உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/97 பக். 2
  • ஆகஸ்ட் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
  • துணை தலைப்புகள்
  • ஆகஸ்ட் 4-ல் துவங்கும் வாரம்
  • ஆகஸ்ட் 11-ல் துவங்கும் வாரம்
  • ஆகஸ்ட் 18-ல் துவங்கும் வாரம்
  • ஆகஸ்ட் 25-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 8/97 பக். 2

ஆகஸ்ட் ஊழியக் கூட்டங்கள்

ஆகஸ்ட் 4-ல் துவங்கும் வாரம்

பாட்டு 16

7 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நாட்டினுடைய மற்றும் உள்ளூர் சபையினுடைய ஏப்ரல் மாத ஊழிய அறிக்கையின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.

13 நிமி:“கூட்டங்கள் நற்கிரியைகள் செய்ய ஊக்குவிக்கின்றன.” கேள்விகளும் பதில்களும். கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் கட்டியெழுப்பும் சம்பாஷணையில் ஈடுபடுவதால் வரும் நன்மைகளைக் குறிப்பிடுங்கள்.—பள்ளி துணைநூல், பக்கம் 82, பாராக்கள் 17-18-ஐக் காண்க.

25 நிமி:“காரியங்களை விளையச்செய்வதற்கு யெகோவாவின்மேல் சார்ந்திருங்கள்.” பேச்சும் நடிப்புகளும். சிற்றேடுகள் அளிக்கப்பட்ட இடங்களில் மறுசந்திப்பு செய்வதற்கான தேவையை வலியுறுத்துங்கள். படிப்புகளை எப்படி துவங்கவேண்டும் என்பதைக் காட்டும் நன்கு தயாரிக்கப்பட்ட இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். மார்ச் 1997 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் பாராக்கள் 7-11-ல் உள்ள குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாட்டு 78, முடிவு ஜெபம்.

ஆகஸ்ட் 11-ல் துவங்கும் வாரம்

பாட்டு 20

5 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

15 நிமி:“முதியோர் விட்டுவிடாமல் பிரசங்கிக்கின்றனர்.” கேள்விகளும் பதில்களும். துணைப் பயனியர் ஊழியம் செய்த வயதான பாட்டியம்மாவின் அனுபவத்தைக் குறித்து ஜூலை 1, 1988, ஆங்கில காவற்கோபுரத்தில், பக்கம் 13-லிருந்து சேர்த்துக்கொள்ளுங்கள்.

25 நிமி:“ராஜ்ய மன்றம் கட்டுவதற்கான தேவையை பூர்த்திசெய்தல்.” கேள்விகளும் பதில்களும்.

பாட்டு 71, முடிவு ஜெபம்.

ஆகஸ்ட் 18-ல் துவங்கும் வாரம்

பாட்டு 14

10 நிமி:சபை அறிவிப்புகள்.

10 நிமி:சபையின் தேவைகள்.

25 நிமி:நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி, மறுசந்திப்புகள் செய்யுங்கள். ஒரு கேள்வியை எழுப்பி, அதற்குரிய பதிலை இந்த சிற்றேட்டில் கண்டுபிடிப்பது எப்படி என்பதைக் காட்டுங்கள். உதாரணமாக, இந்தச் சிற்றேடு இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது: மரித்தோருக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? (பக்கங்கள் 5-6) துக்கப்படுவது தவறா? (பக்கங்கள் 8-9) துக்கத்தை ஒருவர் எப்படி சமாளிக்கமுடியும்? (பக்கம் 18) மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்? (பக்கங்கள் 20-3) மரணத்தைப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம்? (பக்கம் 25) பைபிள் எப்படிப்பட்ட ஆறுதலை அளிக்கிறது? (பக்கம் 27) பிறகு, மறுசந்திப்புகளில் மரணத்தைப் பற்றி பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த சிற்றேட்டை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் குறித்து திறம்பட்ட பிரஸ்தாபிகள் இருவரிடம் சுருக்கமாக கலந்தாலோசியுங்கள். மறுசந்திப்பின்போது இந்த சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள்.

பாட்டு 94, முடிவு ஜெபம்.

ஆகஸ்ட் 25-ல் துவங்கும் வாரம்

பாட்டு 23

10 நிமி:சபை அறிவிப்புகள். வெளி ஊழிய அறிக்கையை போடும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள். அடுத்த வாரத்துக்கான ஊழிய ஏற்பாடுகளை அறிவிப்பு செய்யுங்கள்.

15 நிமி:“பள்ளிக்கூடத்திலிருந்து முழு நன்மையைப் பெறுங்கள்.” டிசம்பர் 22, 1995, விழித்தெழு!-வில் பக்கங்கள் 7-11-ல் உள்ள பிரயோஜனமுள்ள குறிப்புகளை உட்படுத்தி, தகப்பன் பிள்ளைகளுடன் கட்டுரையைக் கலந்தாலோசிக்கிறார்.

20 நிமி:நாக்கத்துடன் பிரசங்கியுங்கள். நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 8-12-ஐ மூப்பர் ஒருவரும் ஒன்று அல்லது இரண்டு உதவி ஊழியர்களும் மறுபார்வை செய்கின்றனர். நம் ஊழியத்தினிடமாக நம்பிக்கையான, முன்னேறுகிற மனநிலையை நாம் ஏன் காத்துக்கொள்ளவேண்டும் என்றும் அமைப்போடு எப்போதும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிற காரணங்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.

பாட்டு 100, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்