முழு ஆத்துமாவோடும் செய்யுங்கள்!
1 யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க நமக்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இவற்றில், சென்ற காலத்தில் அவர் செய்திருக்கிறவையும், இப்போது செய்துகொண்டிருப்பவையும், இனி எதிர்காலத்தில் நமக்குச் செய்யவிருப்பவையுமான காரியங்கள் உட்பட்டிருக்கின்றன. நாம் என்ன செய்யும்படி நம்முடைய நன்றியுணர்வு நம்மைத் தூண்டவேண்டும்? தாவீதின் ஒரு சங்கீதம் இவ்வாறு பதிலளிக்கிறது: “யெகோவாவை நான் எக்காலங்களிலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.”—சங். 34:1, திருத்திய மொழிபெயர்ப்பு.
2 பிரசங்கிக்கும்படி நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோமென்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. இது, “யெகோவாவுக்கென்று முழு ஆத்துமாவோடும்” நாம் நிறைவேற்றும் ஓர் ஊழியம். (கொலோ. 3:23, NW) நாம் உண்மையில் முழு ஆத்துமாவோடும் ஊழியத்தில் ஈடுபட்டால் எந்தளவு நிறைவேற்றுவோம்? யெகோவா நமக்குக் காட்டும் அன்பை நாம் கருதுகையில், அவரையும் அவருடைய அருமையான நோக்கங்களையும் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் முழு ஈடுபாட்டுடன் பங்குகொள்ளும்படி நம் இருதயங்கள் நம்மை நிச்சயமாகத் தூண்டுவிக்கின்றன! நம்மால் கூடியதைச் செய்யும்படி ஊக்குவிக்கப்படுகிறோம்.
3 முழு ஆத்துமாவோடும் செயல்படுகிற ஒரு நபர், பரிசுத்த சேவையின்பேரில் தன் கவனம் ஒருமிக்க ஊன்றியிருக்கும்படி தொடர்ந்து வைத்துவருவதற்கு விரும்புவார் என்று எதிர்பார்ப்பது நியாயமானதாயிருக்கும். சந்தேகமின்றி அவ்வாறே உணர்ந்த சங்கீதக்காரன், இவ்வாறு அறிவித்தார்: “ஒரு நாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.” (சங். 119:164) இந்தச் சங்கீதக்காரனைப் போல் உணர்வோர், யெகோவாவைத் துதிப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளை அனுகூலப்படுத்திக்கொள்ள நாடுகின்றனர். அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் அனுமதிப்பதற்கு ஏற்ப, அவர்கள் தங்களால் கூடிய அளவுக்கு ஆர்வத்துடன் சேவிக்கின்றனர்.
4 துதிப்பதற்கான வாய்ப்புகளால் நாம் சூழப்பட்டிருக்கிறோம்: நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு, வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் பங்குகொள்ளும் வரையில் நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம்முடைய உடன்வேலை செய்வோர், பள்ளித்தோழர்கள், உறவினர், நமக்கு அறிமுகமானோர் போன்ற எல்லாரும் ராஜ்ய செய்தியைக் கேள்விப்படுவது அவசியம். பயணம் செய்கையில், ஹோட்டல் பணியாளர், ரெஸ்டாரன்ட் வேலையாளர், கேரேஜ், மற்றும் பெட்ரோல் நிரப்புமிடங்களிலுள்ள ஊழியர், அல்லது ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுவோர் ஆகியோரிடம் சாட்சி பகருவதற்கு வழிநடத்தக்கூடிய உரையாடல்களை நாம் தொடங்கலாம். வீட்டிலிருக்கையில், அயலகத்தாருக்கு அல்லது வாசலுக்கு வரும் விற்பனையாளர்களுக்குச் சாட்சி பகரலாம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால், நர்ஸ்களும், மருத்துவர்களும், மற்ற நோயாளிகளும் இருக்கின்றனர், அவர்களிடம் நாம் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் முறையில் பிரசங்கிக்கலாம்.
5 சந்தர்ப்ப சாட்சி பலன் தருகிறது: இரண்டு சாட்சிகள் ஒருநாள் ஒரு பூங்காவில் நடந்துகொண்டிருக்கையில், தன் சிறு பிள்ளையுடன் உலாவிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவரிடம் பேசத் தொடங்கினார்கள். முடிவில் அவரும் அவருடைய மனைவியும் சத்தியத்தை ஏற்றார்கள். அந்த இரண்டு சாட்சிகளை அவர் முதலில் சந்தித்ததற்குச் சற்று முன்புதானே, கடவுளிடம் அவர் ஜெபித்து, ‘நீர் இருக்கிறீர் என்றால், தயவுசெய்து நான் உம்மை அறியும்படி செய்யும்,’ என்று கேட்டதாக அந்த வாலிபர் பின்னால் சொன்னார். பூங்காவில் ஏற்பட்ட அந்தச் சந்திப்பு, தன் ஜெபத்துக்கு யெகோவாவின் பதில் என்பதாக அவர் கருதுகிறார்.
6 ஆவிக்குரியப் பிரகாரமாக மற்றவர்களுக்கு உதவிசெய்யும்படியான தங்கள் ஆவலில் முழு ஆத்துமாவோடு இருப்பவர்கள் அதிக சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர். “முழு இருதயத்தோடும்” செய்யும் அத்தகைய சேவை யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கிறது என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—1 நா. 28:9, தி.மொ.