உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/96 பக். 2
  • மே ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • துணை தலைப்புகள்
  • மே 6-ல் துவங்கும் வாரம்
  • மே 13-ல் துவங்கும் வாரம்
  • மே 20-ல் துவங்கும் வாரம்
  • மே 27-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 5/96 பக். 2

மே ஊழியக் கூட்டங்கள்

மே 6-ல் துவங்கும் வாரம்

பாட்டு 153

10 நிமி: சபை அறிவிப்புகள். “கோடைகாலத்துக்கு உங்கள் திட்டங்கள் யாவை?” என்ற கட்டுரையைக் கலந்தாலோசிக்கவும்.

15 நிமி: “முழு ஆத்துமாவோடும் செய்யுங்கள்!” கேள்விகளும் பதில்களும். நேரம் அனுமதிப்பதற்கு ஏற்ப, ஆங்கில காவற்கோபுரம், அக்டோபர் 15, 1981, பக்கம் 25-லுள்ள “குடும்பமாக கலந்தாலோசிக்க வேண்டிய குறிப்புகள்” என்ற கட்டுரையைச் சிந்திக்கவும்.

20 நிமி: “உங்கள் அயலாரிடம் சத்தியத்தைப் பேசுங்கள்.” கேள்விகளும் பதில்களும். ஆலோசனையாகக் குறிப்பிடப்பட்ட சம்பாஷிக்கும் முறைகளை மறுபார்வை செய்யுங்கள். ஆரம்பத்தில், சுருக்கமான சம்பாஷிக்கும் முறைகளைப் பயன்படுத்தி, பத்திரிகை விநியோகத்தில் பங்கேற்பதற்கு புதியவர்களை உற்சாகப்படுத்துங்கள். சந்தா அளிப்பிற்கான இரண்டு நடிப்புகளைக் கொண்டிருங்கள். சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதி ஒன்றையோ அல்லது பல பிரதிகளையோ அளிக்கவேண்டியதன் தேவையை வலியுறுத்துங்கள்.

பாட்டு 148, முடிவு ஜெபம்.

மே 13-ல் துவங்கும் வாரம்

பாட்டு 63

7 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

18 நிமி: “ஆவிக்குரிய விதத்தில் இவ்வளவு ஏராளம் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை!” கேள்விகளும் பதில்களும். ஒரு பருவ வயதினரையும் சேர்த்து இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளை, அவர்கள் பெற்ற சில ஆசீர்வாதங்களைச் சொல்ல வையுங்கள். அதிகரிக்கப்பட்ட மதித்துணருதல் எவ்வாறு நம்மை பரிசுத்த சேவையில் வைராக்கியமான செயலுக்கு உந்துவிக்கிறது என்பதை எடுத்துக்கூறுவதன் மூலம் முடிக்கவும்.

20 நிமி: “எல்லாருக்கும் எல்லாமாதல்.” 1-9 பத்திகளைக் கேள்வி பதில் மூலம் கலந்தாலோசித்தல். பத்திகள் 5-ஐயும் 6-ஐயும் வாசிக்கவும். நாம் என்ன சொல்கிறோம் என்பதைக்குறித்து கவனமாய் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும்; சாதுரியமாய் இருத்தல், இணங்கிப்போதலை அர்த்தப்படுத்துவதில்லை. மேலும், வெளி ஊழியத்தில் நாம் எதிர்ப்படும் மதக்கருத்துக்களின் அறிவை கொஞ்சம் பெற்றிருப்பது நன்மையாக இருப்பினும், யெகோவாவின் பெயர் மகிமைப்படுத்துதலின், ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதின் நோக்கத்திலிருந்து நாம் தடம் மாறக்கூடாது. அத்தகைய உணர்வு, பிரயோஜனம் அற்றது என்று அடிக்கடி நிரூபிக்கப்பட்ட மனித தத்துவங்களின் பேரில் நீண்ட விவாதத்தில் உட்படுவதிலிருந்து நம்மைத் தடுத்துவிட வேண்டும்.

பாட்டு 193, முடிவு ஜெபம்.

