அக்டோபர் மாத ஊழியக் கூட்டங்கள்
அக்டோபர் 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 17 (2)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். தற்போதைய பத்திரிகைகளின் இதழ்களிலிருந்து பேச்சுக் குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—நேரடியான அணுகுமுறையோடு படிப்புகளை ஆரம்பித்தல்.” கேள்வி-பதில் சிந்திப்பு. பாராக்கள் 3 மற்றும் 4-ஐ சிந்தித்த பிறகு, படைப்பு புத்தகத்தையும், சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியையும் உபயோகித்து நேரடியான அணுகுமுறையை நடித்துக் காட்டுங்கள். நேரடியான அணுகுமுறை வீட்டுக்காரரின் அக்கறையின் அளவை தீர்மானிக்க உங்களுக்கு உதவி செய்யும். முதல் சந்திப்பில் பிரசுரங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், அளிக்கப்படாவிட்டாலும் அக்கறை காண்பித்த அனைவரையும் திரும்பவும் சென்று சந்திக்க வேண்டிய தேவையை அழுத்திக் காட்டுங்கள். இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் நேரடியான அணுகுமுறையை உபயோகித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுமாறு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: கேள்விப் பெட்டி, “நம் ராஜ்ய ஊழியம் ஒரு புதிய தோற்றத்தைப் பெறுகிறது,” தேவராஜ்ய செய்திகள். இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளுமாறு உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 157 (73), முடிவு ஜெபம்.
அக்டோபர் 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 214 (23)
10 நிமி: சபை அறிவிப்புகள், இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் உபயோகிக்கப் போகும் பத்திரிகைகளில் உள்ள குறிப்புகளை விமர்சியுங்கள். நேரம் அனுமதிக்குமேயானால் ஒன்று அல்லது இரண்டு அளிப்புகளை நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: புதிய ஊழிய ஆண்டுக்காக தனிப்பட்ட இலக்குகளை வையுங்கள். கடந்த ஊழிய ஆண்டின் போது சபை செய்த வேலைகளை ஊழிய கண்காணி விமர்சிக்கிறார். முன்னேற்றம் செய்த காரியங்களின் பேரில் அனலான பாராட்டு தெரிவியுங்கள். புதிய ஊழிய ஆண்டின் போது சபையில் இன்னுமதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கும் காரியங்களை குறிப்பிடுங்கள், நடைமுறையான ஆலோசனைகளை கொடுங்கள். வட்டார கண்காணியின் கடைசி அறிக்கையை விமர்சியுங்கள். தேவை என்பதன் பேரில் விஷயங்களை கண்டுபிடிப்பதற்கும், கொடுக்கப்பட்ட ஆலோசனையை எவ்வாறு பொருத்துவது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு இன்டெக்ஸ்-ஐ உபயோகியுங்கள். உண்மையான சேவையில் சகித்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு உற்சாகமளிக்கின்றனர். (எபி. 6:10) கடந்த ஊழிய ஆண்டின் போது நல்ல முன்னேற்றம் செய்த இரண்டு பிரஸ்தாபிகள் அல்லது பயனியர்களை பேட்டி காணுங்கள். 1992-ம் ஆண்டுக்கு அவர்கள் என்ன இலக்குகளை வைத்திருக்கின்றனர்? அநேக வருடங்களாக உண்மையோடு சேவிக்கும் ஒரு பிரஸ்தாபியையாவது அல்லது பயனியரையாவது பேட்டி காணுங்கள், அவர் அல்லது அவள் எதிர்ப்பட்ட கஷ்டங்களையும் அவைகளை எவ்வாறு யெகோவாவிடமிருந்தும், அவருடைய அமைப்பிடமிருந்தும் வந்த உதவியைக் கொண்டு அவர் மேற்கொண்டார் என்பதையும் குறிப்பிடுமாறு செய்யுங்கள். 1992-ம் ஊழிய ஆண்டின் போது, தங்களுடைய ஊழியத்தை மேம்படுத்துவதற்கு பயனுள்ள இலக்குகளை வைக்குமாறு அனைவரையுமே உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கு நம்முடைய உத்தரவாதத்தை மேற்கொள்ளுதல்.” கேள்வி-பதில் அளிப்பு. பாரா 4-ஐ சிந்திக்கையில், பல வருடங்களாக உண்மையுள்ள முன்மாதிரியாக இருக்கும் ஒரு பிரஸ்தாபியிடம் ஒரு மூப்பர் எவ்வாறு ராஜ்ய மன்றத்தில் பாராட்டு தெரிவிக்கிறார் என்பதை நடித்துக் காட்டுங்கள். உதவி செய்வதற்கு என்ன செய்யப்படலாம் என்பதை கேட்கலாம். என்றபோதிலும், பாராட்டு தெரிவிப்பதன் பேரில் அழுத்தம் வைக்கப்பட வேண்டும்.
