ஜூலை மாத ஊழியக் கூட்டங்கள்
ஜூலை 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 80 (18)
5 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும்.
10 நிமி: “1992 ‘ஒளி கொண்டுசெல்வோர்’ மாவட்ட மாநாடு”—பகுதி 1. பாராக்கள் 1-11 சபையாரோடு கலந்தாலோசிப்பு. தனிப்பட்டவிதமாகவும் வெளிஊழியத்திலும் தகவல்களை எவ்வாறு அவர்கள் உபயோகிக்கலாம் என்பதை தீர்மானிக்கும் நோக்கத்தோடு எல்லாரையும் கவனம் செலுத்த உற்சாகப்படுத்தவும். மாநாட்டில் கலந்து கொள்ளும் தங்கள் பைபிள் மாணாக்கர்களோடு பொருத்தமான குறிப்புளை கலந்தாலோசிக்க பிரஸ்தாபிகள் விரும்பக்கூடும். குறிப்பிட்ட எச்சரிக்கைகளை மனதில் வையுங்கள். நம் எல்லாருக்கும் போதுமான ஓய்வு தேவையாக இருப்பதால் மாநாட்டின் போது பிந்திய-இரவு பொழுதுபோக்குக்காக யாரும் திட்டமிடக்கூடாது. மாநாடுகளுக்கான ஆர்வத்தை உருவாக்கவும்.
15 நிமி: “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசத்தைக் கட்டியமைத்தல்.” கேள்விகளும் பதில்களும். இந்த மாதம் வெளிஊழியத்தில் நம்முடைய வேலைக்கான ஆர்வத்தை கட்டியமைக்கவும். உங்கள் பிராந்தியத்திலுள்ள ஆட்கள் பைபிளில் விசுவாசத்தை கட்டியமைக்க பிரசுரம் எப்படி உதவும் என்பதைக் காட்டவும்.
15 நிமி: “இந்த மாதத்திற்கான அளிப்பை அறிமுகப்படுத்துதல்.” கட்டுரையிலுள்ள சில ஆலோசனைகளை கலந்தாலோசிக்கவும் மற்றும் நடித்துக்காட்டவும். படிப்பை ஆரம்பிப்பதற்கு நேரடியான அணுகுமுறையை எவ்வாறு உபயோகிப்பது என்பதை ஒரு நடிப்பில் நடித்துக் காட்டவும். மேலும் எல்லா ஆதாரங்களும் எவ்வாறு பைபிள் ஏவப்பட்டெழுதப்பட்டதென்ற குறிப்பைக் காட்டுகிறது என்பதைக் காட்டவும்.
பாட்டு 225 (44), முடிவு ஜெபம்.
ஜூலை 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 145 (115)
10 நிமி: அறிவிப்புகள். உள்ளூர் பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்போது பயனளிப்பதாக தாங்கள் கண்டுணர்ந்த அறிமுகங்களை இரண்டு ஒழுங்கான அல்லது துணைப்பயனியர்கள் சொல்ல முன்கூட்டியே தயாரிக்கவும்.
20 நிமி: “1992 ‘ஒளி கொண்டுசெல்வோர்’ மாவட்ட மாநாடு”—பகுதி 2. பாராக்கள் 12-21 சபையாரோடு கலந்தாலோசிப்பு மற்றும் நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, “மாவட்ட மாநாடு நினைப்பூட்டுதல்கள்,” சுருக்கமான விமரிசனம். மாநாடுகளில் கலந்து கொள்வதற்குமுன் ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 15, 1989 பக்கங்கள் 10-20-ல் உள்ள குறிப்புகளை குடும்பத் தொகுதிகளாக விமரிசனம் செய்ய உற்சாகப்படுத்தவும். போக்குவரத்து மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகள் தங்களுக்கு இருக்கிறதா என்பதை பிரஸ்தாபிகள் இறுதியாக சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை நினைப்பூட்டுங்கள். தங்கள் அடையாள அட்டையை அணிந்துகொண்டிருக்கவும் பிரயாணம் செய்யும் போது, உணவகம், தங்குமிடம் போன்ற இடங்களில் சாட்சிகொடுக்கவும் அனைவரையும் உற்சாகப்படுத்தவும்.
