ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்
ஏப்ரல் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். சென்ற மாதம் முதற்கொண்டு, பத்திரிகைகள் மற்றும் சந்தாக்கள் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்ததை சபையாருக்கு நினைவுபடுத்துங்கள். நீங்கள் அனுசரித்த நினைவு ஆசரிப்பை பற்றி ஏதேனும் குறிப்பிடத்தக்க அறிக்கை இருந்தால் குறிப்பிடவும்.
20 நிமி: “ஏப்ரலில் ‘நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாக’ இருங்கள்!” 1-10 பத்திகள் வரை கேள்வி பதில் மூலம் ஊழியக் கண்காணியால் கையாளப்படும். விளக்கவும் (1) ஏப்ரலில் விரிவான வெளி ஊழியத்திற்காக உள்ளூர் சபை என்ன திட்டமிட்டிருக்கிறது, (2) எல்லாரும் பங்கேற்கும் விதத்தில் எவ்வாறு உதவி அளிக்கப்படுவார்கள், (3) புதியவர்களையும் இளம் பிள்ளைகளையும் எவ்விதம் உட்படுத்தலாம்.
15 நிமி: “சரியான மனச்சாய்வுள்ளவர்களைத் தேடுங்கள்.” குறிப்பிடப்பட்ட சம்பாஷிக்கும் முறைகளை மறுபார்வை செய்யவும், அதற்குப்பின் அவற்றை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளைக் கொண்டிருங்கள். நேரம் அனுமதிப்பதற்கு ஏற்ப, ஜனவரி 1996, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 5-ல் உள்ள, பத்திரிகை அளிப்பிற்கான ஆலோசனைகள் சிலவற்றைக் குறிப்பிடவும்.
பாட்டு 20, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 8-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை; நன்கொடைகளுக்காக சங்கம் தெரிவித்த நன்றியைக் குறிப்பிடவும். நினைவு ஆசரிப்புக்கு வந்த புதியவர்கள், மேற்கொண்டு ஆவிக்குரிய முன்னேற்றம் அடைவதற்கு நாம் உதவக்கூடிய நடைமுறையான வழிகளைக் கலந்தாலோசிக்கவும். ஆங்கில காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1991, பக்கங்கள் 9-12-ஐ மறுபார்வை செய்யவும்.
15 நிமி: “இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்யுங்கள்.” கேள்விகளும் பதில்களும். 5 மற்றும் 6-வது பத்திகளை வாசிக்கவும்.
15 நிமி: “ஏப்ரலில் ‘நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாக’ இருங்கள்!” பத்திகள் 11-15 வரை கேள்வி பதில் மூலம் கையாளப்படும். அனைவரையும், தங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகளை அலசிப்பார்த்து, வெளி ஊழியத்தில் தங்களுடைய ஆதரவை அதிகரிக்கும் வழிகளைத் தேடும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 113, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் 21-ல், “கோணலான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களாயிருத்தல்,” என்ற பொருளில் விசேஷ பொதுப் பேச்சு இருக்கும் என்பதைச் சபையாருக்கு நினைவுபடுத்துங்கள். ஒவ்வொருவரும் கலந்துகொள்ளும்படி உதவிசெய்ய, அதிகப்படியான முயற்சியை எடுக்க உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “காலங்கள் மாறிவிட்டன.” கேள்விகளும் பதில்களும். மக்களின் அதிமுக்கியமான தேவைகளை நிறைவு செய்யும் விதத்தில் ராஜ்ய செய்தியை அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் காட்டுங்கள். காவற்கோபுரம், ஜனவரி 1, 1994, பக்கங்கள் 22-3-ல் குறிப்பிட்டதைப்போல், மக்களின் மனங்களில் உள்ள குடும்ப, சமூக பிரச்சினைகள் சிலவற்றைக் குறிப்பிடவும்.
20 நிமி: “அறிவிப்பதைக் கேட்பதால்தான் விசுவாசம் உண்டாகிறது.” எவ்வாறு பத்திரிகை அளிப்புகளை அக்கறையைத் தூண்டும்விதத்தில் பயன்படுத்தலாம் என்பதையும், அது அறிவு புத்தகத்திலிருந்து பைபிள் படிப்புகள் நடத்த வழிவகுக்கும் என்பதையும் கலந்தாலோசிக்கவும். சம்பாஷிக்கும் முறைகள் இரண்டு அல்லது மூன்றை நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 204, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 22-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வார இறுதியில் கொடுக்கப்பட்ட விசேஷ பொதுப் பேச்சின் முக்கிய குறிப்புகளை மேம்படுத்திக் காட்டவும். அக்கறைக்காட்டும் புதியவர்கள், உண்மை வணக்கத்தின் சார்பாக ஓர் உறுதியான நிலைநிற்கை எடுப்பதற்கு இந்த அறிவுரை எவ்வாறு தூண்டவேண்டும் என்பதைக் கலந்தாலோசிக்கவும். ‘திருத்தமான அறிவிலே மேன்மேலும் விருத்தியடையுங்கள்’ என்பதன் பேரிலும் கவனத்தைத் திருப்பி, சபை புத்தகப் படிப்புக்குத் தொடர்ந்து வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டுங்கள்.
12 நிமி: கேள்விப் பெட்டி. மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. கூட்டத்தை நடத்தும் சகோதரர்கள், தனிநபர்களை முதற்பெயரால் அழைப்பதன் மூலம், மிதமிஞ்சிய அன்னியோன்னியத்தை வெளிப்படுத்துவதை ஏன் தவிர்க்கவேண்டும் என்பதை விளக்கவும்.
