உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/92 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 3/92 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: மார்ச்: இரண்டு பழைய 192-பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு ரூபாய் 12-க்கு. இந்திய மொழிகளில்: ஒரு பழைய 192-பக்க புத்தகம் ரூபாய் 6-க்கு. ஏப்ரல்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ20-க்கு. (இப்புத்தகம் கிடைக்கப்பெறாத மொழிகளில், இரண்டு பழைய விசேஷ அளிப்பு புத்தகங்களை ரூ12-க்கு அல்லது ஒன்றை ரூ6-க்கு அளிக்கவும்.) மே மற்றும் ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ50. ஆறு மாத சந்தாக்கள் மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ25. (மாதாந்தர இதழ்களுக்கு ஆறு-மாத சந்தா கிடையாது.) சந்தா பெற்றுக்கொள்ளப்படாத இடங்களில், இரண்டு பத்திரிகைகளும் ஒரு புரோஷுரும் ரூ8-க்கு அளிக்கப்படலாம். ஜூலை: பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? புத்தகம் ரூ12. (இந்திய மொழிகளில் அளிப்பு: ஒரு பழைய 192-பக்க புத்தகம் ரூ6.)

◼ எல்லா ஒழுங்கான பயனியர்களின் வேலைகளை காரியதரிசியும், ஊழியக் கண்காணியும் விமர்சனம் செய்ய வேண்டும். தேவைப்படும் மணிநேரங்களை அடைவது யாருக்காவது கடினமாக இருந்தால், உதவியளிக்கப்படுவதற்காக மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். சங்கத்தின் கடிதங்கள் (S-201) அக்டோபர் 1, 1991 மற்றும் அக்டோபர் 1, 1990-ஐ ஆலோசனைகளுக்காக விமர்சனம் செய்யுங்கள். நம் ராஜ்ய ஊழியம் சேர்க்கை அக்டோபர் 1986 பாராக்கள் 12-20-ஐயும் பார்க்கவும்.

◼ 1992-ம் வருட ஞாபகார்த்த ஆசரிப்பு ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமையன்று இருக்கும். பேச்சு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டாலும், ஞாபகார்த்த அப்பமும், திராட்சரசமும் பரிமாறப்படுவது சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்படக்கூடாது என்பதை தயவு செய்து நினைவில் வையுங்கள். உங்கள் பிராந்தியத்தில் சூரிய அஸ்தமனம் எப்பொழுது நிகழும் என்பதை நிர்ணயிக்க உள்ளூர் தகவல் மையங்களை கேட்டறியுங்கள். வெளி ஊழியத்திற்கான கூட்டத்தைத் தவிர வேறு எந்தக் கூட்டங்களும் அந்தத் தேதியில் நடத்தப்படக்கூடாது. வெள்ளிக்கிழமை ஒழுங்காக அட்டவணையிடப்பட்டிருக்கும் கூட்டத்தைக் கொண்டிருக்கும் சபைகள், கூடுமானால் மற்றொரு நாள் அந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஞாயிறு கூட்ட அட்டவணைகளில் எந்த மாற்றமும் இருக்காது.

◼ 1992-ல் விசேஷ பொதுப் பேச்சு ஞாபகார்த்த ஆசரிப்புக்கு முன் ஏப்ரல் 5, 1992 ஞாயிறு அன்று நடைபெறும். “உலக விவகாரங்களில் மதம் வகிக்கும் பங்கு” என்பது பொருளாக இருக்கும். வட்டார கண்காணியின் சந்திப்பை அல்லது வட்டார அசெம்ளியை கொண்டிருக்கும் சபைகள் விசேஷ பொதுப் பேச்சை அதை தொடர்ந்து வரும் ஞாயிறு, ஏப்ரல் 12, 1992 அன்று திட்டமிடுவர். ஞாயிறைத் தவிர மற்ற நாட்களில் பொது கூட்டங்களைக் கொண்டிருக்கும் சபைகள் விசேஷ பொதுப் பேச்சை ஏப்ரல் 6-11 காலப்பகுதியின் போது திட்டமிடலாம்.

◼ ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் துணைப்பயனியர் ஊழியம் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்பொழுதே திட்டங்களை போட வேண்டும். மேலும் தங்கள் விண்ணப்ப நமூனாக்களை முன்பாகவே கொடுக்க வேண்டும். இது மூப்பர்கள் தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகள் செய்வதற்கும், போதுமான பிரசுரங்கள் கையிருப்பில் வைக்கவும் உதவி செய்யும்.

◼ ஞாபகார்த்த பைபிள் வாசிப்பு திட்டம்: 1992 நாட்காட்டியில் காண்பிக்கப்பட்டிருக்கும் அட்டவணை:

ஞாயிறு, ஏப்ரல் 12:

நிசான் 9 மாற்கு 14:3-9; 11:1-11

திங்கள், ஏப்ரல் 13:

நிசான் 10 மாற்கு 11:12-19

செவ்வாய், ஏப்ரல் 14:

நிசான் 11 மாற்கு 11:20–12:27

புதன், ஏப்ரல் 15:

நிசான் 12 மாற்கு 14:1, 2, 10, 11

வியாழன், ஏப்ரல் 16:

நிசான் 13 மாற்கு 14:12-16

வெள்ளி, ஏப்ரல் 17:

நிசான் 14 மாற்கு 14:17-72

◼ தயவுசெய்து பிரசுர ஆர்டர்களை மாதத்துக்கு ஒரு முறைக்கு மேல் அனுப்பாதீர்கள்.

◼ கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்: ஆங்கிலம்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியால் ஏவப்பட்டவை, பிரயோஜனமுள்ளவை” (திருத்தப்பட்டது)

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

ஆங்கிலம்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்; மரித்தோரின் ஆவிகள்—அவை உங்களுக்கு உதவமுடியுமா அல்லது தீங்கிழைக்க முடியுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? ஹிந்தி: விழித்தெழு! புரோஷுர் 5-1 நேப்பாலி: விழித்தெழு! புரோஷுர்கள் 0-9; 10-1; 11-1; 12-1 தமிழ்: வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் தெலுங்கு: விழித்தெழு! புரோஷுர் 9-1; இரத்தம் உங்கள் உயிரை எப்படி காப்பாற்ற முடியும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்