15 நிமி: புது நிலைக்குக் கொணர்ந்த மருத்துவ பொதுக்கட்டளை/விடுவிப்பு அட்டையைக் குறித்து அக்டோபர் 15, 1991 என தேதியிட்ட சங்கத்தின் கடிதத்தை வாசிக்கவும், கலந்தாலோசிக்கவும். இந்தப் புதிய அட்டையை தற்போது கொண்டில்லாதவர்கள் உடனடியாக புத்தகப் பிரிவிலிருந்து ஒன்றை வாங்கி, சரியாக பூர்த்திசெய்து, இரண்டு சட்டப்படியான சாட்சிகளால் கையொப்பமிடப்பட்டதைக் கொண்டிருக்கும்படி உற்சாகப்படுத்தவும். நேரம் அனுமதிக்குமளவிற்கு “யெகோவா போதித்திருக்கிறபடி நடவுங்கள்,” என்ற ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 15, 1991-ன் கட்டுரையில் முக்கியமாக பக்கங்கள் 15-18-ஐ கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 61 (59), முடிவு ஜெபம்.
ஜூலை 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 34 (8)
10 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாத வெளிஊழிய அறிக்கையின் சிறப்பு அம்சங்களைக் குறிப்பிடவும். மார்ச் வெளிஊழிய அறிக்கையில் உள்ளூர் சபையின் பங்கு என்ன என்பதைக் காட்டவும். கணக்கு அறிக்கையைக் கொடுக்கவும். வெளி ஊழியத்தில் சபை செய்த வேலையையும் சபையின் தாராளமான பண ஆதரவையும் பாராட்டவும்.
20 நிமி: “சந்தர்ப்ப சாட்சி கொடுத்தலில் நீங்கள் பங்கு கொள்வீர்களா?” கலந்தாலோசித்து, கட்டுரையில் உள்ள குறிப்புகளை நடித்துக்காட்டவும். நாம் எல்லா சமயங்களிலும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறோம் என்ற உண்மையை அழுத்திக் காண்பிக்கவும், எனவே நாம் சாட்சி கொடுக்க சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி இருக்க வேண்டும். தனிப்பட்டவர்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தலில் பங்கு கொண்டு நல்ல பலன்களடைந்ததை அல்லது சபையில் உள்ள ஒருவர் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தலின் காரணமாக சத்தியத்தில் அக்கறை காட்டியது போன்ற இரண்டு சிறிய அனுபவங்களைக் கொண்டிருக்க முன்கூட்டியே தயாரிக்கவும்.
15 நிமி: கலந்தாலோசிப்பும் பைபிள் கலந்தாலோசிப்பின் நடிப்புகளும் மற்றும் 2 தீமோத்தேயு 3:16 மற்றும் சங்கீதம் 119:159, 160-ஐ உபயோகித்து பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தின் அளிப்பும். 2 தீமோத்தேயு 3:16-ஐ மட்டுமே பயன்படுத்தி எளிமையான அளிப்பை எப்படி புதியவர்களும் இளையவர்களும் அளிக்கலாம் என்பதைக் காட்டவும். நாம் அச்சு செலவுகளுக்காக ஒரு சிறிய நன்கொடையை மட்டுமே பெற்றுக் கொண்டு புத்தகத்தைக் அளிக்கிறோம் மற்றும் அது ஒரு வியாபாரமல்ல என்பதை நடிப்புகளில் தெளிவுபடுத்துங்கள். இது மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படும் உலகளாவிய கல்வி புகட்டும் வேலையில் ஒரு பாகம் என்பது வீட்டுக்காரருக்கு சொல்லப்படலாம், வீட்டுக்காரர் புத்தகத்தை முடிந்தமட்டும் சீக்கிரத்தில் படிக்க ஆரம்பிக்கும்படி உற்சாகப்படுத்தி, ஒரு மறுசந்திப்புக்கு அடித்தளத்தை அமைக்கவும்.
பாட்டு 154 (72), முடிவு ஜெபம்.
ஜூலை 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 173 (15)
5 நிமி: அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். அந்தக் குறிப்பை கையாளும்போது 1987 வருடாந்தரப் புத்தகத்தில் 1986-ன் ஊழிய ஆண்டில் அந்தக் கிளை அலுவலகத்தின் ஊழிய ஆண்டு அறிக்கையில் உள்ள தகவலுடன் தற்போதைய அறிக்கையை ஒப்பிடவும்.
