அக்டோபர் ஊழியக் கூட்டங்கள்
அக்டோபர் 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நாட்டினுடைய மற்றும் உள்ளூர் சபையினுடைய ஜூன் வெளி ஊழிய அறிக்கையின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.
15 நிமி: கேள்விப் பெட்டி. ஊழியக் கண்காணி அல்லது தகுதிவாய்ந்த வேறொரு மூப்பர் அதிலுள்ள தகவலை சபையாருடன் கலந்தாலோசிக்கிறார்.
20 நிமி: “பத்திரிகை அளிப்புக்கு சொந்தமாகவே தயாரியுங்கள்.” (பாராக்கள் 1-7) பாராக்கள் 1-4-ல் கேள்விகளைக் கேளுங்கள்; பின்னர், பாராக்கள் 5-7-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, சந்தாக்கள் அளிப்பதற்கு புதிதாக வந்திருக்கும் பத்திரிகைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காண்பிக்க இரண்டோ மூன்றோ சுருக்கமான நடிப்புகளைக் கொண்டிருங்கள். மார்ச் 1, 1987, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 17, பாராக்கள் 8-9-லிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 222, முடிவு ஜெபம்.
அக்டோபர் 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: “மேம்பட்ட ஒன்றைப் பற்றிய நற்செய்தியைப் பிரசுரித்தல்.” கேள்விகளும் பதில்களும். காவற்கோபுரம் பத்திரிகையில் வந்திருக்கும் குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்.—மார்ச் 1, 1987, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 13-ஐக் காண்க.
20 நிமி: “பத்திரிகை அளிப்புக்கு சொந்தமாகவே தயாரியுங்கள்.” (பாராக்கள் 8-11) கேள்விகளும் பதில்களும். ஜனவரி 1, 1994, காவற்கோபுரம், பக்கங்கள் 24-5, பாராக்கள் 18-21-லுள்ள நான்கு ஆலோசனைகளின்பேரில் குறிப்புகளை உட்படுத்துங்கள். பத்திரிகைகளின் அக்டோபர் பிரதிகளைப் பயன்படுத்தி, எப்படி ஒரு பிரசங்க அளிப்பைத் தயாரிப்பது என்பதைக் காண்பியுங்கள்: (1) உங்கள் பிராந்தியத்தில் அக்கறையைக் கவரும் சாத்தியமுள்ள ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுங்கள், (2) சிறப்பித்துக் காட்டுவதற்கு ஏற்ற அக்கறைக்குரிய ஒரு குறிப்பைத் தேடுங்கள், (3) அந்தக் குறிப்புக்குக் கவனத்தை ஈர்ப்பதற்கு ஏதுவாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கேள்வியைச் சிந்தித்து வையுங்கள், (4) வாய்ப்பளிக்கப்பட்டால் வாசிப்பதற்கு ஒரு வேத வசனத்தைத் தேர்ந்தெடுத்து வையுங்கள், (5) உங்கள் அறிமுக வார்த்தைகளையும், வீட்டுக்காரரை சந்தா ஏற்கும்படி உற்சாகப்படுத்தும் வண்ணம் அந்தப் பத்திரிகையைப் பற்றி என்ன சொல்லுவீர்கள் என்பதையும் தயாரித்து வையுங்கள். இரண்டோ மூன்றோ திறம்பட்ட பிரஸ்தாபிகள், ஒவ்வொருவரும் ஒரு பிரசங்க அளிப்பை நடித்துக்காட்டச் செய்யுங்கள். எளியதோர் பத்திரிகை அளிப்பை நடித்துக் காண்பிக்கும் ஓர் இளைஞரையும் உட்படுத்துங்கள். ஒரு சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதிகளைக் கொடுக்க நிச்சயமாயிருங்கள்.
பாட்டு 82, முடிவு ஜெபம்.
அக்டோபர் 21-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். ஒரு நபர், பத்திரிகைகளை வாங்குவதில் அக்கறை காண்பித்து, ஆனால் சந்தாவை ஏற்க மறுத்தால், ஒரு பத்திரிகை மார்க்கத்தை எப்படி தொடங்குவது என்பதுபற்றி விளக்குங்கள்: (1) பிரசுரம் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் எந்தக் கட்டுரை சிறப்பித்துக் காட்டப்பட்டது என்பதையும் பதிவு செய்து வையுங்கள், (2) அடுத்த பிரதிகளுடன் திரும்பச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள், (3) இந்தச் சந்திப்புகளைச் செய்வதற்கு உங்களுடைய வாராந்தர ஊழிய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வையுங்கள். பத்திரிகை மார்க்கத்துக்காகச் செய்யும் ஒவ்வொரு சந்திப்பையும் ஒரு மறுசந்திப்பாக அறிக்கைசெய்ய ஞாபகம் வையுங்கள்.
