செப்டம்பர் ஊழியக் கூட்டங்கள்
செப்டம்பர் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சப அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி:“அதிமுக்கிய காரியங்களை முதலிடத்தில் வையுங்கள்.” கேள்விகளும் பதில்களும். நேரம் அனுமதிப்பதற்கேற்ப பிப்ரவரி 22, 1987 ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 8, 9-ல் காணப்படும் “சரியான முன்னுரிமைகளை வையுங்கள்” என்பதன் பேரில் குறிப்புகள் சொல்லுங்கள்.
20 நிமி:“குடும்ப மகிழ்ச்சியின் ரகசியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளுதல்.” பாராக்கள் 1 மற்றும் 6-8-ன் அடிப்படையிலான பேச்சு. 2-5 பாராக்களை நடித்துக்காட்டவும். சீஷராக்க வேண்டிய பொறுப்பை மனதிற்கொண்டு, படிப்புகளை ஆரம்பிக்கவேண்டும் என்ற இலக்கை அடைய வலியுறுத்துங்கள்.
பாட்டு 107, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “சீஷர்களை உண்டுபண்ணுகிற பைபிள் படிப்புகள்.” பேச்சும், குழு கலந்தாலோசிப்பும். கட்டுரையை மூப்பர் மறுபார்வை செய்கிறார். பிறகு “ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும்படி மாணாக்கர்களை உந்துவியுங்கள்” (km-TL 6/96 உட்சேர்க்கை, பாராக்கள் 20-2) பகுதியை படிப்புகள் நடத்தும் அனுபவமுள்ள பிரஸ்தாபிகளுடன் கலந்தாலோசிக்கிறார்.
பாட்டு 109, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள்.
15 நிமி: ஓர் உரையாடலை எவ்வாறு துவங்குவது. ஊழியத்தில் நம்முடைய வெற்றி, மற்றவர்களை அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுத்துவதன் பேரிலேயே அதிகமாக சார்ந்திருக்கிறது. மற்றவர்களை கவனிக்கத்தூண்டும் ஏதாவது ஒன்றை நாம் சொல்லக்கூடுமானால், சாட்சி கொடுத்தலில் எதிர்படும் ஒரு மிகப்பெரிய சவாலை நாம் மேற்கொண்டுவிட்டோம். பள்ளி துணைநூல் படிப்பு 16, பாராக்கள் 11-14-ல் உள்ள முக்கிய குறிப்புகளை சபையாருடன் கலந்துபேசுங்கள். உரையாடல்களை ஆரம்பிப்பதில் திறமையும் அனுபவமும் உள்ள பிரஸ்தாபிகள், பின்வருபவர்களைப் போன்றவர்களிடம் பேசும்போது என்ன ஆரம்ப வார்த்தைகளை உபயோகிப்பார்கள் என்பதை சொல்லச் செய்யுங்கள்: (1) தெருவில் நடந்து செல்லும் ஒருவர், (2) பஸ்ஸில் பயணம்செய்யும் ஒருவர், (3) கவுண்டருக்கு பின்னாலிருக்கும் ஒரு கிளர்க், (4) ஷாப்பிங் சென்டரின் வாகனம் நிறுத்துமிடத்தில் இருக்கும் ஒருவர், (5) பூங்காவில் அமர்ந்திருக்கும் ஒருவர், (6) தொலைபேசி சாட்சி கொடுத்தலில் சந்திக்கப்படும் ஒருவர்.
20 நிமி:பள்ளி சிற்றேட்டை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? அக்டோபர் 1, 1985, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 30-1-ஐ ஒரு மூப்பர் சில பெற்றோருடனும் பிள்ளைகளுடனும் கலந்துபேசுகிறார். பள்ளி சிற்றேட்டை பயன்படுத்தியதால் தாங்கள் பெற்ற தனிப்பட்ட அனுபவங்களை அவர்கள் கூறுகிறார்கள்.
