ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மார்ச் 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “ஏப்ரல்—‘நாம் கடினமாய் உழைத்து, மும்முரமாய் ஈடுபடுவதற்கான’ சமயம்.” (பாராக்கள் 1-13) நடத்தும் கண்காணி கையாளுவார். ஏப்ரல் மாத இலக்கை அடைவதைப் பற்றிய உற்சாகமூட்டும் கலந்தாலோசிப்பு. சபையிலுள்ள எல்லாரும் ஊழியத்தில் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும் என்பதே சபையின் இலக்கு. இதை அடைய எல்லாரும் தங்கள் பங்கை செய்யும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 147, முடிவு ஜெபம்.
மார்ச் 19-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
17 நிமி: 2001 இயர்புக்கை நன்கு பயன்படுத்துங்கள். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். பக்கம் 31-லுள்ள ‘2000-த்தின் மொத்த எண்ணிக்கையை’ மறுபார்வை செய்துவிட்டு, பக்கங்கள் 3-5-லுள்ள “ஆளும் குழுவின் கடித”த்தையும் கலந்தாலோசிக்கவும். சபையாருக்கு உற்சாகமூட்டிய அல்லது விசுவாசத்தைப் பலப்படுத்திய அறிக்கையையோ அனுபவத்தையோ இந்தப் புதிய இயர்புக்கிலிருந்து சொல்லும்படி அவர்களில் சிலரை கேளுங்கள். உலகளாவிய பெத்தேல் குடும்பத்தினர் ஒவ்வொரு வருடமும் இயர்புக் முழுவதையும் சேர்ந்து படிக்கும் முறையை எல்லா குடும்பங்களும் பின்பற்ற உற்சாகப்படுத்துங்கள். என்ன கற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அறிய பக்கம் 255-லுள்ள கேள்விகளைப் பயன்படுத்தும்படி வலியுறுத்துங்கள். யெகோவாவின் அமைப்பையும் அதன் பாகமாக இருப்பதன் சிலாக்கியத்தையும் பைபிள் மாணாக்கர் இன்னும் போற்றுவதற்கு இந்த இயர்புக்கை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு ஆலோசனைகளைக் கேளுங்கள்.
20 நிமி: “ஏப்ரல்—‘நாம் கடினமாய் உழைத்து, மும்முரமாய் ஈடுபடுவதற்கான’ சமயம்.” (பாராக்கள் 14-30) ஊழியக் கண்காணி கையாளுவார். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கேள்வி-பதில் கலந்தாலோசிப்பும் பேச்சும். ஏப்ரல் மாதத்தில் முடிந்தளவு ஊழியத்தில் ஈடுபடுவதற்கு நடைமுறையான அட்டவணையை எல்லாரும் தயாரிக்க வேண்டும். அந்த மாத வெளி ஊழிய ஏற்பாட்டின் முழு அட்டவணையைப் பற்றி சொல்லவும். துணைப்பயனியர் ஊழியம் செய்ய எல்லாரையும் உற்சாகப்படுத்தி, கூட்டம் முடிந்தபின் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள சொல்லவும்.
பாட்டு 188, முடிவு ஜெபம்.
மார்ச் 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாதத்தின்போது துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு விண்ணப்பிக்க காலதாமதம் ஆகிவிடவில்லை என்பதை விளக்குங்கள். தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல்—2001-ல் கொடுக்கப்பட்டுள்ள, ஏப்ரல் 3-8 தேதிகளில் வாசிக்க வேண்டிய நினைவு ஆசரிப்பு பைபிள் வாசிப்பு பகுதியைப் படிக்க எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். நினைவு ஆசரிப்பு வாரத்தில் எப்போது காவற்கோபுர படிப்பு நடைபெறும் என்பதை அறிவியுங்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 1-ம் தேதி “யார் காப்பாற்றப்படுவர்?” என்ற தலைப்பில் கொடுக்கப்படவிருக்கும் விசேஷ பொதுப் பேச்சை மறந்துவிடாதீர்கள். அன்றைய தின ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி எல்லாரையும் ஊக்குவியுங்கள்; இது ஏப்ரல் மாத ஊழியத்திற்கு நல்ல துவக்கமாய் அமையும்.