15 நிமி: “உங்கள் பிராந்தியம் முழுவதிலும் ஊழியம் செய்யுங்கள்.” கட்டுரையையும் வியாபாரப் பகுதிகளில் ஊழியம் செய்வதற்கான உள்ளூர் ஏற்பாடுகள் என்னவென்பதையும் கலந்தாலோசியுங்கள். சபையார் தங்கள் பிராந்தியத்திலுள்ள கடைகளில் ஊழியம் செய்தபோது அனுபவித்த உற்சாகமளிக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி அழையுங்கள்.
15 நிமி: உள்ளூர் தேவைகள். அல்லது மே 1, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 21-4-லுள்ள “உங்கள் நம்பிக்கையை இறுதிவரை உறுதியாக காத்துக்கொள்ளுங்கள்,” என்ற கட்டுரையின்பேரில் ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு.
பாட்டு 12, முடிவு ஜெபம்.
அக்டோபர் 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். டிசம்பரில் உலகப்பிரகாரமான விடுமுறைகள் நெருங்கி வருவதால், உலகப்பிரகாரமான வேலையிலிருந்தும் பள்ளியிலிருந்தும் ஒருவேளை அதிக ஓய்வு நேரத்தை அவை அனுமதிப்பதால், துணைப் பயனியர்களாக சேர்ந்துகொள்வதற்கான சாத்தியத்தைக் குறித்து எல்லாரும் சிந்தித்துப் பார்க்கும்படி உற்சாகப்படுத்தவும். இந்த வார இறுதியில் அனைவரும் அக்டோபர் வெளி ஊழிய அறிக்கைகளைப் போடும்படி கேட்டுக்கொள்ளவும்.
20 நிமி: “வாய்ப்பான காலத்தை வாங்குவது எப்படி.” கேள்விகளும் பதில்களும். டிசம்பர் 1, 1989, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 16-17, பாராக்கள் 7-11-லிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: நவம்பருக்குரிய பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். அறிவு புத்தகம் கொடுக்கப்படும்; மேலும், வீட்டு பைபிள் படிப்புகளைத் தொடங்கும் நோக்கில், பிரசுரங்கள் கொடுக்கப்பட்ட எல்லாரையும் மீண்டும் சந்திப்பதற்காக விசேஷ முயற்சி எடுக்கப்படும். அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவத்தையும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் இரண்டோ மூன்றோ பிரஸ்தாபிகள் கலந்து பேசுகிறார்கள். அதிலுள்ள தகவல், வெவ்வேறு பின்னணிகளிலுள்ள மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. புதியவர்கள் முழுக்காட்டப்படுவதற்கு முன் தெரிந்திருக்கவேண்டிய அடிப்படை பைபிள் விஷயங்களையும் நியமங்களையும் அது சிந்திக்கிறது. சீராக படிப்பை நாம் முன்னேறச் செய்தோமானால், மாணாக்கர் விரைவான முன்னேற்றத்தைச் செய்ய முடியும். நேரடியான அணுகுமுறையைப் பயன்படுத்தி ஒரு படிப்பைத் தொடங்குவது எப்படி என்பதுபற்றி கலந்தாலோசித்து நடித்துக் காண்பிக்கவும்: பக்கங்கள் 4-5-லுள்ள படத்தையும் அதன் விளக்கக் குறிப்பையும் மறுபார்வை செய்யுங்கள்; நம் படிப்பு முறையை விளக்குங்கள்; முதல் அதிகாரத்திலுள்ள முதல் ஐந்து பாராக்களை சுருக்கமாக கலந்தாலோசியுங்கள்; பின்னர் மறுபடியும் வருவதற்காக ஒரு நேரத்தை உறுதி செய்துகொண்டு, நித்திய ஜீவன் வெறும் ஒரு கனவா? என்ற கேள்விக்கு பதிலளித்து கலந்தாலோசிப்பைத் தொடருங்கள். ஒரு வீட்டு பைபிள் படிப்பு நடத்தும் சிலாக்கியத்திலிருந்து வரும் சந்தோஷத்தை அழுத்திக் கூறுங்கள்.
பாட்டு 162, முடிவு ஜெபம்.