பாட்டு 94 (59), முடிவு ஜெபம்.
அக்டோபர் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 44 (110)
10 நிமி: சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். சங்கம் நன்கொடை பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருப்பதை வாசியுங்கள், சங்கத்தின் வேலைகளுக்காகவும், சபையின் வேலைகளுக்காகவும் பிரஸ்தாபிகளின் பண ஆதரவுக்காக போற்றுதல் தெரிவியுங்கள்.
20 நிமி: “சபை புத்தகப்படிப்பு ஏற்பாடு—பகுதி 3.” சபை புத்தகப்படிப்பு நடத்தும் இரண்டு பேர் விஷயங்களை கலந்தாலோசிக்கின்றனர், சபைக்கு பொருத்துகின்றனர். ஊழிய ஏற்பாடுகளோடு பிரஸ்தாபிகள் ஒத்துழைக்கும் போது வரும் பரஸ்பரமான நன்மைகளை அழுத்திக் காட்டுங்கள். வெளி ஊழியத்திற்காக கூடுவதற்கு உபயோகிக்கப்படும் வீடுகளுக்கு மரியாதை காண்பிக்க வேண்டிய அவசியத்தை குறிப்பிடுங்கள், அவ்வாறு தங்கள் வீடுகளை உபசரிக்கும் பண்போடு கொடுப்பவர்களை பாராட்டுங்கள். (km 4/86 பக். 3) அவ்வப்போது மற்ற இடங்கள் தேவைப்படுவதால் யாராவது தன் வீட்டை உபயோகித்துக் கொள்ள கொடுப்பதற்கு விரும்பினால், அதைப் பற்றி நடத்தும் கண்காணியிடமோ அல்லது ஊழியக் கண்காணியிடமோ தெரிவிக்கலாம். ஊழிய இலக்குகளை வைப்பதைப் பற்றி கடந்த வார கலந்தாலோசிப்பிலிருந்து குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஊழியத்தில் இலக்குகளை அடைவதற்கு ஊழிய கண்காணி பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்து, உற்சாகப்படுத்தலாம்.
15 நிமி: “இளைஞர்களே—கிறிஸ்தவ உண்மைத்தவறாமை பரீட்சையில் நீங்கள் தேர்ச்சி பெறுவீர்களா?” ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 15, 1991-ல் இருக்கும் கட்டுரையின் அடிப்படையில் பேச்சு. இரட்டை வாழ்க்கை நடத்துவதின் அறிவற்ற தன்மையை அழுத்திக் காட்டுங்கள். (இந்திய மொழிகளில்: “மனதிலும் உடலிலும் சுத்தமாயிருங்கள்.” காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1991.)
பாட்டு 171 (16), முடிவு ஜெபம்.
அக்டோபர் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 187 (93)
10 நிமி: சபை அறிவிப்புகள். தற்போதைய பத்திரிகைகளிலிருந்து ஒன்று அல்லது இரண்டு குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுங்கள். இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் பங்கு கொள்ளுமாறு பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்—பகுதி 3.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ல், வெளி ஊழியத்தில் இருக்கையில், ஒரு புதியவருக்கு எவ்வாறு உதவி செய்வது என்பதை அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி நடித்துக் காட்டுமாறு செய்யுங்கள். உண்மையான எதிர்ப்புகளை மேற்கொள்வதற்கு அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபியின் ஆலோசனைகளை உபயோகித்து புதியவரோடு பயிற்சி செய்யும் பகுதியை காண்பியுங்கள்.
15 நிமி: சபை தேவைகள் அல்லது சபை பிராந்தியத்தில் உபயோகிப்பதற்கு பொருத்தமாயிருக்கும் முன்னுரைகளை கலந்தாலோசியுங்கள். நியாயங்கள் புத்தகம், பக்கங்கள் 9–15 வரை உள்ளவற்றை கலந்தாலோசிப்புக்கு அடிப்படையாக வையுங்கள். நேரடியான அணுகுமுறையை உபயோகித்து இந்த மாதம் பைபிள் படிப்புகளை ஆரம்பித்த பிரஸ்தாபிகளின் அனுபவங்களை சுருக்கமாக கூறலாம்.
பாட்டு 70 (39), முடிவு ஜெபம்.