பாட்டு 112, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 22-ல் துவங்கும் வாரம்
5 நிமி:சபை அறிவிப்புகள்.
623 நிமி:“1997 ‘கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்’ மாவட்ட மாநாடு.” (பாராக்கள் 1-16) கேள்விகளும் பதில்களும். பாராக்கள் 10, 12 மற்றும் 15-ஐ வாசிக்கவும். நம்முடைய அடக்கமான கிறிஸ்தவ தோற்றத்தையும் நடத்தையையும் ஜாக்கிரதையாக காத்துக்கொள்வதைப் பற்றியும் நம்முடைய குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்வதைப் பற்றியுமான வேதப்பூர்வ முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.
17 நிமி:சபையின் 1997 ஊழிய ஆண்டின் அறிக்கையை மறுபார்வை செய்யுங்கள். முக்கியமாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சபையின் நல்ல முயற்சிக்காக ஊழியக் கண்காணி போற்றுதல் தெரிவிக்கிறார். முன்னேற்றத்திற்கான அறிவுரைகளை கூறுகிறார். நவம்பர், மே மற்றும் ஆகஸ்ட் ஆகிய ஐந்து வார-இறுதிகள் கொண்ட மாதங்களில் துணைப் பயனியர் ஊழியம் செய்வது உட்பட, புதிய ஊழிய ஆண்டிற்கான சில நடைமுறையான இலக்குகளைக் கூறுகிறார்.
பாட்டு 113, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 29-ல் துவங்கும் வாரம்
13 நிமி:சபை அறிவிப்புகள். ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள். அடுத்த வாரம் புத்தகப் படிப்பில் குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை படிக்க ஆரம்பிப்போம் என்பதை நினைப்பூட்டுங்கள். அக்டோபர் மாதத்தில் சந்தா அளிப்பிற்காக தயார் செய்யும்விதமாக, அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 8-ல் உள்ள “உங்கள் பிராந்தியத்தை ஆராயுங்கள்,” “பத்திரிகைகளில் உள்ளவற்றை நன்கு தெரிந்துவைத்திருங்கள்,” “உங்கள் அறிமுகத்தை தயாரியுங்கள்,” “வீட்டுக்காரருக்கு ஏற்றவாறு மாற்றியமையுங்கள்,” மற்றும் “ஒருவருக்கொருவர் உதவியாய் இருங்கள்” என்பதன் தேவையை கலந்தாராயுங்கள்.
20 நிமி:“1997 ‘கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்’ மாவட்ட மாநாடு.” (பாராக்கள் 17-22) கேள்விகளும் பதில்களும். பாரா 17-யும் மேற்கோள் கொடுக்கப்பட்ட வசனங்களையும் வாசிக்கவும். முக்கியமாக இருக்கைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒழுங்கை கடைப்பிடித்து, மற்றவர்களுக்கு கரிசனை காட்டவேண்டிய தேவையை வலியுறுத்துங்கள். ‘மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்களை’ மறுபார்வை செய்யும் ஒரு சுருக்கமான பேச்சுடன் முடியுங்கள்.
12 நிமி:உங்கள் ஊழியத்தை மகிமைப்படுத்துங்கள். நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 81-3 அடிப்படையிலான சபையார் கலந்தாலோசிப்பு. முக்கிய குறிப்புகளை உயர்த்திக்காட்ட பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்: (1) இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுவதன் மூலம் நாம் எவ்வாறு பயனடைகிறோம்? (2) பிரசங்கிக்க வேண்டிய நம்முடைய உத்திரவாதம் எவ்வளவு முக்கியமானது? (3) யெகோவாவுக்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்படி என்ன உள்நோக்கங்கள் நம்மைத் தூண்டின? (4) ஒருவர் கடவுளை சேவிக்க வேண்டுமானால், எப்படிப்பட்ட நடத்தை தேவைப்படுகிறது? (5) இயேசு பிரசங்கித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
பாட்டு 121, முடிவு ஜெபம்.