மற்றவர்கள் கடவுளுடைய குமாரன், இயேசு கிறிஸ்துவைப்பற்றி கற்றுக்கொள்ள உதவுங்கள்
1 கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டுகிறவர்களும் மற்றவர்களும், வருடத்தின் எந்தக் காலத்தையும்விட இயேசுவுக்கு அதிகச் சிந்தனையைக் கொடுக்கும் மாதம் டிசம்பர். அதனால், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை முக்கியப்படுத்திக் காண்பிப்பதற்கு இது ஒரு சிறந்த மாதமாயிருக்கிறது. இது ஒரு விலைமதிக்க முடியாத பிரசுரமாக இருப்பதால், பொருத்தமாயிருக்கும்போது ஊழியத்தில் இதை அளிப்பதற்கும் வீட்டுக்காரர்கள் அதிலிருந்து பிரயோஜனமடைய இதை அவர்களுக்கு அளிப்பதற்கும் நாம் எல்லா முயற்சியும் செய்யவேண்டும். அதை நாம் எவ்வாறு செய்யலாம்?
2 இயேசுவின்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிற ஒரு பைபிள் அடிப்படையிலான சம்பாஷணைக்குள் நேரடியாகச் செல்ல முயலுங்கள்.
வீட்டுக்காரரை வாழ்த்திய பிறகு, நீங்கள் இதுபோன்ற ஒன்றை சொல்லலாம்:
◼ “இன்றைக்கு நாங்கள் எங்களுடைய அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம், தங்களுடைய பைபிளில் என்றென்றும் வாழ்வதைப் பற்றி அவர்கள் வாசிக்கும்போது என்ன நினைக்கிறார்கள் என்பதைக்குறித்து கேட்டுவருகிறோம். [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] இது விசேஷித்த அக்கறைக்குரியதாய் இருக்கிறது, ஏனென்றால் அதன் சாத்தியத்தைக் குறித்து பைபிள் சுமார் 40 தடவைகள் சொல்லுகிறது. இப்படிப்பட்ட வாழ்க்கை நமக்கு எதைக் குறிக்கும்? வெளிப்படுத்துதல் 21:4 என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள். [வாசியுங்கள்.] என்ன வாக்குக்கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] எவ்வாறு நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும்?” யோவான் 17:3-ஐ வாசித்து, கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சிறப்பித்துக் காட்டுங்கள். பின்பு அவருடைய அக்கறையை மேலும் தூண்டுவதற்காக மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை வீட்டுக்காரருக்குக் காண்பித்து, அதன் அறிமுகத்திலுள்ள உபதலைப்புகளைப் பயன்படுத்துங்கள். அதை 40.00 ரூபாய் நன்கொடைக்கு அவருக்கு அளியுங்கள்.
3 இந்த அணுகுமுறையும் பிரசுரமும் ஒரு குறிப்பிட்ட வீட்டுக்காரருக்குப் பொருத்தமாய் இருக்காது என்று நீங்கள் உணர்ந்தால், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வின் தற்போதைய இதழ்களை நீங்கள் அளிக்கலாம் அல்லது இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதியை விட்டுவரலாம். அளிக்கப்படுகிற பிரசுரத்திலுள்ள திட்டவட்டமான ஓரிரண்டு குறிப்புகளுக்குக் கவனத்தைத் திருப்புங்கள். வசதியான ஒரு நேரத்தில் அந்தத் தலைப்புப் பொருளை அவருடன் தொடர்ந்து கலந்தாலோசிப்பதற்குத் திரும்பிவருவதைக் குறித்து தெரியப்படுத்துங்கள்.
4 வீட்டுக்காரர் அதிக வேலையாக இருப்பதாகத் தோன்றினால், மேற்சொன்ன பிரசங்கத்தைச் சுருக்கிக்கொள்வது ஞானமானதாய் இருக்கலாம். புதிய பிரஸ்தாபிகள் பயன்படுத்துவதற்கு பின்வரும் பிரசங்கத்தையும் எளிதாகக் காணலாம்.
நம்மை அறிமுகம்செய்த பிறகு, நாம் இவ்வாறு சொல்லலாம்:
◼ “இன்றைக்கு நாங்கள் எங்களுடைய அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதைப் பற்றி அவர்கள் தங்களுடைய பைபிளில் வாசிக்கும்போது என்ன நினைக்கிறார்கள் என்பதைக்குறித்து கேட்டுவருகிறோம். உதாரணமாக, யோவான் 17:3-ல் இயேசு என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். [வாசியுங்கள்.] இயேசு கிறிஸ்துவையும் அவர் என்ன கற்பித்தார் என்பதையும் பற்றி மக்கள் அதிகமாக அறிந்துகொள்ள உதவிசெய்வதற்கு, இந்தப் புத்தகம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.” மிகப் பெரிய மனிதர் புத்தகத்திலுள்ள அழகிய விளக்கப்படங்கள் சிலவற்றிற்குத் திருப்புங்கள். முன்னுரைக்குத் திருப்பி, “அவரைப் பற்றி கற்றறிவதன் மூலம் பயனடையுங்கள்” என்ற உபதலைப்பின்கீழுள்ள இரண்டாவது பத்தியை வாசியுங்கள். பின்பு அவருக்கு அந்தப் பிரசுரத்தை அளியுங்கள்.
5 நீங்கள் அந்தப் புத்தகத்தை அளிப்பீர்களானால், “பரலோகத்திலிருந்து செய்திகள்” என்ற முதல் அதிகாரத்தை அந்தச் சமயத்தில் அல்லது ஒருசில நாட்களுக்குப் பின்பு ஒரு மறுசந்திப்பில் கலந்தாலோசிக்கலாம் என்பதைத் தெரியப்படுத்துவதன்மூலம் ஒரு பைபிள் படிப்புக்கான அடித்தளத்தைப் போடுங்கள். அடுத்த சந்திப்பில் செலவழிக்கப்படவேண்டிய குறிப்பிட்ட ஒரு நேரத்தை வீட்டுக்காரருக்கு சொல்வதற்குப் பதிலாக, ஒருசில நிமிடங்களில் அவர் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அதிக அக்கறையூட்டும் தகவலை கற்றுக்கொள்ளலாம் என்று வெறுமனே சொல்லுங்கள்.
6 நித்திய ஜீவனுக்கான பாதையில் மற்றவர்கள் செல்ல உதவிசெய்வதற்காக, கடவுளுடைய குமாரன், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சத்தியத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த உலகப்பிரகாரமான இந்த விடுமுறை காலத்தை நாம் அனைவரும் பயன்படுத்துவோமாக.—மத். 7:14.