நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—துண்டுப் பிரதிகளுடன்
1 “நான் ஒரு பெண்மணியை கடந்து சென்றேன். அவள் ஒரு பைபிள் துண்டுப்பிரதியை எனக்கு அளித்தாள்” என்று ஒரு மனிதன் சங்கத்திற்கு எழுதினான். “அதன் தலைப்பு ‘சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை.’ அதை வாசிப்பதற்கு முன்பு நான் உற்சாகம் குன்றி இருந்தேன், ஆனால் அதற்கு பிறகு நான் ஊக்கமும் சமாதானமும் பெற்றேன்.” அந்த மனிதன் மேலுமான தகவல் வேண்டுமென்று விரும்பி அதற்காக எழுதினான், அதை விளக்குபவனாய்: “உங்களிடமிருந்து ‘நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்’ என்ற புத்தகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.”
2 உண்மையிலேயே இன்று யெகோவாவைத் துதிக்கும் அநேகருடைய ஆவிக்குரிய பசி துண்டுப்பிரதிகளால் தூண்டப்பட்டிருக்கிறது. உங்கள் ஊழியத்தில் நீங்கள் துண்டுப்பிரதிகளை உபயோகிக்கிறீர்களா? அநேகர் உபயோகிக்கின்றனர். புரூக்ளினில் மட்டும் 12,20,00,000-க்கும் மேலாக சமாதானமான புதிய உலகம் துண்டுப்பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன, நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம், யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன?, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்ற மற்ற மூன்று துண்டுப்பிரதிகள் சுமார் 25 கோடி அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
3 இந்தச் சுருக்கமான செய்திகளில் விளக்கப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை நாம் ஒருபோதும் குறைவாக மதிப்பிடக்கூடாது. (எபி. 4:12; சகரியா 4:10-ஐ ஒப்பிடுங்கள்; யாக். 3:4, 5.) ஒரு சாட்சி எழுதினார்: “காவற்கோபுர சங்கத்திலிருந்து வந்த அநேக துண்டுப்பிரதிகளை நான் வாசித்தேன், இறுதியில் நான் சத்தியத்தை கற்றுக்கொண்டேன்.” அவர் விளக்கினார்: “இந்த அவசரமான உலகில், வாசிப்பதற்கு அதிக நேரமெடுத்துக் கொள்ள ஜனங்களுக்கு விருப்பமில்லை, ஆனால் துண்டுப்பிரதிகள் ஒரு முக்கியமான செய்தியை கொண்டிருக்க போதுமான அளவாய் இருக்கிறது, ஜனங்கள் அதை பார்ப்பதற்கு முன்பே விலகிபோய்விடும்படி அவ்வளவு பெரியதாய் இல்லை.”
4 பலவிதமான காரணங்களால் ஜனங்கள் நம்மிடமிருந்து பிரசுரங்களை எடுக்க அடிக்கடி தயங்குகின்றனர். ஆனால் அநேகர் வெறுமென ஒரு துண்டுப்பிரதியை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. ஒரு பயண கண்காணி ஒரு சிறிய ப்ளாஸ்டிக் சட்டத்தில் துண்டுப்பிரதிகளை வைத்து காண்பிக்கிறார். வீட்டுக்காரர் தான் விரும்பும் ஒன்றை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறார். “தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது துண்டுப்பிரதி, “யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன?” என்று அவர் எழுதுகிறார்.
முதல் சந்திப்பில்
5 ஒரு துண்டுப்பிரதியோ அல்லது அழைப்பிதழோ கொடுப்பது சம்பாஷணைகளை ஆரம்பிப்பதற்கு ஒரு திறம்பட்ட வழி என்று சில பிரஸ்தாபிகள் காண்கின்றனர். ஒரு துண்டுப்பிரதியை அளிப்பதன் மூலம் கதவை திறப்பதற்கு தயங்கும் ஒரு வீட்டுக்காரர், அவ்வாறு திறப்பதற்கு தூண்டப்படுகிறார்.
6 ஒரு வீட்டுக்காரர் வெளிப்படையாக அதிக வேலையாகவோ அல்லது வருத்தமாகவோ இருந்தால், தேவைப்படுவது வெறும் ஒரு துண்டுப்பிரதியாக மட்டும்தான் இருக்கும். ஒரு பெண் மரித்தவர்களுக்கான நம்பிக்கை துண்டுப்பிரதியால் அவ்வளவாக ஆறுதல் அடைந்ததினால், அதிகமான தகவலுக்காக சங்கத்துக்கு எழுதினாள். வீட்டில் ஒருவரும் இல்லாவிடில் அவ்வழியே செல்பவர்கள் காணாத இடத்தில் வீட்டுக்காரருக்கு ஒரு துண்டுப்பிரதியை விட்டுவரலாம்.
மறுசந்திப்புகளில்
7 முன்பு ஓரளவு அக்கறை காண்பித்தவரிடம் மறுபடியும் செல்கையில், இவ்வாறு ஒருவர் சொல்லலாம்: “ஹல்லோ, (பெயர் குறிப்பிடுங்கள்.) உங்களை வீட்டில் பார்ப்பதில் நான் உண்மையாகவே சந்தோஷப்படுகிறேன். நாம் முதலில் சந்தித்தபோது, பைபிளைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் நேரமெடுத்துக் கொண்டதை பார்த்து நான் கவரப்பட்டேன். உங்களுக்கு அக்கறையூட்டுவதாய் இருக்கும் என நான் நினைக்கும் கூடுதலான தகவல் நான் வைத்திருக்கிறேன். அது இந்தத் துண்டுப்பிரதியில் காணப்படுகிறது, சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை. நீங்கள் மறுபடியும் நினைவுகூர்ந்தால், மனிதவர்க்கத்திற்கான மெய்யான மற்றும் நிரந்தரமான சமாதானத்தைப் பற்றிய பைபிளின் வாக்கைப் பற்றி நாம் பேசினோம். என்றபோதிலும், இந்த வாக்குகளை வாசிக்கையில் அநேகர் பரலோகத்தை பற்றி மட்டும் சிந்திப்பதால், சங்கீதம் 37:29 இந்த ஆசீர்வாதங்கள் இங்கு பூமியில் நடைபெறும் என்று குறிப்பிடுகிறதை கவனியுங்கள். (வசனத்தை வாசியுங்கள், துண்டுப்பிரதியில் அது எங்கு இருக்கிறது என்பதை வீட்டுக்காரருக்கு காண்பியுங்கள்.) அது அக்கறையூட்டுவதாய் இல்லையா? (அநேக பாராக்களை கலந்தாலோசியுங்கள்.) இந்தத் துண்டுப்பிரதியில் அதிக உற்சாகமூட்டும் வசனங்கள் இருக்கின்றன. அவைகள் அதே அளவு சந்தோஷமளிப்பதை நீங்கள் காண்பீர்கள். அடுத்தமுறை நான் வரும்போது, இன்றைக்கு செய்தது போல் நாம் அவைகளில் சிலவற்றை ஒன்றுசேர்ந்து வாசிக்கலாம்.”
8 உண்மையில், நம் துண்டுப்பிரதிகள் யெகோவாவிடமிருந்து வரும் பரிசுகள். திறம்பட்ட ஊழியத்தை செய்கையில், நாம் இந்த மதிப்பு வாய்ந்த உதவியை, அவருடைய துதிக்கும் நம் நித்திய ஆசீர்வாதத்துக்கும் திறமையுடன் உபயோகிப்போமாக.—நீதி. 22:29.