உங்கள் ராஜ்ய மன்றத்துக்கு மதிப்பு காட்டுகிறீர்களா?
1 “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங். 133:1) ராஜ்ய மன்றங்களில் நடக்கும் கூட்டங்கள் நம் சகோதரர்களுடன் ஒன்றாக சேர்ந்திருக்க வாய்ப்பளிக்கின்றன; அங்கு நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் தூண்டுகிறோம்.—எபி. 10:24, 25.
2 ராஜ்ய மன்றம் நம் வாழ்வில் அவ்வளவு முக்கியமானதாக செயல்படுவதால், நாம் அதற்கு உண்மையிலேயே மதிப்பைக் காட்டுகிறோமா? எந்த ஒரு இடத்திலும் மெய் வணக்கத்தின் மையமாக இருப்பது ராஜ்ய மன்றம்தான். எனவே நாம் அதற்கு அதிக மதிப்பு காட்ட வேண்டும். அதை சுத்தமாகவும் நல்ல நிலையிலும் வைப்பதை அவசியமானதாக உணர வேண்டும். சில சமயங்களில், நம்முடைய புத்தக படிப்பு தொகுதியும் மன்றத்தை சுத்தப்படுத்த நியமிக்கப்படும். நம்மால் முடிந்தால், நிச்சயம் அதில் கலந்துகொள்ள வேண்டும். சுத்தமான, அழகான இடத்தில் கூடுவதற்கான நம் போற்றுதலை அதன் மூலமாக வெளிக்காட்டலாம்.
3 சுத்தம் செய்யும்படி நம்மிடம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாம் அனைவருமே ராஜ்ய மன்றத்தில் அக்கறை காட்ட வேண்டும். எப்படி? மன்றத்தை அழுக்காக்காதபடி உள்ளே வரும்போது கால்களை துடைத்துவிட்டு வருவது போன்ற எளிய காரியத்தை செய்வதன் மூலமே. முக்கியமாக வானிலை மோசமாக இருக்கும்போது இதைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும். கழிவறைக்கு சென்று வருகையில், கைகழுவும் ஸிங்க்கை சுற்றியுள்ள இடத்தை துடைத்து சுத்தமாக வைத்துவிட்டு வரவும். ஏனென்றால் அடுத்ததாக வருபவர் பயன்படுத்துவதற்கு அந்த இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பிரசுர, பத்திரிகை கவுண்டர்களில் வேலை செய்பவர்கள் காலியான அட்டை பெட்டிகளை உடனுக்குடன் நீக்குவதன் மூலம் மன்றத்திடமுள்ள தங்கள் அக்கறையை காட்டுகிறார்கள். எல்லாவித குப்பையையும் அதற்குரிய இடத்தில் போட வேண்டும். வேண்டாத பேப்பரோ வேறு குப்பையோ தரையில் கிடந்தால், வேறு யாராவது பொறுக்குவார்கள் என்று விட்டுவிடாமல் நாமே அதை எடுத்துவிட வேண்டும்.
4 மாநாடுகளுக்கும் இதே நியமங்கள் பொருந்தும். நம்முடைய சொந்த மாநாட்டு மன்றமாக இருந்தாலும் சரி, வேறு இடமாக இருந்தாலும் சரி, மாநாடு நடக்கும் இடம் மெய் வணக்கத்தின் மையமாக இருக்கிறது. எனவே அதற்கு தகுந்த மரியாதை காட்ட வேண்டும். நிகழ்ச்சி முடிந்து நாம் திரும்பும்போது நாம் உட்கார்ந்திருந்த இடத்தில் குப்பைபோட்டுவிட்டு வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். உதவும் மனநிலை இருக்க வேண்டும். நாம் போன பிறகு சுத்தம் செய்கிறவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கக் கூடாது.
மன்றத்தை பகிர்ந்துகொள்ளுதல்
5 மனைகளின் விலை அதிகமாக இருப்பதால், அநேக ராஜ்ய மன்றங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட சபைகள் பயன்படுத்துகின்றன. நகரங்களில், ஒரே ராஜ்ய மன்றத்தை ஐந்தாறு சபைகள் பயன்படுத்துகின்றன. ராஜ்ய மன்றம் யெகோவாவுடையது என்பதையும் அவருடைய வணக்கத்துக்காக பயன்படுகிறது என்பதையும் உணர்ந்து ஒவ்வொரு சபையும் அதில் அக்கறை காட்ட வேண்டும். ஆகவே ராஜ்ய மன்றத்திற்கு மதிப்பு காட்ட, யெகோவாவிடம் மட்டுமல்லாமல் அந்த மன்றத்தை பயன்படுத்தும் சபைகளிலுள்ள சகோதரர்களிடம் அன்பு வைத்திருப்பதும் அவசியம்.
6 பொதுவாக, ராஜ்ய மன்றம் வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகிறது. மன்றத்தை ஒன்றுக்கும் அதிகமான சபைகள் பயன்படுத்தும் இடங்களில் ஒவ்வொரு கூட்டத்திற்கு பின்பும் கொஞ்சம் சுத்தம் செய்வது அவசியம்; அப்போதுதான், கூட்டத்திற்காக அடுத்த சபை வரும்போது மன்றம் நல்ல தோற்றமளிக்கும். ஒரு சபையின் கூட்டங்கள் முடிந்ததும் அடுத்த சபை கூடிவரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்கும் இது பொருந்தும். அடுத்து கூடிவரும் சபைக்காக கிடைக்கும் நேரத்திற்கு தகுந்தாற்போல சுத்தம்செய்வது நல்லது. பல சபைகள் ஒரே மன்றத்தை அதே நாள் பயன்படுத்துகையில், இந்த விஷயத்தை எவரும் கவனிக்காவிட்டால் அந்த நாளின் முடிவில் மன்றம் மிகவும் அழுக்கடைந்து போகும்.
7 நாம் ஆவிக்குரிய விஷயங்களில் ‘ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய் சீர்பொருந்தி’ இருப்பது போலவே, ராஜ்ய மன்றத்துக்கு மதிப்பு காட்டுவதிலும் ஒன்றுபட்டவர்களாய் இருப்போமாக.—1 கொ. 1:10.