பிப்ரவரி ஊழியக் கூட்டங்கள்
பிப்ரவரி 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 131 (44)
15 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். பத்திரிகை அளிப்பை தற்போதைய வெளியீடுகளின் அடிப்படையில் முக்கியப்படுத்திக் காட்டுங்கள். கேள்விப் பெட்டியிலுள்ள முக்கியக் குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.
20 நிமி:“கடவுளுடைய சமாதான ராஜ்யத்தில் அக்கறையை வளருங்கள்.” கட்டுரையை சபையாரோடு கலந்தாலோசித்தல். இரண்டு நடிப்புகள். பாரா 2-ஐ சிந்தித்தப் பிறகு, அதிக வேலையாய் இருக்கிற வீட்டுக்காரருக்கு எவ்வாறு துண்டுப்பிரதியை அளிப்பது என்பதைக் காண்பியுங்கள். மறுசந்திப்புக்கு அஸ்திபாரத்தைப் போடுகிற கேள்வியை பிரஸ்தாபி மரியாதையுடன் கேட்பதாக அமையுங்கள். பாரா 3-ல் உள்ள அளிப்பை நடித்துக்காட்டுங்கள்; அதில் வீட்டுக்காரர் அக்கறைகாட்டுகிறார், பிரஸ்தாபி என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்கிறார். மீண்டும், மறுசந்திப்புக்காக அஸ்திபாரம் போடப்படவேண்டும்.
10 நிமி:நீங்கள் ஏப்ரலில் துணைப் பயனியர் செய்யமுடியுமா? மூப்பரால் கொடுக்கப்படும் ஊக்கமான பேச்சு. கடந்த மாதங்களின்போது விசேஷித்த நடவடிக்கையாக சபையில் செய்யப்பட்ட ஊழியத்தின்பேரில் நம்பிக்கையூட்டும் விதமாக குறிப்புச்சொல்கிறார். மார்ச்சில் துணைப் பயனியர் செய்யும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள், ஆனால் விசேஷமாக ஏப்ரலில், விசேஷித்த நடவடிக்கையின் மாதத்திற்காக கூடுமானவரை அநேகர் துணைப் பயனியர்களாகச் சேர்ந்துகொள்ள ஊக்கமளியுங்கள்.
பாட்டு 137 (105), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 126 (10)
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. அனுப்பப்பட்ட நன்கொடைகளுக்காக சங்கத்தின் போற்றுதல் வார்த்தைகளைக் கூறுங்கள், மேலும் உள்ளூர் சபை தேவைகளின் உண்மையான ஆதரவுக்காக சபையாரைப் பாராட்டுங்கள். வார இறுதி நாட்கள் வெளி ஊழிய நடவடிக்கையில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள், மேலும் வெளி ஊழிய ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.
20 நிமி:“அர்த்தமுள்ள மறுசந்திப்புகள்மூலம் வளர்ச்சியைத் தூண்டுங்கள்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பாரா 3-ல் உள்ள அளிப்பின் அடிப்படையில் மறுசந்திப்புச் செய்கிற நடிப்பைக் கொண்டிருங்கள். சந்திப்பின்போது மிக அதிகமான பொருள்களை நடத்தாமல் பகுத்துணர்வுடன் இருப்பதற்கான அவசியத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள், மேலும் எதிர்கால சந்திப்பில் கொஞ்சம் கொஞ்சமாக அக்கறையை புகுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டுங்கள்.
15 நிமி:“சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” அனுபவம்வாய்ந்த மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு.
பாட்டு 122 (94), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 198 (50)
5 நிமி:சபை அறிவிப்புகள்.
