நாம் மறுசந்திப்பு செய்யாவிட்டால் அவர்கள் எவ்வாறு கேள்விப்படுவார்கள்?
1 “பிரசங்கிக்கிறவனில்லாமல் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” (ரோ. 10:14, தி.மொ.) நிச்சயமாகவே, பயன்தரத்தக்க முறையில் மறுசந்திப்புகளை நாம் செய்யாவிடில் சத்தியத்தின் உட்பொருளை அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? இராஜ்ய செய்தியைப்பற்றி வீட்டுக்காரருடன் நாம் உரையாடக்கூடியதாயிருந்த எந்த முதல் சந்திப்பும் ஒரு மறுசந்திப்புக்குத் தகுந்தது. இந்த மாதம், நாம் அளித்த எந்தச் சிறு புத்தகமானாலும் அதிலிருந்து கூடுதலான வேதப்பூர்வ கருத்துக்களைப் பயன்படுத்தி நம் முதல் உரையாடலைத் தொடர்ந்து முன்னேற்றுவிக்கக் கூடியவர்களாக இருக்கலாம், மேலும் இது ஒரு பைபிள் படிப்புக்கு வெற்றிகரமாக வழிநடத்தக்கூடும்.
2 “பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்” என்ற சிறு புத்தகத்தை நீங்கள் அளித்திருந்தால், இந்த முறையில் பைபிள் படிப்புக்கு வழிநடத்தும் ஓர் உரையாடலை நீங்கள் தொடங்கக் கூடியவர்களாக இருக்கலாம். அட்டையின் முன்புறத்தைக் குறிப்பிட்டுக்காட்டி, நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பான ஓர் எதிர்காலம் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள ஓர் உலகத்தில் வாழ நீங்கள் விரும்புவீர்களா? [பதில்சொல்ல நேரம் அனுமதியுங்கள். பின்பு பாரா 2-க்குத் திருப்புங்கள்.] இது என்றாவது கூடியதாயிருக்குமாவென பலர் சந்தேகிக்கிறபோதிலும், நம் எல்லாருக்கும் இந்த விருப்பம் இருக்கிறது. இதை மெய்ம்மையாக்குவாரென வாக்களிக்கும் கடவுளுக்கு இது இயலாததாக இல்லை.” பாரா 2-ல் மேற்கோளாகக் குறிப்பிட்டிருக்கிறபடி ஏசாயா 32:17, 18-ஐ வாசியுங்கள், அல்லது உங்கள் பைபிளிலிருந்து வாசியுங்கள். எதிர்காலத்துக்கான ஒரு நிச்சய நம்பிக்கையுடன் வரும் மகிழ்ச்சியையும் மன சமாதானத்தையும் ஏற்கெனவே அனுபவிக்கும் ஜனங்கள் உலகெங்கும் இருக்கின்றனரென தொடர்ந்து விளக்குங்கள். பாரா 3-ல் உள்ள வேதப்பூர்வ கருத்துக்களைக் கலந்து பேசி, அந்தச் சிறு புத்தகத்தை படிப்பது வீட்டுக்காரர் மேலுமதிகம் தெரிந்துகொள்ளும்படி எவ்வாறு உதவிசெய்யுமென்பதை விளக்கிக் கூறுங்கள். அந்த நபர் அக்கறையுடையவராக இருந்தால், அந்தக் கலந்தாலோசிப்பைத் தொடருவதற்கு சீக்கிரமான ஒரு மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
3 “அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?” என்ற சிறு புத்தகத்தை அளித்த பின்பு நீங்கள் மறுசந்திப்பு செய்கையில், இதைப்போன்ற ஏதாவது பலன்தரத்தக்கதாக இருக்கலாம்:
◼ “என்னுடைய முந்தின சந்திப்பில், அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை நாம் கலந்தாலோசித்தோம். துன்பத்துக்கும் வன்முறைக்கும் ஒரு முடிவைக் கொண்டுவரும்படி கடவுள் நம்மைப்பற்றி போதிய அக்கறையுடையவராக இருக்கிறாரென நீங்கள் நினைக்கிறீர்களா? [அந்த நபர் பதில் சொன்னபின்பு, பாரா 32-க்குத் திருப்பி, தொடர்ந்து உரையாடுங்கள்.] இந்தப் பொல்லாத உலகத்தை நீக்கிவிட்டு, அதனிடத்தில் சமாதானமாய் வாழக்கூடிய நல்ல ஆட்களால் குடியேற்றப்பட்ட ஒரு புதிய பூமியைத் தாம் நிலைநாட்டுவாரென கடவுள் வாக்களித்திருக்கிறார். [சங்கீதம் 37:11-ஐ வாசியுங்கள்.] நாம் பைபிளை நம்பி அதன் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்தினால் நீங்களும் நானும்கூட அந்தப் புதிய உலகத்தில் வாழ்க்கையை அனுபவித்து மகிழலாம்.” ஆட்கள் பைபிளைப் படிப்பதற்கு உதவிசெய்வதற்கான நம்முடைய ஏற்பாட்டை விளக்கிக் கூறுங்கள்.
4 “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற சிற்றேட்டை அளித்த பின்பு நீங்கள் மறுசந்திப்பு செய்கையில், அட்டையின்மீதுள்ள படத்தைக் காட்டுவதன்மூலம் தொடங்கி பின்பு இந்தக் கேள்வியைக் கேட்கலாம்:
◼ “பரிபூரணமான ஓர் உலகத்தில் வாழ்வது எவ்வாறிருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்? [வீட்டுக்காரர் குறிப்புகளைச் சொல்லும்படி செய்யுங்கள்.] இந்தப் படத்தில் நீங்கள் காண்பது வெறும் கற்பனையல்ல; இது பைபிளில் கூறப்பட்டுள்ள நிச்சய வாக்குகளின்பேரில் ஆதாரம்கொள்ள செய்யப்பட்டிருக்கிறது. [வெளிப்படுத்துதல் 21:4-ஐயும் சங்கீதம் 37:11, 29-ஐயும் வாசியுங்கள்.] நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த ஆசீர்வாதத்தை எவ்வாறு அனுபவித்து மகிழ முடியுமென்று விளக்கிக்கூற நான் விரும்புகிறேன்.” வீட்டுக்காரர் அக்கறை காட்டினால், கலந்தாலோசிப்பைத் தொடர்ந்து, ஒரு பைபிள் படிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
5 சத்தியத்துக்காகத் தேடிக்கொண்டிருக்கும் நேர்மை மனமுள்ள ஆட்களை நாம் காண்கையில், அவர்கள் தாங்கள் கேட்டவற்றின்பேரில் செயல்படும்படி அவர்களுக்கு உதவிசெய்ய மறுசந்திப்பு செய்வதன்மூலம் நம்முடைய உண்மையான அன்பை நாம் மெய்ப்பித்துக் காட்டுகிறோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பரிசுத்த சத்தியங்களை நமக்கும் நமக்குச் செவிகொடுப்போருக்கும் நித்திய ஆசீர்வாதமுண்டாகப் பயன்படுத்துகிறோம்.—1 தீ. 4:16.