மிகப்பெரிய மனிதர் புத்தகத்தில்பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்
1 வீட்டுப் பைபிள் படிப்பைக் கொண்டிருப்பது உங்களுக்கும் வீட்டுக்காரருக்கும் இருவருக்கும் அதிகமாக மகிழ்ந்து அனுபவிக்கத்தக்கதாகவும் பலனளிப்பதாகவும் இருக்கும். பைபிள் அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதன் மகிழ்ச்சியோடு ஒப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை.—நீதி. 11:25.
2 கடைசி நாட்களின் அடையாளம்: நீங்கள் மேல் கட்டுரையிலுள்ள ஆலோசனையைப் பயன்படுத்தி, இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதியுடன் உங்களுடைய கலந்தாலோசிப்பைத் தொடங்கியிருந்தீர்களானால், இப்பொழுது மிகப்பெரிய மனிதர் புத்தகத்தின் 111-வது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு படிப்பை நீங்கள் எவ்வாறு ஆரம்பிக்கலாம்? புத்தகத்தை 111-வது அதிகாரத்திற்குத் திறந்து, முதல் மூன்று பத்திகளை வாசியுங்கள். பிறகு நீங்கள் அந்த அதிகாரத்தின் கடைசியிலுள்ள முதல் கேள்வியைக் கேட்கக்கூடும்: “அப்போஸ்தலர்களின் கேள்வியை எது தூண்டுகிறது? ஆனால் அவர்கள் வேறு எதையும் தங்கள் மனங்களில் கொண்டிருக்கின்றனர்?” பதிலின்பேரில் நியாயங்காட்டிப் பேசுவதற்கு வீட்டுக்காரருக்கு உதவிசெய்து, போதிப்பதற்கு விளக்கப்படத்தைப் பயன்படுத்துங்கள். நான்காவது பத்தியிலிருந்து ஆறாவது பத்தி வரை வாசித்தப் பிறகு, இரண்டாவது கேள்வியைக் கேளுங்கள்: “இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் எந்தப் பாகம் பொ.ச. 70-ல் நிறைவேற்றமடைகிறது? ஆனால் அப்போது என்ன நடைபெறவில்லை?” வீட்டுக்காரர் அக்கறையுடையவராகவும் நேரத்தையுடையவராகவும் தோன்றுவாராகில், உங்களுடைய கலந்தாலோசிப்பைத் தொடருங்கள்.
3 வீட்டுக்காரருக்கு மற்றொரு சமயம் அதிகப் பொருத்தமானதாய் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறபோது, நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “எப்பொழுது இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரும் என்பதைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?” பின்பு நீங்கள் இந்தக் கேள்விக்கான பதிலோடு திரும்பிச்செல்ல ஏற்பாடுசெய்யலாம்.
4 ஒரு சமாதானமான உலகம் சாத்தியமா? மிகப்பெரிய மனிதர் புத்தகத்துக்கு வழிநடத்துவதற்கு, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியை நீங்கள் பயன்படுத்தியிருந்தால், ஒரு பைபிள் படிப்பைத் தொடங்குவதற்கு அதிகாரம் 133 எவ்வாறு உதவியாய் இருக்கமுடியும்?
இரண்டு பேதுரு 3:13-ஐ வாசித்தப் பிறகு, அந்தத் துண்டுப்பிரதியின் 3-வது பக்கத்திலுள்ள இரண்டாவது பத்தியை நீங்கள் வாசித்து அல்லது சுருக்கமாகக் கூறி, பிறகு இவ்வாறு சொல்லலாம்:
◼ “கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, யெகோவாவின் ராஜ்யத்தின் அரசராக இருப்பார். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் புத்தகம் இயேசுவை எவ்வாறு விவரிக்கிறது என்பதையும் எதிர்காலத்தில் அவர் எதைச் சாதிப்பார் என்பதைப்பற்றி சொல்வதையும் கவனியுங்கள்.” பிறகு முழு அதிகாரத்தையும் வாசியுங்கள். அந்த அதிகாரத்தின் முடிவிலுள்ள முதல் கேள்வியை வீட்டுக்காரரிடம் கேளுங்கள்: “‘அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் என்ன சந்தோஷமான சிலாக்கியம் இருக்கும்?’ [பதிலுக்காக அனுமதியுங்கள். இதேபோன்று மற்ற கேள்விகளும் கலந்தாலோசிக்கப்படலாம்.] இயேசு, ராஜாவாக ஆளுகிற புதிய பூமியின் ஒரு பாகமாய் இருப்பதற்கு நீங்கள் விரும்புவீர்களா? இது எவ்வாறு உங்களுடைய அனுபவமாய் இருக்கமுடியும் என்பதைப் பைபிளிலிருந்து காண உதவிசெய்வதற்கு ஒவ்வொரு வாரமும் வாய்ப்பைக் கொண்டிருக்க நான் விரும்புகிறேன்.”
5 சில தனிப்பட்ட ஆட்கள் இந்தச் சந்திப்பில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய மேலுமான கலந்தாலோசிப்பில் அக்கறையுடையவர்களாயும் இருக்கலாம்.
நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நான்கு சுவிசேஷங்களில் கொடுக்கப்பட்டுள்ளபடி இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு இந்தப் புத்தகத்தில் முயற்சிசெய்யப்பட்டிருக்கிறது. பூமியில் இயேசுவின் வாழ்க்கையைப்பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள நீங்கள் விரும்புவீர்களா?” வீட்டுக்காரர் ஒத்துக்கொள்கிறவராய் இருந்தால், அதிகாரம் 15-ல் கொடுக்கப்பட்டுள்ள இயேசுவினுடைய அற்புதங்களில் முதலாவதைக் கலந்தாலோசிப்பதற்கு நீங்கள் விரும்பக்கூடும்.
6 நீதிக்கான அன்பைக் கொண்டிருக்கும் நேர்மையான மக்களும் அவர்கள் எதிர்ப்படுகிற பிரச்னைகளுக்கான பரிகாரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறவர்களும் இன்னும் அநேகர் இருக்கின்றனர். உண்மையாகவே, ஒரு பைபிள் படிப்பின்மூலம் இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பகிர்ந்துகொள்ள அளிப்பது, மிக அதிக பலனளிக்கும் ஒரு முயற்சியாகும்.