20 நிமி: “நாமனைவரும் யெகோவாவையும் அவருடைய குமாரனையும் கௌரவிப்போமாக.” வேதப்பூர்வ ஊக்குவிப்பைத் தரும் மூப்பரின் பேச்சு. ஏப்ரல் மாதத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ள விசேஷ ஊழியத்தில் முடிந்தளவு பங்குகொள்ளும்படியும், நினைவு ஆசரிப்புக்கு ஜனங்களை அழைக்க அதிக முயற்சி எடுக்கும்படியும் எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: நம்முடைய பத்திரிகை அளிப்புகளை தயாரித்தல். ஏப்ரல் மாதத்தில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்போம். அக்டோபர் 1996, நம் ராஜ்ய ஊழியம் பிரதியில் பக்கம் 8, பாராக்கள் 3-ஐயும் 10-ஐயும் மறுபார்வை செய்யுங்கள். (1) ஒரு கட்டுரையை, (2) பொருத்தமான பேச்சுக் குறிப்பை, (3) ஆர்வத்தைத் தூண்டும் கேள்வியை, (4) அந்த இரு பத்திரிகைகளில் இருந்தும் அளிப்புக்கு பொருத்தமான வசனத்தை விளக்கிக் காட்டுங்கள். ஆர்வம் காட்டுபவர்களுடன் பைபிள் படிப்பை ஆரம்பிக்க தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ அறிவு புத்தகத்தையோ உபயோகிக்க முயற்சி செய்யுங்கள். முதல் சந்திப்பில் இதை எப்படி பின்பற்றலாம் என்பதைக் காட்ட நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்பை இறுதியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 207, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 2-ல் துவங்கும் வாரம்
9 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாத ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டவும். “நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” பகுதியை மறுபார்வை செய்யுங்கள்.
18 நிமி: “பிரசங்கிக்க தூண்டும் அன்பு.”a இந்தக் கட்டுரையிலுள்ள வசனங்களை வலியுறுத்திக் காட்டுங்கள். ஆங்கில உட்பார்வை, தொகுதி 2, பக்கம் 673, பாரா 1-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கடவுளிடமுள்ள அன்பு ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய எவ்வாறு தன்னை உந்துவித்திருக்கிறது என்பதை பல ஆண்டுகளாக சுறுசுறுப்பாக ஊழியத்தில் ஈடுபட்டு வரும் பிரஸ்தாபி ஒருவரை சொல்ல சொல்லுங்கள். ஏப்ரலிலும் வரவிருக்கும் மாதங்களிலும் சாட்சி கொடுக்கும் வேலையில் சுறுசுறுப்புடன் பங்குகொள்ள எல்லா பிரஸ்தாபிகளையும் தூண்டுவியுங்கள்.
18 நிமி: “கூட்டங்களுக்கு வர மற்றவர்களுக்கு உதவுங்கள்.”b பைபிள் மாணாக்கர்களை அமைப்பினிடம் வழிநடத்துவதற்கு உதவும் இன்னும் சில ஆலோசனைகள் ஜூன் 1996, நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் பாராக்கள் 14-16-ல் உள்ளன. தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் (பாடம் 5, பாரா 7) அறிவு புத்தகத்தையும் (அதிகாரம் 5, பாரா 22) உபயோகித்து கூட்டங்களுக்கு வர ஆரம்பத்திலிருந்தே அவர்களை உற்சாகப்படுத்தலாம் என்பதைக் காட்டுங்கள். இதை விளக்க, நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்பை ஏற்பாடு செய்யுங்கள். அது, கூட்டங்களுக்கு தவறாமல் வருவதைக் குறித்து கவனமாய் சிந்திக்கும்படி ஒரு மாணாக்கரை திறம்பட்ட பிரஸ்தாபி அன்பாக உற்சாகப்படுத்துவதைப் போன்று இருக்கட்டும்.
பாட்டு 47, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.