2002-ம் ஆண்டிற்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி
1 பேச்சுத் திறனை பெரும்பாலோர் அற்ப விஷயமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் பேச்சு யெகோவா தந்த வரம். இதனால் மற்றவர்களுடன் உரையாட முடிகிறது, நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடிகிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாக, பேச்சுத் திறன் இருப்பதால் கடவுளை நம்மால் துதிக்க முடிகிறது.—சங். 22:22; 1 கொ. 1:4-7.
2 யெகோவாவின் பெயரை அறிவிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி பயிற்சி அளிக்கிறது. (சங். 148:12, 13) 2002-க்கான பள்ளி அட்டவணையில் பல்வேறுபட்ட பைபிள் தலைப்புகள் உள்ளன; இதனால் நாம் தனிப்பட்ட வகையில் பயன் பெறுவது மட்டுமின்றி, ஊழியத்திலும் அவற்றை பயன்படுத்த முடியும். இந்தப் பள்ளிக்காக தயாரித்து வந்து கலந்துகொள்கையில், கடவுளுடைய வார்த்தையை கற்பிப்பவர்களாக நம் அறிவையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளலாம்.—சங். 45:1.
3 பைபிளை தினமும் வாசியுங்கள்: பொதுவாக பைபிளை அடிக்கடி எடுத்துப் பார்க்க வசதியாக வைத்திருந்தால், நமக்கு கிடைக்கும் சாவகாசமான நேரத்தையெல்லாம் அதை வாசிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பயன்படுத்திக் கொள்ள நம்மில் பெரும்பாலோருக்கு பகலில் சில நிமிடங்களாவது மிஞ்சும். பள்ளி அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வாசிப்புப் பகுதியை தவறாமல் பின்பற்றுவதற்கு, ஒரு நாளுக்கு ஒரு பக்கம் வாசித்தாலே போதுமானது; இவ்வாறு வாசிப்பது எவ்வளவு பயனளிக்கும்!—சங். 1:1-3.
4 பைபிளை நன்கு வாசிக்கும் திறன், நாம் வாசிப்பதைக் கேட்பவர்களின் இருதயத்தை எட்டி, யெகோவாவை அவர்கள் துதிப்பதற்கு உந்துவிக்கலாம். பள்ளியில் பேச்சு நியமிப்பு எண் 2-ஐ கொடுக்கும் சகோதரர்கள் அந்த நியமிப்பு பகுதியை சத்தமாக வாசித்து வாசித்துப் பழகிப்பார்க்க வேண்டும். பள்ளிக் கண்காணி பாராட்டுவார், வாசிப்பில் முன்னேறுவதற்கு ஆலோசனைகளும் வழங்குவார்.
5 நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை பயன்படுத்துங்கள்: பேச்சு எண் 3 மற்றும் 4, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து நியமிக்கப்படுகிறது. நம்மில் அநேகர் இந்த நடைமுறையான உதவியை வெளி ஊழியத்தில் அடிக்கடி பயன்படுத்திக்கொள்ள இன்னுமதிக முயற்சி எடுக்க வேண்டும். சகோதரிகள், பிராந்தியத்திற்குப் பொருத்தமான பேச்சு அமைப்புகளை தெரிந்தெடுக்க வேண்டும். அவர்கள் கற்பிக்கும் விதத்திற்கும் வசனங்களை உபயோகிக்கும் விதத்திற்கும் பள்ளிக் கண்காணி குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
6 நற்செய்தியை அறிவிக்கவும், மாதேவனாகிய யெகோவாவை துதிக்கவும் கடவுள் தந்த பேச்செனும் வரத்தை தொடர்ந்து பயன்படுத்த நம் அனைவருக்கும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி உதவுவதாக!—சங். 34:1; எபே. 6:19, NW.