2001-ம் ஆண்டிற்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி
1 தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நாம் அனைவருமே ஏன் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்பதற்கு ஏராளமான வேதப்பூர்வ காரணங்கள் உள்ளன.—நீதி. 15:23; மத். 28:19, 20; அப். 15:32; 1 தீ. 4:12, 13; 2 தீ. 2:2; 1 பே. 3:15.
2 வாராந்தர பைபிள் வாசிப்பு அட்டவணை நீண்ட காலமாகவே இந்தப் பள்ளியில் ஓர் அம்சமாக உள்ளது. இந்த அட்டவணையின்படி, ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட ஒரு பக்கம் வாசிக்க வேண்டும். இந்த வருடம் முதற்கொண்டு, எழுத்துமுறை மறுபார்வை செய்யும் வாரத்திற்கும் பைபிள் வாசிப்பு அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக வந்துகொண்டிருந்த கூடுதல் வாசிப்பு அட்டவணை முடிவடைந்துவிட்டது. தற்போதுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளதை தவிர இன்னும் அதிக பகுதியை பைபிளில் வாசிக்க விரும்பினால் நீங்களாகவே பைபிள் வாசிப்பு அட்டவணை ஒன்றைப் போட்டுக்கொள்ளலாம்.
3 பேச்சு எண் 2, கடவுளுடைய வார்த்தையின் ‘பொது வாசிப்பிற்கு’ சகோதரர்களை பயிற்றுவிக்கிறது. (1 தீ. 4:13, NW) உங்களுக்கு வாசிப்பு நியமிப்பு இருந்தால், திரும்பத் திரும்ப சப்தமாக வாசித்துப் பழகுங்கள். உச்சரிப்பிலும், குரலின் ஏற்றத்தாழ்விலும், இன்னும் பிற அம்சங்களிலும் திறமையை வளர்ப்பது நல்ல வாசிப்புக்கு பெரிதும் உதவும்; இதற்கு பள்ளி துணைநூலில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றலாம்.
4 பேச்சு எண் 3 மற்றும் 4, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து நியமிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கென்றே தயாரிக்கப்பட்டது. உங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதியில், குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்ல முடியாதபடி ஏராளமான தகவல்கள் இருந்தால், உங்கள் ஊழிய பிராந்தியத்திற்குப் பயனுள்ளவற்றை மட்டும் தெரிந்தெடுங்கள். உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான ஏதாவது ஓர் அம்சத்தை பேச்சின் அமைப்பாக வைத்துக்கொள்ளலாம்.
5 பள்ளியில் உங்களுக்கு நியமிக்கப்படும் எல்லா பேச்சுக்களையும் தவறாமல் கொடுக்க எப்போதும் முயற்சி செய்யுங்கள். நேரத்தைச் செலவிட்டு நன்றாக தயாரியுங்கள்; உங்கள் இருதயத்திலிருந்து பேசுங்கள். அப்போது, உங்கள் பேச்சு சபையாரை உற்சாகமூட்டும். அத்துடன், 2001-ம் ஆண்டிற்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் முழு இருதயத்தோடு பங்கேற்பதால் நீங்களும் தனிப்பட்ட விதமாக நன்மை அடைவீர்கள்.