ஆவிக்குரிய விதத்தில் இவ்வளவு ஏராளம் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை!
1 “இவ்வளவு ஏராளம் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை!” என்று தாங்கள் சொல்லக்கூடிய அந்த நாளுக்காகப் பெரும்பான்மையர் ஆவலோடு ஏங்குகின்றனர். தாங்கள் ‘புசித்துக் குடித்து, பூரிப்பாயிருக்கும்படி’ இடமளிப்பதாய்த் தங்களுக்கு ஏராளமான பொருள்கள் இருக்கும் அந்த நாள் வரும் என்று அவர்கள் நினைக்கின்றனர். (லூக். 12:19) நேர்மாறாக, நன்மையான எதிலும் நாம் குறைவுபடுகிறதில்லை என்று ஆவிக்குரிய கருத்தில் நாம் இப்போதே சொல்லக்கூடியோராக இருக்கிறோம். (சங். 34:10) இது எவ்வாறு கூடியதாக இருக்கிறது?
2 “யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வம் வருவிக்கும்,” என்று நீதிமொழிகள் 10:22 (தி.மொ.) அறிவிக்கிறது. கடவுளுடைய அத்தகைய தயவை அனுபவிக்கிற நாம், கடவுள் ‘சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிறார்’ என்று உண்மையாகவே சொல்ல முடியும். (1 தீ. 6:17) இது நம்மை பூமியில் மிக அதிக செல்வந்தராக்குகிறது!
3 நம்முடைய ஆசீர்வாதங்களை உணர்வது: நம்மில் மிகச் சிலருக்கே ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. எனினும், நம்முடைய அன்றாட தேவைகளைப் பற்றி நாம் மட்டுக்குமீறிய கவலையுள்ளோராக இராததால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். நமக்கு என்ன பொருட்கள் தேவை என்பதை யெகோவா அறிந்திருக்கிறார், அவற்றை அளிப்பதாக வாக்குக் கொடுக்கிறார். (மத். 6:31-33) அவருடைய உறுதியளிப்பு, உண்மையாகவே விலைமதிக்க முடியாத மன சமாதானத்தை நமக்கு அளிக்கிறது.
4 எனினும், நம்முடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அவற்றிலும் அதிகமானவை. யெகோவாவிடமிருந்து வரும் ஆவிக்குரிய உணவின்பேரில் நம்முடைய உயிர் சார்ந்திருக்கிறது. (மத். 4:4) ஆவிக்குரிய உணவூட்டத்துக்காக உலக மூலங்களிடம் நோக்குவோர் பட்டினியாக இருக்கையில், நாமோ ஆவிக்குரிய உணவைத் திருப்தியாகப் புசித்துக் குடிக்கிறோம். (ஏசா. 65:13) நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற வற்றாத அறிவளிப்பு நமக்குக் கிடைக்கும்படி ‘உண்மையுள்ள அடிமை’ செய்துகொண்டிருக்கிறது.—மத். 24:45, NW; யோவா. 17:3.
5 உலகமெங்குமுள்ள நம்முடைய அருமையான சகோதரத்துவம், பூமியின் ஒவ்வொரு பாகத்திலும் வாழும் சகோதர சகோதரிகளின் அனலார்ந்த கூட்டுறவை நமக்கு அளிக்கிறது. (யோவா. 13:35) உள்ளூர் சபை சமாதானத்துக்குரிய ஒரு புகலிடமாக உள்ளது, அங்கே நாம் ஆறுதலையும் புது ஊக்கமூட்டுதலையும் கண்டடையலாம். மூப்பர்கள் நம்முடைய ஆத்துமாக்களின்பேரில் விழிப்புள்ள கவனம் செலுத்திக்கொண்டு, பல வகைகளான பிரச்சினைகளைச் சமாளிக்க நமக்கு உதவிசெய்கிறார்கள். (எபி. 13:17) நம்முடைய சகோதரர்களிடம் நாம் நெருங்கிவருவது ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுதலின் பரிமாற்றத்தில் பலன் தந்து, விடாமுயற்சியுடன் செயல்படும்படி நம்மைப் பலப்படுத்துகிறது.—ரோ. 1:10, 11.
6 நம்முடைய ஊழியமுங்கூட ஓர் ஆசீர்வாதமாக இருக்கிறது. உலகப்பிரகாரமான பல வேலைகள் சலிப்பூட்டுபவையாகவும் திருப்தியளிக்காதவையாகவும் இருக்கின்றன. நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் நமக்குச் சந்தோஷத்தையும் கொண்டுவருகிறது. (அப். 20:35) நம்முடைய எல்லா கடினமான உழைப்புக்கும் நாம் உண்மையில் நன்மையைக் காணமுடிகிறது.—பிர. 2:24.
7 எல்லாவற்றிற்கும் மிக மேலாக, எதிர்காலத்துக்குரிய ஆச்சரியமான ஒரு நம்பிக்கை நமக்கு இருக்கிறது. (ரோ. 12:12) நீதியுள்ள ஒரு பரிபூரண புதிய உலகத்தை நாம் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். அங்கே நம்முடைய அன்பானவர்களோடுகூட சந்தோஷத்திலும் சமாதானத்திலும் என்றென்றுமாக நாம் வாழ்வோம்! இந்த நம்பிக்கை, இந்த உலகம் அளிப்பதற்கிருக்கிற எதைப் பார்க்கிலும் அதிக மதிப்புள்ள ஓர் பொக்கிஷமாக உள்ளது.—1 தீ. 6:19.
8 நம்முடைய மதித்துணர்வை நாம் எவ்வாறு காட்டலாம்? யெகோவா நமக்குச் செய்திருப்பவற்றிற்கு நாம் ஒருபோதும் அவருக்குக் கைமாறு செய்ய முடியாது. நம்முடைய நன்றிமதித்துணர்வைப் பின்வரும் வழிகளில் மாத்திரமே காட்ட முடியும்: (1) அவருடைய தகுதியற்ற தயவுக்காக ஒவ்வொரு நாளும் நன்றிசெலுத்துவது (எபே. 5:20), (2) கீழ்ப்படிந்திருப்பதன்மூலம் நம்முடைய அன்பை மெய்ப்பித்துக் காட்டுவது (1 யோ. 5:3), (3) நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலம் அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவது (சங். 83:17), மற்றும் (4) நம்முடைய முழு இருதயத்துடனும் ஒத்துழைப்பதன்மூலம் கிறிஸ்தவ சபையை ஆதரிப்பது.—1 தீ. 3:15.
9 பூமியில் எல்லாருக்கும் மேலாக மிக சந்தோஷமான ஜனமாயிருக்க நமக்கு எல்லா காரணமும் உண்டு. (சங். 144:15ஆ, NW) நம்முடைய ஆவிக்குரிய பரதீஸில் நாம் உணருகிற மகிழ்ச்சியை, நம்முடைய மனப்பான்மையும், நடத்தையும், சேவையும் பிரதிபலிப்பதாக. இவ்வளவு ஏராளம் நமக்கு ஒருபோதும் இருந்ததில்லை!