மே 20-ல் துவங்கும் வாரம்

பாட்டு 126

10 நிமி: சபை அறிவிப்புகள். பத்திரிகை விநியோகத்தில் பங்கேற்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

15 நிமி: “சத்தியத்தைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருங்கள்.” விசேஷ அளிப்பு நடவடிக்கையின்போது எங்கெல்லாம் சந்தாக்கள் அல்லது பத்திரிகைகள் அளிக்கப்பட்டனவோ அங்கெல்லாம் பைபிள் படிப்பு நடத்தவேண்டும் என்ற இலக்குடன் மறுசந்திப்புகள் செய்யவேண்டியதன் தேவையை வலியுறுத்தவும். முதல் சந்திப்பில் பத்திரிகைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டிருந்தால், மறுசந்திப்பின்போது, ஒரு சந்தாவை அளிக்கலாம் அல்லது பத்திரிகை மார்க்கத்தை ஆரம்பிக்கலாம். சுருக்கமான இரு நடிப்புகளைக் கொண்டிருங்கள்.

20 நிமி: “எல்லாருக்கும் எல்லாமாதல்.” பத்தி 10-லிருந்து கடைசிவரை சபையாருடன் கலந்தாலோசியுங்கள். உரையாடலை நிறுத்தும் நான்கு வகை கூற்றுகளையும் சமாளிப்பதில், ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்கவேண்டிய சில வழிகளைப்பற்றி சுருக்கமான நடிப்புகளைக் கொண்டிருங்கள். வெளி ஊழியத்தில் பங்கேற்கும்போதெல்லாம், இந்த நான்கு பக்க உட்சேர்க்கையைத் தங்களுடன் வைத்திருக்க பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள், ஒருவேளை தங்களுடைய சொந்த பிரதியாகிய நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திற்குள் இதை வைத்துக்கொள்ளலாம்.

பாட்டு 28, முடிவு ஜெபம்.

மே 27-ல் துவங்கும் வாரம்

பாட்டு 121

5 நிமி: சபை அறிவிப்புகள்.

15 நிமி: ஜூன் மாதத்தில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை அளித்தல். முதலாவதாக, அறிவு புத்தகம் ஏன் வெளியிடப்பட்டது என்பதை ஊழியக் கண்காணி கலந்தாலோசிப்பார். அதன்பிறகு அதனுடைய சிறப்பு அம்சங்களை அவர் இரண்டு அல்லது மூன்று திறமையான பிரஸ்தாபிகளுடன் சேர்ந்து கலந்தாலோசிப்பார். நம் எதிர்காலம், மனிதரின் துன்பம், கடவுளுடைய ராஜ்யம், தேவபக்தியுள்ள நடத்தை, குடும்ப வாழ்க்கை, ஜெபத்தின் நன்மைகள் போன்றவற்றின் பேரிலான கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதில்களை அளிக்கிறது. குழுவிலுள்ள இரண்டு வெவ்வேறு நபர்கள், முதல் சந்திப்பிலோ மறுசந்திப்பிலோ பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய அணுகுமுறையை நடித்துக்காட்டட்டும். பிற்பாடு ஊழியக் கண்காணி பின்வரும் குறிப்புகளைக் கலந்தாலோசிப்பார். குறுகிய காலப்பகுதிக்குள் திறம்பட்ட அநேக பைபிள் படிப்புகளை நடத்தவேண்டிய தேவை இருக்கிறது. இந்த நோக்கத்திற்காகவே இந்தப் புத்தகம் விசேஷமாக வடிவமைக்கப்பட்டது. இது சத்தியத்தை நேர்மறையாகவும், சுருக்கமான முறையிலும் அளிக்கிறது. ஒவ்வொரு பத்திக்கான கேள்விகளும், கூடவே அதிகாரத்தின் இறுதியிலுள்ளவையும் முக்கிய குறிப்புகளை ஒருமுகப்படுத்த நமக்கு உதவுகின்றன. புதிதாக ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட விரும்புவோரிடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இந்தப் புத்தகம் கொண்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் பைபிள் படிப்பு ஆரம்பிக்க வேண்டும் என்ற இலக்குடன் ஊழியம் செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

10 நிமி: கேள்விப் பெட்டி. வாசித்து, சபையாருடன் கலந்தாலோசிக்கவும்.

15 நிமி: “நீங்கள் அதிக வேலையாக இருக்கிறீர்களா?” கேள்விகளும் பதில்களும். ஜூன் 8, 1990, ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 14-16-லிருந்து குறிப்புகளை நேரம் அனுமதிப்பதற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பான தேவராஜ்ய நடவடிக்கைகளை எவ்வாறு வெற்றிகரமாக சமாளிக்க முடிகிறது என்பதை ஓரிரு பிரஸ்தாபிகளைச் சுருக்கமாகச் சொல்ல வையுங்கள்.

பாட்டு 155, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்