மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை அறிமுகப்படுத்ததுண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்
1 ஜூன் மாதத்தின்போது, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் என்ற புத்தகத்தை நாம் அளித்துக்கொண்டிருப்போம். ஒரு சுருக்கமான வேதப்பூர்வ பிரசங்கத்தைக் கொடுத்து, இந்தப் புத்தகத்தின் கடைசி அதிகாரத்திலுள்ள படத்தை வீட்டுக்காரருக்குக் காண்பித்து, கிறிஸ்துவின் ஆட்சி இத்தகைய நிலைமைகளைக் கொண்டுவரும் என்பதைச் சுட்டிக்காட்டிய பிறகு, இதை நேரடியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் செய்யலாம். மற்றொரு முறையாக, இந்தப் புத்தகத்தில் அக்கறையைத் தூண்டுவதற்குத் துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தலாம்.
2 இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? துண்டுப்பிரதிகள் சம்பாஷணைகளைத் தொடங்குவதில் பேருதவியாய் இருக்கின்றன. அவை வீட்டுக்காரர்களின் கவனத்தைக் கவருவதற்கு உதவிசெய்கின்றன, ஏனென்றால் துண்டுப்பிரதிகள் அவர்களைத் தனிப்பட்ட விதமாகப் பாதிக்கிற அர்த்தமுள்ள பொருள்கள் சம்பந்தமாய் இருக்கின்றன.
உதாரணமாக, இதுபோன்று ஏதாவது நீங்கள் சொல்லக்கூடும்:
◼ “ஜனங்களோடு பேசுகையில், . . . [செய்திகளில் தற்போதைய சம்பவத்தைத் தெரிந்தெடுங்கள்] பேரில் அநேகர் தங்களுடைய அக்கறையைக் குறிப்பிடுவதை நாங்கள் கவனித்திருக்கிறோம். உலக நிலைமைகள் மோசமானவற்றிலிருந்து படுமோசமாக ஆகிவருவதாகத் தோன்றுகிறது. இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா என்றுங்கூட சிலர் யோசிக்கின்றனர். அதைக்குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? [வீட்டுக்காரர் பதிலளிக்க அனுமதியுங்கள். அநேக மக்கள் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கின்றனர்.] நான் உங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு விரும்புகிற உற்சாகமளிக்கும் ஒன்றை வாசித்தேன். அது இந்தத் துண்டுப்பிரதியில் இருக்கிறது. [இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதியை வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டு, நீங்கள் அதேபோன்ற ஒரு துண்டுப்பிரதியைக் கையில் பிடித்துக்கொள்ளுங்கள்.] இயேசு எவ்வாறு தீர்க்கதரிசனமுரைத்தார் என்பதைக் கவனியுங்கள் . . . ” உங்களுடைய அறிமுகத்தில் குறிப்பிட்ட தற்போதைய சம்பவத்தோடு ஒத்திருக்கிற ஒரு பத்தியைப் பக்கம் 4 அல்லது 5-லிருந்து வாசியுங்கள். பிறகு மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள். இது பொருத்தமானதாய்த் தோன்றுமானால், அதிகாரம் 111-ல் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டுள்ள இயேசுவின் தீர்க்கத்தரிசனத்தின்பேரிலுள்ள கூடுதலான தகவலுக்கு திருப்புங்கள். விட்டுவருவதற்கு முன்பாக, இயேசுவையும் அவர்மூலமாய் யெகோவாவையும் அறிந்துகொள்வதன்மூலம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற இந்தப் புத்தகம் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை நீங்கள் சுருக்கமாக விளக்கலாம். (யோவா. 17:3) அதோடு நீங்கள் வரும்போது, கலந்துபேசுவதற்கான ஒரு பொருளின்பேரில் கேள்வியை எழுப்புவதற்கு நிச்சயமாயிருங்கள்.
3 சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை: சமாதானமான புதிய உலகில் வாழ்வது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? பொதுவாக மக்கள், அழகிய விலங்குகள் ஒன்றுக்கொன்று சமாதானத்தில் வாழ்வதோடுகூடிய கம்பீரமான ஆறுகளையும் அமைதியான பள்ளத்தாக்குகளின் வனப்புமிகுந்த காட்சிகளையும் நினைக்கிறார்கள். தற்கால உலக நிலைமைகளினால் துயரப்படுகிறவர்கள், சமாதானமான புதிய உலகத்தைப்பற்றிய எதிர்பார்ப்பை அதிக புத்துயிரளிப்பதாகக் காணக்கூடும்.
4 புத்துயிரளிக்கக்கூடியதும் இன்பமானதுமாகிய ஏதோவொன்றை உங்களுடைய அயலகத்தார், உங்களுடைய உடன் வேலையாட்கள், வீட்டுக்கு வீடு நீங்கள் சந்திக்கிறவர்கள் ஆகியோருக்கு அளிப்பதற்கு நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா?
“சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை” என்ற துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி, நீங்கள் இதுபோன்று ஏதாவது சொல்லலாம்:
◼ “இந்தத் துண்டுப்பிரதியின் பக்கத்தில் காட்டப்பட்டிருக்கிறதுபோல, மக்கள் சமாதானத்துடன் வாழ்வது எப்பொழுதாவது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [வீட்டுக்காரர் பதிலளிக்க அனுமதியுங்கள்.] பக்கம் 2-லுள்ள முதல் பத்தியின் கடைசி வாக்கியத்தைத் தயவுசெய்து பாருங்கள். அது இவ்வாறு கேட்கிறது: ‘ஆனால் இந்நிலைமைகள் பூமியில் எப்போதாவது நிலவியிருக்குமென நம்புவது வெறும் கனவுதானா, அல்லது மனக்கற்பனையா?’ [பிறகு அந்தத் துண்டுப்பிரதியிலுள்ள அடுத்த பத்தியை வாசியுங்கள்.] புதிய வானங்களும் புதிய பூமியும்பற்றிய அந்த மேற்கோள், பைபிளில் 2 பேதுரு 3:13-ல் இருக்கிறது. உங்களிடம் ஒரு பைபிள் இருக்குமானால், நாம் சங்கீதம் 104:5-ஐ வாசித்து, பூமியின் எதிர்காலத்தைக் குறித்து அதிகத்தைக் கற்றுக்கொள்ளும்படிக்கு, நீங்கள் தயவுசெய்து அதைக் கொண்டுவரமுடியுமா.” அல்லது நீங்கள் வெறுமனே அந்த வசனத்தை உங்கள் பைபிளிலிருந்து வாசிக்கலாம். பின்பு கலந்தாலோசிப்பை மிகப்பெரிய மனிதர் புத்தகம், அதிகாரம் 133-க்குத் திருப்புங்கள்.
5 நிலத்தில் ஊன்றுவிக்கப்பட்டிருக்கிற விதைக்கு ‘நீர்’ ஊற்றுவதற்கு மேலுமான மறுசந்திப்புகள் செய்யவேண்டியது அவசியம். (1 கொ. 3:6, 7) முதல் சந்திப்பின்போதோ உங்களுடைய மறுசந்திப்பின்போதோ, மிகப்பெரிய மனிதர் புத்தகத்தில் ஒரு படிப்பு எவ்வாறு ஆரம்பிக்கப்படலாம் என்பதைப்பற்றிக் கீழேயுள்ள கட்டுரை குறிப்பிடுகிறது.