புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
1 மார்ச் 1996-லிருந்து, வட்டார மாநாடுகளின் பேச்சுப்பொருள்: “கடவுளுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கு செவிகொடுத்துக் கற்றுக்கொள்ளுங்கள்.” உபாகமம் 31:12, 13-ன் அடிப்படையில் அமைந்திருக்கிற இந்தக் கருப்பொருள், நாம் கற்று, பொருத்தக்கூடிய பாடங்களை சிறப்பாக எடுத்துக்காட்டுவதற்கும், முழு நிகழ்ச்சிநிரலுக்கும் பொருத்தமான அடிப்படையளிக்கிறது.
2 என்றாலும் இன்று பெரும்பாலான ஜனங்கள் வஞ்சிக்கிற ஏவப்பட்ட உபதேசங்களுக்கு செவிகொடுத்தாலும், நாம் ஒவ்வொருவரும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பது இன்றியமையாத தேவையாக இருக்கிறது. (லூக். 11:28; 1 தீ. 4:1) இதை மனதில் கொண்டு இந்த வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல், பிரஸ்தாபிகளுக்கும், குடும்பங்களுக்கும், மூப்பர்களுக்கும், பயனியர்களுக்கும் உதவியும் உற்சாகமும் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சனிக்கிழமை அன்று, “நம்முடைய பிரச்சினைகளை சமாளித்தல்—கடவுளுடைய வார்த்தைக்கு கவனம் செலுத்துவதன் மூலம்” என்ற பொருளில் நான்கு பகுதிகொண்ட ஒரு தொடர்பேச்சு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, “எவ்வாறு வேதவசனங்கள் நீதியாக சிட்சிக்கின்றன” என்ற தலைப்பில் ஒரு தொடர்பேச்சு உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தவறவிடக்கூடாத ஆவிக்குரிய உற்சாகத்தை முழு நிகழ்ச்சிநிரலும் கொடுக்கும்.
3 சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வெளி ஊழியத்திற்கான நடைமுறையான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு, நடித்துக் காட்டப்படும். உற்சாகமளிக்கும், அறிவூட்டும் அனுபவங்களும், பேட்டிகளும் வழங்கப்படும். நீங்கள் கேட்கக்கூடியவற்றை நடைமுறையில் பொருத்தும் நோக்கத்தோடு அங்கே ஆஜராகியிருந்தால், கடவுளுடைய வார்த்தையின் கட்டளைகளின்படி முழுமையாக நடக்கக் கற்றுக்கொள்ளும் ஒரு மேம்பட்ட நிலையில் இருப்பீர்கள்.
4 புதிதாக ஒப்புக்கொடுத்திருக்கும் சகோதர சகோதரிகளின் முழுக்காட்டுதல் வட்டார மாநாட்டின் ஒரு சிறப்பம்சமாக இருக்கும். தங்களுடைய ஒப்புக்கொடுத்தலின் இந்த வெளியரங்க உறுதிமொழிக்கு முன்னதாகவே, முழுக்காட்டுதல் எடுக்கும் விருப்பத்தை அவர்கள் நடத்தும் கண்காணியிடம் தெரிவித்தால், மூப்பர்கள் இவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வார்.
5 இந்த வட்டார மாநாட்டுத் தொடர்களின் பொதுப் பேச்சின் தலைப்பு, “ஏன் பைபிளால் வழிநடத்தப்பட வேண்டும்?” அக்கறை காட்டுவோரை இதற்கு வரும்படி அழையுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், அத்தியாவசியமாகத் தேவைப்படும் உற்சாகத்தையும் உதவியையும் பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்போடு, முழு நிகழ்ச்சிநிரலுக்கும் ஆஜராகியிருக்கும் தீர்மானத்துடன் திட்டமிடுங்கள்.