பைபிள்—திருத்தமான சரித்திரம், நம்பத்தக்க தீர்க்கதரிசனம் வீடியோ புகட்டும் கல்வி
இந்த வீடியோவை கண்டுகளித்த பிறகு, பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? (1) பைபிளின் நம்பத்தக்க செய்தியை தெரிவித்திருப்பவர் யார்? (தானி. 2:28) (2) பண்டைய எகிப்தை பைபிள் எவ்வாறு தெள்ளத்தெளிவாக சித்தரித்துக் காட்டுகிறது, ஏசாயா 19:3, 4-ல் பதிவாகியுள்ள தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது? (3) அசீரியர்கள், அசீரிய ராஜாக்கள், அசீரிய பேரரசின் முடிவு ஆகியவற்றைப் பற்றிய பைபிளின் விவரிப்பை, தொல்பொருள் ஆராய்ச்சி எவ்வாறு உறுதிப்படுத்தி உள்ளது? (நாகூ. 3:1, 7, 13,) (4) பாபிலோன் சம்பந்தப்பட்ட எந்த தீர்க்கதரிசனங்கள் நம்பத்தக்கவையாய் நிரூபித்துள்ளன? (5) மேதிய-பெர்சிய வல்லரசு, கடவுளுடைய ஜனங்களில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? (6) தானியேல் 8:5, 8 எப்படி நிறைவேறினது, எவ்வளவு காலத்திற்கு முன்பாகவே இது உரைக்கப்பட்டது? (7) தாமே உண்மையான மேசியா என்பதை இயேசு எவ்வாறு நிரூபித்தார்? (8) எந்த அரசியல் வல்லரசுகள் இப்போது வெளிப்படுத்துதல் 13:11; 17:11-லுள்ள தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகின்றன? (9) பிரசங்கி 8:9-ன் உண்மையை இந்த வீடியோவிலுள்ள எந்த காட்சிகள் நிரூபிக்கின்றன? (10) இந்த வீடியோவில் நீங்கள் பார்த்த விஷயம், எதிர்காலத்தைப் பற்றிய பைபிளின் வாக்குறுதிகளில் உங்கள் நம்பிக்கையை எவ்வாறு உறுதியாக்கியுள்ளது? (11) பைபிள் கடவுளால் கொடுக்கப்பட்டது என்பதை மற்றவர்களுக்குப் புரிய வைக்க இந்த வீடியோவை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?