எல்லா சமயத்திலும் சந்தாக்களை அளியுங்கள்
1 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வைப் போற்றுவதற்கு நமக்கு நல்ல காரணம் இருக்கிறது. வேறு எந்தப் பத்திரிகைகளுக்கு இத்தகைய சர்வதேச கவர்ச்சி இருக்கிறது? இந்த மாதம், நம்முடைய பிரசங்க வேலையில் இப்பத்திரிகைகளுக்கான சந்தா சிறப்பித்துக் காட்டப்படும், என்னே வல்லமைவாய்ந்த செய்தியை இந்த அக்டோபர் மாத பிரதிகள் கொண்டிருக்கின்றன! பொதுவாக, நம்முடைய பத்திரிகைகளையும் சந்தாக்களையும் வீட்டுக்கு வீடு ஊழியத்திலேயே நாம் அதிகளவில் அளிக்கிறோம்; எனினும், பொருத்தமான மற்ற எல்லா சந்தர்ப்பத்திலும் அவற்றை அளிப்பதற்கு நாம் தயாராயிருக்க விரும்புவோம்.
2 அக்டோபர் 1 “காவற்கோபுர”த்தை அளிக்கையில் “போரில்லா ஓர் உலகம்—எப்போது?” என்ற கட்டுரையில் அக்கறையைத் தூண்டுவிக்க நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼“மனிதருடைய எல்லா முயற்சிகளின் மத்தியிலும் சமாதானமான ஓர் உலகம் ஏன் அடையமுடியாததாக தோன்றுகிறது என அநேக ஆட்கள் யோசிக்கின்றனர். காவற்கோபுரம், அக்டோபர் 1, பக்கம் 4-ல் உள்ள இந்த அறிக்கைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [அப்பக்கத்தில் கீழேயுள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை வாசித்து, பதிலளிக்க அனுமதியுங்கள்.] ஒருபோதும் சமாதானம் வராது என்பதை இது குறிக்காதென்பது உண்மையே. ஏசாயா 9:6, 7-ல் உள்ள கடவுளுடைய இந்த வாக்கை கவனியுங்கள்.” நீங்கள் இந்த வசனத்தை உங்கள் பைபிளிலிருந்தோ அல்லது காவற்கோபுரத்தில், பக்கம் 7-ல், இரண்டாம் பத்திக்கு மேலே மேற்கோள் காட்டப்பட்டிருப்பதிலிருந்தோ வாசித்துக் காட்டலாம். காவற்கோபுரம், யெகோவாவின் ராஜ்யமே சமாதானமுள்ள ஓர் உலகிற்கு ஒரே நம்பிக்கை என அறிவிக்கிறது என்பதை சுருக்கமாக விவரித்து, கட்டுரையை வாசிக்கும்படி அந்த நபரை உற்சாகப்படுத்துங்கள்.
3 பைபிள் பொருளில் குறைந்த அளவே அக்கறை காட்டும் ஆட்களிடம் பேசுகையில் நீங்கள் அக்டோபர் 22 “விழித்தெழு!”-வை அளித்து இவ்வாறு சொல்லலாம்:
◼ “இந்தப் பத்திரிகையின் முதற்பக்கத்திலுள்ள கேள்வியைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: ‘ஏன் இவ்வளவு குறுகிய வாழ்நாள்?’ [பதிலளிக்க அனுமதியுங்கள்.] முதுமையடைவதைக் குறித்து நவீன விஞ்ஞானிகளும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதற்கும் பிறகு நித்திய ஜீவனுக்கான வாய்ப்புகளைக் குறித்து நம்முடைய சிருஷ்டிகர் என்ன வாக்குக்கொடுத்திருக்கிறார் என்பதற்கு நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும் இந்தத் தொடர் கட்டுரைகள் கவனத்தை ஈர்க்கின்றன. இந்தப் பத்திரிகையை தபால் மூலம் நீங்கள் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.”
4 மத சார்புடைய ஆட்களை நீங்கள் கண்டுபிடிக்கையில் அக்டோபர் 15 “காவற்கோபுர”த்திலிருந்து ஒரு கட்டுரையை ஏன் சிறப்பித்துக் காட்டக்கூடாது? இந்த அளிப்பு சாதகமான பிரதிபலிப்பைத் தூண்டலாம்:
◼ “இந்தக் கேள்விக்கு உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்: கடவுளை நேசித்து அதேசமயத்தில் அவருக்குப் பயந்திருப்பது கூடியகாரியமா?” பதிலளிக்க அனுமதித்து, பிறகு “மெய்க் கடவுளுக்கு ஏன் இப்போது பயப்பட வேண்டும்?” என்ற கட்டுரையின் தலைப்பு வசனத்தை வாசிக்கவும். (பிர. 12:13) நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 199-லுள்ள உதாரணங்களில் ஒன்றை உபயோகித்து சந்தாவை அளியுங்கள்.
5 வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் பலசரக்குக் கடைகளையும் கைவினைப் பொருள் கடைகளையும் விட்டுவிடாதீர்கள். ஒழுங்காக பலசரக்குக் கடைகளை சந்திப்பவர்கள் இந்த ஊழியத்தை மகிழ்ச்சிமிக்கதாயும் பலன்மிகுந்ததாயும் விவரிக்கின்றனர். அக்டோபர் 8 “விழித்தெழு!”-வை அளிக்கையில் இதைப் போன்ற எளிய பிரசங்கத்தை நீங்கள் முயற்சி செய்யலாம்:
◼ “வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய சமுதாயத்தை பாதிக்கிற காரியங்களைக்குறித்த நடப்புவிஷயங்களைத் தெரிந்திருக்க விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு அக்கறைக்குரியதாய் இருக்கும் என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன்.” “ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள்—எவ்வளவு வெற்றிகரமானவையாக இருக்கக்கூடும்?” என்ற கட்டுரையிலிருந்து ஒரு குறிப்பை சுருக்கமாக பகிர்ந்துகொள்ளுங்கள்.
6 நீங்கள் அணுகுகிறவர் உண்மையிலேயே அதிக வேலையாக இருந்தால், பத்திரிகைகளைக் காட்டி இவ்வாறு சொல்லலாம்:
◼ “இன்று உங்களை சந்திக்க யாரும் வருவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்று எனக்குத் தெரியும், எனவே சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். முக்கியமான ஒன்றை வாசிப்பதற்கான வாய்ப்பு ஒன்றை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.” நீங்கள் தெரிந்தெடுத்திருக்கிற ஒரு கட்டுரையைக் காட்டி பத்திரிகைகளை அளியுங்கள்.
7 திருத்தமான வீட்டுக்கு வீடு பதிவு சீட்டை வைத்திருங்கள், பத்திரிகைகளை ஏற்றுக்கொண்ட எல்லாரையும் மறுசந்திப்பு செய்யுங்கள். ஒரு சந்தா மறுக்கப்பட்டால் பத்திரிகைகளின் தனிப் பிரதிகளை அளிக்க தீர்மானமாயிருங்கள். மீண்டும் மறுசந்திப்பு செய்கையில் சந்தாவை அளியுங்கள். எல்லா சமயத்திலும் சந்தாக்களை அளிக்க தயாராகவும் கவனமாகவும் இருப்போமாக.