவ்வாறு நோக்குகிறோம்? நாம் அதை ஒரு சிலாக்கியமாகவும், கிறிஸ்துவின் பலிக்கு போற்றுதலைக் காண்பிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் நோக்க வேண்டும். உங்கள் சொந்த சபையை விட்டு நீங்கள் வேறு ஓர் இடத்தில் இருப்பீர்கள் என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் விஜயம் செய்யப்போகும் இடத்திலுள்ள ராஜ்ய மன்றத்தின் விலாசம் உங்களிடம் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் அங்கு ஆஜராகலாம்.

விசேஷ அழைப்பிதழ்களை உபயோகியுங்கள்

3 மார்ச் மாத ஆரம்பத்தில் விசேஷ ஞாபகார்த்த அழைப்பிதழ்களை நீங்கள் உபயோகிக்க ஆரம்பிக்கலாம். அவைகளை கைப்பிரதிகளாக உபயோகிக்கக்கூடது, ஆனால் அவை அக்கறை காட்டுபவர்களுக்கு தனிப்பட்ட விதமாக கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். ஏனென்றால் ஜனங்கள் அடிக்கடி தேதிகளையும், நேரங்களையும் மறந்துவிடுவதால், அழைப்பிதழின் அடியிலோ அல்லது பின்பக்கத்திலோ ராஜ்ய மன்ற விலாசத்தையும், ஞாபகார்த்த ஆசரிப்பின் நேரத்தையும் நேர்த்தியாக எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ கொடுக்கும்படி ஆலோசனை கொடுக்கப்படுகிறது. கூடுமானால், நீங்கள் அழைக்கும் நபர் ஞாபகார்த்த நாளின் தனிச்சிறப்பு வாய்ந்த தன்மையை தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி உதவ அவருடன் சிறிது நேரம் செலவழியுங்கள். புதிதாக அக்கறைக் காட்டும் ஆட்கள் தாங்களாகவே ராஜ்ய மன்றத்திற்குச் செல்ல ஒருவேளை தயங்கலாம். வாகனம் ஏற்பாடு செய்யவோ அல்லது மன்றத்திற்கு வெளியே அவர்களைச் சந்திக்கவோ நீங்கள் முன்வரலாமா? இது கூடுதலான நேரத்தையும் முயற்சியையும் தேவைப்படுத்தும். ஆனால் உங்கள் உதவி போற்றப்படும். மேலும், சில வருடங்களாக சத்தியத்தை அறிந்தும், கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராவதிலிருந்து பின்தங்கியவர்களுக்கு உதவி செய்ய ஒரு விசேஷ முயற்சி எடுக்க வேண்டும்.—லூக். 11:23; யோ. 18:37பி.

தேவையான தயாரிப்புகள்

4 சபை மூப்பர்கள் ஞாபகார்த்த நாளுக்கான எல்லா ஏற்பாடுகளும் கவனமாக முன்பாகவே செய்யப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். சின்னங்களை கொடுப்பதற்கு நல்ல தகுதி வாய்ந்த சகோதரர்களை தேர்ந்தெடுக்க நிச்சயமாயிருங்கள். சபையில் போதுமான மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்கள் இருப்பார்களாகில் அவர்களையே உபயோகிக்கவேண்டும். சின்னங்களை கொடுப்பது தேவையின்றி நீடித்திராதபடி, போதுமான எண்ணிக்கையான சகோதரர்களை இதைச் செய்வதற்கு தயாரியுங்கள். பரிமாறுபவர்கள் சபையாருக்கு பரிமாறின பின்பு, அவர்கள் முதல் வரிசையில் உட்காருவார்கள், பேச்சாளர் அவர்களுக்கு பரிமாறுவார். இறுதியில், அவர்களில் ஒருவர் பேச்சாளருக்கு பரிமாறுவார்.

5 ஒவ்வொரு வருடமும் கடந்து செல்கையில், கர்த்தருடைய இராப்போஜனம் இனிமேலும் ஆசரிக்கப்படாத நாளுக்கு நெருக்கமாக நாம் வருகிறோம். கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களில் வெகு சிலரே மீந்திருக்கின்றனர். இயேசு தம்முடைய சகோதரர்கள் எல்லாரும் தம்மோடு ராஜ்யத்தில் இருக்கும் வரை தம் மரணம் நினைவுகூரப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். (லூக். 22:19; 1 கொரி. 11:25) அது வரையில், நாம் கீழ்ப்படிதலோடும் உண்மையோடும் ஒவ்வொரு வருடமும் ஞாபகார்த்த நாளை மிகப் பெரிய சந்தோஷத்தோடும் போற்றுதலோடும் ஆசரிப்பதற்கு கூடுவோம்.

[பக்கம் 3-ன் பெட்டி]

ஞாபகார்த்த நாளுக்கு தயார் செய்யவேண்டிய காரியங்கள்

(காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1985, பக்கம் 19-ஐ பாருங்கள்.)

1. பேச்சாளர் உட்பட அனைவருக்கும், சரியான நேரம் மற்றும் ஆசரிப்புக்கான இடம் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறதா? பேச்சாளருக்கு போக்குவரத்து வசதி இருக்கிறதா?

2. சின்னங்களை ஏற்பாடு செய்வதற்கு திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா?

3. ஒரு சுத்தமான மேசை விரிப்பும் தேவையான எண்ணிக்கையான தட்டுகளும் கோப்பைகளும் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா?

4. மன்றத்தைச் சுத்தம் செய்வதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

5. அட்டென்டென்டுகளும், பரிமாறுபவர்களும் நியமிக்கப்பட்டுவிட்டனரா? ஞாபகார்த்த நாளுக்கு முன்பு அவர்களுடைய வேலைகளை விமர்சிக்க ஒரு கூட்டம் அவர்களோடு அட்டவணையிடப்பட்டிருக்கிறதா? எப்பொழுது? எல்லாருக்கும் திறமையாக பரிமாறப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய என்ன செயற்படுமுறை கடைப்பிடிக்கப்படும்?

6. வயதான மற்றும் வியாதியால் தளர்ந்த சகோதர சகோதரிகளுக்கு உதவ ஏற்பாடுகள் முழுமையாய் செய்யப்பட்டுவிட்டதா? அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் எவராவது நோய் காரணமாக ராஜ்ய மன்றத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால், அவர்களுக்கு பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்