20 நிமி: “பயனியர் ஊழியம்—அன்பின் ஒரு வெளிக்காட்டு.” கேள்விகளும் பதில்களும். பாராக்கள் 3, 4-ஐ கலந்தாலோசித்த பிறகு மூன்று ஒழுங்கான பயனியர்களை (அல்லது ஒழுங்காக அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப துணைப்பயனியர் ஊழியம் செய்யும் பிரஸ்தாபிகளை) பேட்டிகாணவும், கூடுமானால், பள்ளி படிப்பை முடித்த உடனேயே ஊழியம் செய்ய ஆரம்பித்த இளம் ஒழுங்கான பயனியரை அதில் சேர்த்துக் கொள்ளவும். பயனியர் செய்ய எவ்வாறு காரியங்களை ஒழுங்கமைத்தார்கள், அவ்வாறு செய்ய அவர்களை எது தூண்டியது, என்ன பொருள்சம்பந்தமான தியாகங்களை அவர்கள் செய்ய வேண்டியிருந்தது, ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்யும்போது என்ன ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் ஆகியவற்றை கேட்கவும்.
20 நிமி: “வேதப்படிப்பை ஆரம்பிக்கும் இலக்கோடு திரும்ப சென்று சந்தித்தல்.” கலந்தாலோசிப்பும் நடிப்புகளும். பாரா 3-ல் உள்ள குறிப்பிடப்பட்ட பைபிள் கலந்தாலோசிப்பை நடித்துக்காட்டவும். பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? புத்தகத்தில் பக்கங்கள் 170-2, பாராக்கள் 23-26-ஐ வேதப்படிப்பை ஆரம்பிக்க அடிப்படையாக உபயோகியுங்கள்.
பாட்டு 135 (72), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 90 (42)
10 நிமி: அறிவிப்புகள். இந்த வார இறுதியில் வெளி ஊழியத்தில் பத்திரிகைகளை அளிக்கும்போது எப்படி வேதப்பூர்வ சம்பாஷணையைக் கொண்டிருக்கலாம் என்பதற்கு இரண்டு சிறிய நடிப்புகளைக் கொண்டிருங்கள்.
15 நிமி: “அப்போஸ்தல வாரிசுரிமை.” “போப் அப்போஸ்தலனாகிய பேதுருவின் ஒரு வாரிசு அல்லவா?” என்ற கேள்வியை எழுப்பிய ஓர் ஆளை மறுசந்திப்பு செய்யும் பயனியரோடு ஊழியக்கண்காணி செல்கிறார். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 37 முதல் பக்கம் 39-ல் முதல் தலைப்பு வரை உள்ளவற்றை கலந்தாலோசிப்புக்கு அடிப்படையாக உபயோகிக்கவும்.
20 நிமி: “சுய-தியாக ஆவியைக் கொண்டிருங்கள்!” பிப்ரவரி 1, 1992 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 25-8-ல் உள்ள கட்டுரையின் பேரில் பேச்சு. (இந்திய மொழிகளில் மாதம் இருமுறை வரும் இதழ்களில் காவற்கோபுரம், மே 1, 1992 பக்கங்கள் 25-28-ல் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.) சுய-தியாக ஆவியைக் கொண்டிருப்பது விருப்பப்படியான தெரிவு அல்ல ஆனால் ஒரு கிறிஸ்தவத் தேவை ஆகும் என்பதை அழுத்திக் கூறவும். ராஜ்ய அக்கறைகளை முதலாவதாக தேடித் தொடருவதற்கு நாம் பொருள்சம்பந்தமான காரியங்களையும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் தியாகம் செய்வதன் மூலம் நாம் இழந்துவிடமாட்டோம். (மாதாந்தர மொழிகளில் காவற்கோபுர பத்திரிகையை உபயோகிக்கும் சபைகள் காவற்கோபுரம், ஜூன் 1, 1992 பக்கம் 29-ல் “ஏன் மனத்தாழ்மையைத் தரித்துக் கொள்ள வேண்டும்” என்ற கட்டுரையை உபயோகிக்கலாம்.)
பாட்டு 167 (110), முடிவு ஜெபம்.