ஆகஸ்ட் ஊழியக் கூட்டங்கள்
ஆகஸ்ட் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 63 (32)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். சமீபத்திய பத்திரிகைகளிலிருந்து பேச்சுக் குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். இந்த வார இறுதியில் அனைவரும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“மக்களை கவனமாகச் செவிகொடுக்கச்செய்ய பிரயாசப்படுங்கள்.” சபையாரோடு கலந்துபேசுங்கள். ஒவ்வொரு வீட்டுக்காரரையும் தனி நபராக, அவரோடு ஒரு கலந்துரையாடலைக் கொண்டிருக்கும் நோக்கத்தோடு, நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தைச் சிறப்பித்துக்காட்டுங்கள். பத்திகள் 2 மற்றும் 3-லுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் சுருக்கமானப் பிரசங்கத்தைக் கொண்டிருங்கள். வெளி ஊழியத்தில் பத்திரிகைகளை ஒழுங்காக உபயோகிப்பதை அழுத்திக்காட்டுங்கள்.
15 நிமி:“பயனுள்ள விளைவுகளை உண்டுபண்ணத் துண்டுப்பிரதிகளை உபயோகித்தல்.” சேர்க்கையிலுள்ள முதல் 8 பத்திகளின் கேள்வி-பதில் கலந்துரையாடல். எல்லா பத்திகளையும் இடக்குறிப்புக் கொடுக்கப்பட்ட வசனங்களையும் வாசித்து, தகுந்தப் பொருத்தத்தைச் செய்யுங்கள். அடுத்த வாரத்தில் மீதமுள்ள எட்டுப் பத்திகளை முடிப்பதற்குத் தயார்செய்யும்படி சபையாருக்கு நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 193 (103), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 70 (39)
10 நிமி:சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கையும் நன்கொடை ஒப்புகைகளும் உட்பட. உள்ளூர் மற்றும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக அளித்த பண சம்பந்தமான ஆதரவுக்காக சபையாரைப் பாராட்டுங்கள்.
15 நிமி:“பயனுள்ள விளைவுகளை உண்டுபண்ணத் துண்டுப்பிரதிகளை உபயோகித்தல்.” பத்திகள் 9-16-ன் கேள்வி-பதில் கலந்துரையாடல். எல்லா பத்திகளையும் இடக்குறிப்புக் கொடுக்கப்பட்ட வசனங்களையும் வாசித்து, தகுந்தப் பொருத்தத்தைச் செய்யுங்கள். கூடுதலான குறிப்புகளை ஜூன் 1993 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 1-லிருந்து சிறப்பித்துக்காட்டுங்கள்.
20 நிமி:“மக்கள் எவ்வாறு என்றும் வாழலாம் என்பதைக் கற்றுக்கொள்ள உதவிசெய்யத் திரும்பிச்செல்லுங்கள்.” கேள்வி-பதில் கலந்துரையாடல். பத்திகள் 5 மற்றும் 6-ல் காட்டப்பட்டுள்ள பிரசங்கத்தை அடிப்படையாக வைத்து மறு சந்திப்பு நடிப்பைக் கொண்டிருங்கள்.
பாட்டு 71 (96), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 20 (55)
10 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகள் ஒன்றில் ஆஜராயிருப்பதற்காக முன்கூட்டியே திட்டங்களைச் செய்வதற்கு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள், இந்தியாவில் அதன் தொடர் அடுத்த மாதத்தில் ஆரம்பமாகிறது. மிக சமீபமாகவுள்ள மாநாட்டின் தேதிகளையும் இடத்தையும் குறிப்பிடுங்கள். வார இறுதி நாட்களில் ஊழிய நடவடிக்கையில் பங்குகொள்வதற்கும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:என்றும் வாழலாம் புத்தகத்தின் மதிப்பை விளக்கிக்காட்டுங்கள். இந்தப் பிரசுரம் பயன்படுத்தப்பட்ட ஆண்டுகளிலுள்ள அதிகரிப்புகளைச் சுட்டிக்காட்டுவதற்கு எண்ணிக்கைகளை மேற்கோள் காட்டலாம். இந்தப் புத்தகத்தைப் படித்ததன்மூலம் அநேகர் சத்தியத்தைக் கற்றிருக்கின்றனர். சத்தியத்திற்கு வரும்போது இந்தப் புத்தகத்தைப் படித்த ஒன்றிரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். அதிலிருந்து படித்து எதை மதித்துணர்ந்தார்கள் என்பதையும் வெளி ஊழியத்தில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் அவர்களைச் சொல்லச்சொல்லுங்கள். அதை ஆர்வத்தோடு அளிக்கும்படிக்குச் சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“புதிய மற்றும் அனுபவம்வாய்ந்த ஊழியருக்கான தேவைகள்.” மூப்பரால் கையாளப்படும் கேள்வி-பதில் கலந்துரையாடல். ஆர்வமான ஆனால் உள்ளூர் சபைத் தேவைகளுக்குப் பொருந்துகிற சுருக்கமானக் குறிப்புகளோடு முடியுங்கள்.
