நான் தொடர்ந்து மாற்றுவது தேவைப்படுகிறதா?
சாட்சிகொடுக்கையில் நாம் பயன்படுத்தக்கூடிய வேதப்பூர்வ பல்வேறு பிரசங்கங்களை நம் ராஜ்ய ஊழியத்தின் ஒவ்வொரு வெளியீடும் அளிக்கிறது. வெகு சுறுசுறுப்பாயிருக்கும் பிரஸ்தாபிகள் பலர், புதிய எண்ணங்களை அடையவும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகளைப் பயன்படுத்தவும் ஆவலுடையோராக இருக்கின்றனர். நம் ராஜ்ய ஊழியம் ஒவ்வொரு மாதமும் பல ஆலோசனைகளை அளிப்பதால் அவர்களுக்கு உதவிசெய்கிறது.
எனினும், தனிப்பட்டவராக நீங்கள் பயன்படுத்துவதைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருப்பதற்குத் தேவைப்படுகிறதில்லையென உணரலாம். வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் பங்குகொள்வதற்கு ஒவ்வொரு மாதமும் ஒருசில மணிநேரங்கள் மாத்திரமே உங்களுக்கு இருக்கலாம். ஒரு காலப்பகுதியினூடே குறிப்பிட்ட சில பிரசங்கங்களை நீங்கள் பயன்படுத்திப் பழகி, அவை உங்களுக்கு எளிதாயிருப்பதாக உணரலாம், அவற்றைப் பயன்படுத்துவது நல்ல பலன்களையும் தரலாம். சங்கீதம் 37:9-11, 2 பேதுரு 3:13, வெளிப்படுத்துதல் 21:4, இன்னும் மற்றவை உட்பட, அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சில வசனங்களின்பேரில் நீங்கள் சார்ந்திருக்கலாம். அவ்வாறெனில், வேறொன்றுக்கு அடிக்கடி மாற்றக் கடமைப்பட்டவர்களாக நீங்கள் உணரத் தேவையில்லை. நம்முடைய முதல் இலக்கானது மற்றவர்களுடன் ராஜ்ய நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதும் யெகோவாவின் ஆசீர்வாதங்களுக்குத் தகுதியுடையோராவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்வதுமேயாகும். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் காலத்திற்கேற்ற, மனங்கவரும் பிரசங்கங்களை நீங்கள் கண்டு, அவற்றைப் பயன்படுத்த விரும்பி, அவற்றால் நல்ல பிரதிபலன் கிடைக்கிறதென்றால், அவற்றைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம்.