15 நிமி:“யெகோவாவின் முதற்பேறானவரைப் போற்றுங்கள்!” கட்டுரையை கேள்வி பதில்மூலம் சிந்தித்தல். மூப்பரால் கொடுக்கப்படும் கனிவான, ஊக்கம்நிறைந்தப் பேச்சு. நினைவு ஆசரிப்புக்கும் அதைத் தொடர்ந்து வருகிற வழக்கமான பொதுப்பேச்சுக்கும் ஆஜராகும்படி, அனைவரும் தாங்கள் அழைக்கப்போகிற தனிப்பட்ட நபர்களின் பட்டியலை போடும்படி உற்சாகப்படுத்துங்கள். பாரா 7-ல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை நடித்துக்காட்டுங்கள். ராஜ்ய மன்றத்திற்குள் நுழைந்து, சுற்றிலும் பார்த்துக்கொண்டிருக்கிற நபரை பிரஸ்தாபி அணுகும்படி செய்யுங்கள். ஆஜராகும்படியாக மற்றொரு நகரத்தில் வசிக்கிற உறவினர் அந்த மனிதரை உற்சாகப்படுத்தினார் என்பதைப் பிரஸ்தாபி அறிந்துகொள்கிறார். பைபிளையும் பாட்டுப் புத்தகத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ளும்படிக்கு, பிரஸ்தாபி அந்த மனிதரை தன்னுடனும் தன்னுடைய குடும்பத்தாருடனும் அமர்ந்துகொள்ளும்படி அழைக்கிறார். கூட்டத்திற்குப் பிறகு, அந்த மனிதர் கொண்டிருக்கக்கூடிய எந்தக் கேள்விகளுக்கும் பிரஸ்தாபி பதிலளிக்கிறார். நினைவு ஆசரிப்பை சபை அனுசரிக்கும் நேரத்தை அறிவிப்பதன்மூலம் அந்தப் பகுதியை முடியுங்கள்.
10 நிமி:பைபிள்—உற்சாகத்திற்கான நம்முடைய மிகச் சிறந்த ஊற்றுமூலம். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 117-21. மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. சபையின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிற அநேகர் உற்சாகம் தேவைப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஒவ்வொரு பிரஸ்தாபியும் எவ்வாறு கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்பதைக் காண்பியுங்கள்.
15 நிமி:“யெகோவா செய்திருப்பதை விவரித்துக்கூறுவது எவ்வளவு நன்மையானது!” உட்சேர்க்கையிலுள்ள இந்தக் கட்டுரையின் பாராக்கள் 1-11-ஐ கேள்வி பதில்மூலம் கலந்தாலோசித்தல். புத்தகத்தை வாசிப்பதற்காக தனிப்பட்ட அல்லது குடும்பத் திட்டத்தைக் கொண்டிருக்கிற சகோதரர்களால் கொடுக்கப்படும் தயார்செய்யப்பட்ட இரண்டு குறிப்புரைகளைக் கொண்டிருங்கள். அவர்கள் கற்றுக்கொண்டு போற்றிய எவற்றையாவது குறிப்பிடும்படி கேளுங்கள்.
பாட்டு 208 (74), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 219 (8)
5 நிமி:சபை அறிவிப்புகள். மார்ச் மாதத்திற்கான பிரசுர அளிப்பை முக்கியப்படுத்திக் காட்டுங்கள்.
15 நிமி:“யெகோவா செய்திருப்பதை விவரித்துக்கூறுவது எவ்வளவு நன்மையானது!” உட்சேர்க்கையிலுள்ள பாராக்கள் 12-20-ஐ கேள்வி பதில்மூலம் கலந்தாலோசித்தல். புத்தகத்தை வாசிப்பதிலிருந்து நன்மையடைந்திருக்கிற பிரஸ்தாபிகளிடமிருந்து தயார்செய்யப்பட்ட இரண்டு குறிப்புகளைக் கொண்டிருங்கள்.
15 நிமி:“உங்களுடைய சபையின் பொதுப் பேச்சு நிகழ்ச்சிக்கு முழுமையாக ஆதரவளியுங்கள்.” பேச்சு, ஆனால் சபையாரிடமாகக் கேட்பதற்கு ஒன்றிரண்டு கேள்விகளைச் சேர்த்துக்கொள்ளலாம். முதல் முறையாக பொதுக் கூட்டத்திற்கு ஆஜராகிற அக்கறையுள்ள நபர்கள் எவ்வாறு வரவேற்கப்பட்டவர்களாய் உணரும்படி செய்விக்கப்படலாம் என்பதை விளக்குங்கள். பொதுக் கூட்டத்திற்கு ஒழுங்காக ஆஜராவதிலிருந்து எவ்வாறு பயனடைந்திருக்கிறார் என்பதைத் தெரிவிக்கிற பிரஸ்தாபியிடமிருந்து வருகிற தயார்செய்யப்பட்ட குறிப்புரை ஒன்றை கொண்டிருங்கள்.
10 நிமி:“தவறாகக் கொள்ளப்பட்ட தயவுக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள்.” பேச்சு.
பாட்டு 197 (57), முடிவு ஜெபம்.