பாட்டு 6 (4), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 148 (28)
10 நிமி:சபை அறிவிப்புகள்.
20 நிமி:“பைபிள் படிப்புகளுக்காக ஊக்கமாகத் தேடுங்கள்.” ஊழியக் கண்காணியால் கையாளப்படும் கேள்வி-பதில் கலந்துரையாடல் கட்டுரை. இடக்குறிப்புக் கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களையும் வாசித்துப் பொருத்துங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சபையின் பைபிள் படிப்பு வேலையின் வளர்ச்சியை மறுபார்வை செய்யுங்கள், மேலும் சபைத் தேவைகளுக்கேற்ப முடிவான குறிப்புகளை விளக்கிக்கூறுங்கள்.
15 நிமி:நம்முடைய பைபிள் படிப்பில் தேதிகளின் முக்கியத்துவம். நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்தில் பக்கம் 93-லுள்ள “சொற்பொருள் விளக்கம்” என்பதன்கீழுள்ள தகவலின்பேரில் சுருக்கமான பேச்சுக்குப் பிறகு, “தேதிகள்” என்பதன்கீழுள்ள மீதமுள்ள தகவலைச் சபையாரோடு கலந்துரையாடுங்கள். “கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டதென யெகோவாவின் சாட்சிகள் ஏன் சொல்கின்றனர்?” என்பதைச் சிந்தியுங்கள். இந்தத் தகவல், ராஜ்ய செய்தியை ஆதரித்துப் பேசுவதற்கு ஆயத்தமாயிருக்கப் புதியவர்களுக்கு எவ்வாறு உதவிசெய்கிறது என்பதை விளக்கிக் காட்டுங்கள்.
பாட்டு 43 (11), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 156 (118)
5 நிமி:சபை அறிவிப்புகள்.
15 நிமி:“உங்கள் சேவையில் முழு-ஆத்துமாவோடிருங்கள்.” மூப்பரின் பேச்சு. பத்தி 2-ஐ கலந்தாலோசிக்கையில், காவற்கோபுரம் மேற்கோளின்பேரில் பொருத்தமான குறிப்புகள் அளியுங்கள். முடிவாக மல்கியா 3:10-ஐ வாசித்துப் பொருத்துங்கள்.
10 நிமி:“பயனுள்ள விளைவுகளை உண்டுபண்ணத் துண்டுப்பிரதிகளை உபயோகித்தல்.” (2 நிமி.) கட்டுரையின் முக்கிய குறிப்புகளைச் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். காட்சி I (3 நிமி.) பத்தி 5-ல் காட்டப்பட்டுள்ள ஆலோசனையை நடித்துக்காட்டுங்கள். காட்சி II (3 நிமி.) பத்தி 8 அல்லது 14-ல் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகள் ஒன்றைப் பயன்படுத்தி சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு ஒரு துண்டுப்பிரதியின் பயனை நடித்துக்காட்டுங்கள். (2 நிமி.) வீடுகளிலும் சந்தர்ப்பச் சாட்சி கொடுத்தலிலும் துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துவதற்கிருக்கிற அதிகமான சாத்தியங்களை மறுபார்வை செய்து, ஆர்வமான முடிவுரையைக் கொடுங்கள்.
15 நிமி: சபைத் தேவைகள். கடந்த சந்திப்பின்போது வட்டாரக் கண்காணி கொடுத்த உற்சாமூட்டுதலின்பேரில் கலந்துபேசலாம். ஊழிய ஆண்டு 1993-ற்கான அனைத்து அறிக்கைகளும் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதைச் சகோதரர்கள் சரிபார்ப்பதற்கு நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 31 (51), முடிவு ஜெபம்.