ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூன் 12-ல் துவங்கும் வாரம்
8 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும்.
15 நிமி:“உங்கள் முயற்சிகள் வீணாவதில்லை.” முகவுரையை ஒரு நிமிடத்திற்குள்ளாக முடித்துக்கொண்டு, கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள். ஜூன் 15, 1996, காவற்கோபுரத்தின் 32-ம் பக்கத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் அனுபவத்திலுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
22 நிமி:தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து படிப்பை துவங்குதல். அக்டோபர் 1999, நம் ராஜ்ய ஊழியத்தின் 8-ம் பக்கத்திலுள்ள கட்டுரையை மறுபார்வை செய்யும் ஒரு பேச்சு. 6-ம் பத்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் அளிப்பை நடித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்புகளை வெற்றிகரமாக துவங்கியதைப் பற்றி ஓரிரு பிரஸ்தாபிகளை சுருக்கமாக சொல்ல சொல்லுங்கள். அத்துடன் படிப்பை எவ்வாறு அறிமுகப்படுத்தினார்கள், படிப்பு தொடர என்ன செய்தார்கள் என்பதையும் சொல்ல சொல்லுங்கள்.
பாட்டு 209, முடிவு ஜெபம்.
ஜூன் 19-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை மற்றும் காலாண்டு கணக்கு தணிக்கை. சபையின் கையிருப்பில் இளைஞர் கேட்கும் கேள்விகள், உன் இளமை புத்தகங்கள் இருந்தால் வரும் மாதங்களில் அவற்றை ஊழியத்தில் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதற்கு நடித்துக்காட்டுங்கள்.
8 நிமி:கேள்விப் பெட்டி. மூப்பரின் பேச்சு.
25 நிமி:“ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?” ஊழியக் கண்காணியால் நடத்தப்படும் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு பாராவையும், பாராக்கள் 3, 4, 7-ல் உள்ள வசனங்களையும் சப்தமாக வாசிக்கச் சொல்லுங்கள். பாரா 6-ஐ சிந்திக்கும்போது, முழுக்காட்டப்பட்ட இப்போது செயலற்ற ஒரு நபருடன் தனிப்பட்ட பைபிள் படிப்பை திரும்ப நடத்த வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் விஷயத்தில் ஊழியக் கண்காணியின் பங்கை விளக்குங்கள்.—நவம்பர் 1998 நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள கேள்விப் பெட்டியை பார்க்கவும்.
பாட்டு 89, முடிவு ஜெபம்.
ஜூன் 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். ஜூன் மாதத்திற்கான ஊழிய அறிக்கை போடுவதற்கு பிரஸ்தாபிகளை நினைப்பூட்டுங்கள். ஜூலை மாதத்திற்கான பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். சபையிலுள்ள பழைய சிற்றேடுகளை காண்பித்து, அவை ஒவ்வொன்றின் நோக்கத்தையும் சுருக்கமாக சொல்லுங்கள். அவற்றுள் ஒன்றை ஊழியத்தில் எவ்வாறு அளிக்கலாம் என்பதை திறம்பட நடித்துக் காட்டுங்கள்.
18 நிமி:பதில் சொல்ல அறிந்திருங்கள். (கொலோ. 4:6) பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். பைபிள் சம்பந்தப்படாத பொது விவாதத்தை ஒருவர் எழுப்பினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நாம் சரிவர பதிலளிக்க நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் நமக்கு உதவி செய்கிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சாதுரியமாக பதிலளிப்பதற்கு சில நடைமுறையான ஆலோசனைகளை அது கொடுக்கிறது. உதாரணமாக, நாம் மரணத்தை எதிரி எனவும் கிறிஸ்துவின் கிரய பலியால் அது நீக்கப்படும் எனவும் நம்பினாலும் மற்றவர்கள் அவ்வாறு நம்புவதில்லை. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது என்பது அநேகரது அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படிப்பட்டவர்களிடம் எவ்வாறு பேசுவது? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் 103-4, 321 ஆகிய பக்கங்களில் “ஒருவர் இவ்வாறு சொன்னால்—” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் பதில்களை கலந்தாலோசியுங்கள். வெளி ஊழியத்திற்கு செல்லுகையில் அனைவரிடமும் இப்புத்தகம் இருப்பது நல்லது என சொல்லுங்கள்.
17 நிமி:“நீங்கள் அங்கு இருப்பீர்களா?” அனுபவங்களும் மூப்பரின் பேச்சும். பைபிள் காலங்கள் முதற்கொண்டு இன்று வரை கடவுளுடைய ஜனங்களை பலப்படுத்துவதில் மாபெரும் பொது கூட்டங்கள் முக்கிய பாகம் வகித்துள்ளன. (அறிவிப்போர் [ஆங்கிலம்] புத்தகத்தில் பக்கம் 254-ல் பாராக்கள் 1-3-ஐயும் உட்பார்வை [ஆங்கிலம்] தொகுப்பு 1-ல் பக்கம் 821-ன் பாரா 5-ஐயும் காண்க.) இந்த வருட மாவட்ட மாநாட்டில் மூன்று நாட்களும் ஆஜராவதற்கு இப்போதே ஏற்பாடுகளை செய்யுமாறு எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள். இதற்கு முன்பு மாநாடுகளில் கலந்துகொள்ள தாங்கள் எடுத்த ஊக்கமான முயற்சிகள் எவ்வாறு ஆவிக்குரிய விதத்தில் பலன்களை அளித்தன என்பதை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 44, முடிவு ஜெபம்.
ஜூலை 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து யாராவது படிப்பை துவங்கியிருந்தால், அதை எவ்வாறு துவங்கினார்கள் என்பதை சொல்லச் சொல்லுங்கள்.
15 நிமி:சபை தேவைகள்.
20 நிமி:பைபிள் நியமங்களை பின்பற்றுவது குடும்ப வாழ்க்கையை பலப்படுத்துகிறது. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் 253-4 பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் எட்டு குறிப்புகளின் அடிப்படையில் இரு சகோதரர்களுக்கிடையில் கலந்தாலோசிப்பு. கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களை புரிந்துகொண்டு அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவதே குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்; இதை பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொள்ள உதவுவதன் அவசியத்தை சபையாருக்கு விளக்குங்கள். இதை எவ்வாறு செய்யலாம் என்பதை தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலுள்ள 8-ம் பாடத்தை பயன்படுத்தி நடித்துக்காட்டுங்கள். பைபிள் அறிவுரைகளுக்கு செவிசாய்க்கும் குடும்பங்கள் அன்பு, ஐக்கியம் என்ற பிணைப்புகளில் ஒன்று சேர்க்கப்படுவதால் அதிக சந்தோஷத்தை அனுபவிக்கின்றன. குடும்ப மகிழ்ச்சி புத்தகம் 13-ம் அதிகாரத்தின் 1, 21-2 ஆகிய பாராக்களிலுள்ள அனுபவத்தை சொல்லுங்கள்.
பாட்டு 51, முடிவு ஜெபம்.