18 நிமி: செப்டம்பர் 15, 1995, காவற்கோபுர இதழில், பக்கங்கள் 20-23-ல் காணப்படும் “கடவுள் பற்றுள்ள கடந்தகாலக் குடும்பங்கள்—நம் நாளுக்குரிய மாதிரி” என்ற தலைப்பையுடைய கட்டுரையானது, மூப்பருக்கும் உதவி ஊழியருக்கும் இடையே கலந்தாலோசிக்கப்படும். உள்ளூர் குடும்பங்கள் பயன்பெறும் விதத்தில் நடைமுறையாகப் பொருத்தவும்.
பாட்டு 143, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 29-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். சிலர் யெகோவாவின் சாட்சிகளை “மத உட்பிரிவு” அல்லது “கருத்து வேறுபாட்டுக் குழு” என்பதாக விவரித்து, நம் செயல்கள் மற்றும் நோக்கங்கள் பற்றி மற்றவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை எவ்வாறு தவறு என நிரூபிக்கலாம் என்பதை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கம் 202-ஐ உபயோகித்து, சுருக்கமாக விளக்கம் கொடுக்கவும்.
15 நிமி: நம் பிராந்தியம் முழுவதற்கும் சீரான கவனிப்பளித்தல். ஊழியக் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. சிதறி கிடக்கும் அல்லது தொலைவான இடங்கள் அரிதாகவே ஊழியம் செய்யப்படலாம். மக்கள் செல்வந்தர்களாக அல்லது மத உறுதியோடு இருக்கும் இடங்களில் ஊழியம் செய்வதைச் சிலர் வேண்டுமென்றே ஒருவேளை தவிர்க்கலாம். வாணிப பிராந்தியங்கள் புறக்கணிக்கப்படலாம். சில பிரஸ்தாபிகள், உடனடியாகக் கவனம் தேவைப்படும் பிராந்தியங்களைக் காட்டிலும், அவர்கள் தனிப்பட்டவிதத்தில் விரும்பும் பிராந்தியங்களையே ஒருவேளை வழக்கமாகக் கேட்கலாம். ஊழியம் செய்யப்படாத பிராந்தியங்களைச் செய்துமுடிக்க எடுக்கும் முயற்சிகளோடு ஒத்துழைக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். தொலைவான கிராம பகுதிகளுக்குச் சென்று ஊழியம் செய்ய பொதுவாகவே கோடை மாதங்கள் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளிக்கின்றன; ஒருவேளை கார்களில் கூட்டமாகச் செல்ல ஏற்பாடுசெய்யலாம். பிராந்திய வரைபடத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கு முன், வீட்டில்-இல்லாதவர்கள் உட்பட, முழு பிராந்தியமும் செய்துமுடிக்கப்பட்டதா என்பதை நிச்சயப்படுத்துங்கள். உங்களுடைய பிராந்தியத்திற்குச் சிறந்த கவனிப்பளிக்க எல்லாரும் எவ்வாறு உதவலாம் என்பதைக் காட்டும் நடைமுறையான மற்ற ஆலோசனைகளை அளிக்கவும்.
18 நிமி: மே மாதத்தில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! சந்தாக்களை அளிக்கவும். முதல் சந்திப்பில் சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளிக்கவும், மறுசந்திப்பு செய்கையில், சந்தர்ப்பம் பொருத்தமாக இருந்தால், மறுபடியும் சந்தாவை அளியுங்கள். ஒருவேளை வீட்டுக்காரர் பத்திரிகையில் ஆர்வமுள்ளவராக இருந்து, ஏதோ ஒரு காரணத்தால் சந்தாவை ஏற்காதிருந்தால், பத்திரிகை மார்க்கத்தை நிறுவவேண்டும் என்ற நோக்கத்துடன், ஏற்கெனவே கொடுத்த பத்திரிகையின் பதிவை வைத்திருங்கள். பொது மக்களுக்கு ராஜ்ய செய்தி கிடைக்க செய்வதில் மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கும் பத்திரிகை விநியோகத்தின் பரவலான நன்மைகளை வலியுறுத்துங்கள். வெளி ஊழியம் செல்கையில், போதுமான பத்திரிகைகள் உங்கள் கையிருப்பில் இருக்கின்றனவா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்; அவற்றை ஒவ்வொரு தகுந்த சந்தர்ப்பத்திலும் அளித்திடுங்கள். வாராந்தர பத்திரிகை அளிப்பு நாளுக்காகத் தனிப்பட்ட விதத்தில் ஏற்பாடுகளைச் செய்வது, பத்திரிகை அளிப்புகளை அதிகரிப்பதற்கான பலன்தரும் வழியாகும். பத்திரிகைகளைக் கொண்டு கடைகள் தோறும் ஊழியம் செய்தலும், தெரு ஊழியம் செய்தலும்கூட பலன்தருபவை. அறிவு புத்தகத்தைப் பயன்படுத்தி, பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்கென்றே அமைக்கப்பட்ட மறுசந்திப்புகளைச் செய்து, அக்கறையைத் தொடர்ந்து வளர்த்திடுங்கள். ஜனவரி 1996, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 3, பத்திகள் 3-5-ல் காணப்படும் சம்பாஷிக்கும் முறைகளை உபயோகித்து, புதிய இதழ்களை அளிக்கும் ஓரிரு சுருக்கமான நடிப்புகளை நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 195, முடிவு ஜெபம்.