ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
டிசம்பர் 10-ல் துவங்கும் வாரம்
13 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். டிசம்பர் 24-க்கான ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படவிருக்கும் பூமியின் கடைக்கோடிகளுக்கு என்ற ஆங்கில வீடியோவை பார்த்து வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, (1) டிசம்பர் 8 விழித்தெழு!-வையும் (2) டிசம்பர் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டுங்கள்.
12 நிமி:மூப்பர்களுக்கு உரிய கரிசனையைக் காட்டுங்கள். இரண்டு அல்லது மூன்று உதவி ஊழியர்கள் ஜூன் 1, 1999 காவற்கோபுரம், பக்கங்கள் 18-19-ஐ கலந்தாலோசிக்கின்றனர். மூப்பர்களுக்கு இருக்கும் வேலை, குடும்ப பொறுப்புகள், தேவராஜ்ய நியமிப்புகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கடமைகளைப் பற்றி குறிப்பிடுகின்றனர். நாமனைவரும் சேர்ந்து அவர்களை என்னென்ன வழிகளில் உற்சாகப்படுத்தலாம், அவர்கள் பளுவை எந்த விதத்தில் இலேசானதாக்கலாம், அவர்களுடைய வழிநடத்துதலை எப்படி பின்பற்றலாம் என்பதை அந்த உதவி ஊழியர்கள் சிந்திக்கின்றனர். மூப்பர்கள் ஒப்பற்ற சேவையை செய்து வருகின்றனர் என்றும் ‘அவர்களுக்கு அளவு கடந்த மதிப்பு கொடுக்க வேண்டும்’ என்றும் அவர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.—1 தெ. 5:12, 13, NW.
20 நிமி:“யெகோவாவின் அன்புக்கு நன்றி காட்டுவதன் ஆசீர்வாதங்கள்—பகுதி 2.”a 2-6 பாராக்களை சிந்திக்கையில், சமீபத்தில் நடந்த பேரழிவையும் அதன் விளைவையும் குறித்து சோர்வுடனோ கவலையுடனோ இருந்தவர்களிடம் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்குமாறு பேசியதால் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். அவற்றில் ஓரிரண்டு அனுபவங்களை மறுபடியும் நடித்துக் காட்ட முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 222, முடிவு ஜெபம்.
டிசம்பர் 17-ல் துவங்கும் வாரம்
8 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. டிசம்பர் 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் செய்யப்படும் விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகளை தெரிவியுங்கள்.
20 நிமி:“கடவுளுடைய வார்த்தையை நிதானமாய்ப் பகுத்துப் போதியுங்கள்.”b பாரா 4-ல் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்க முறையை எதார்த்தமாக நடித்துக் காட்டுவதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், உள்ளூரில் சமீபத்திய உலக நிலைமைகளால் துயரப்படும் மக்களை உற்சாகப்படுத்துவதற்கு அல்லது தேற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் திறம்பட்ட பிரசங்கம் ஒன்றை நடித்துக் காட்டுங்கள். சுருக்கமாக ஒரு அனுபவத்தையும் சொல்ல வைக்கலாம். பைபிளை பயன்படுத்துவது, சாட்சி கொடுத்தலை இன்னும் திறம்பட்டதாக்குமென ஏன் நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி குறிப்புகள் சொல்லும்படி சபையாரை கேளுங்கள்.
17 நிமி:“எந்த பைபிள் மொழிபெயர்ப்பை நான் உபயோகிக்க வேண்டும்?” பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். உள்ளூர் பிராந்தியத்தில் பேசப்படும் மொழிகளில் உள்ள முழு பைபிளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.
பாட்டு 225, முடிவு ஜெபம்.
டிசம்பர் 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். ஜனவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பையும் சபையின் கையிருப்பிலுள்ள புத்தகங்களையும் தெரிவியுங்கள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில், டிசம்பர் 8, விழித்தெழு!-வையும் ஜனவரி 1, காவற்கோபுரத்தையும் பயன்படுத்தி, இரண்டு சுருக்கமான பத்திரிகை அளிப்புகளை நடித்துக் காட்டுங்கள். அவற்றில் ஒன்றை ஓர் இளைஞர் கொடுப்பதாக இருக்கட்டும்.
10 நிமி:“2002-ம் ஆண்டிற்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி.” பள்ளிக் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்படும் நியமிப்புகளை நன்றாக செய்வதற்கு கடினமாய் உழைக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
25 நிமி:“சாட்சி கொடுத்தல்—பூமியின் கடைக்கோடிகளுக்கு.” சபையார் கலந்தாலோசிப்பு. உள்ளூராக இருந்தாலும் சரி, தேவை அதிகமாக உள்ள இடமானாலும் சரி, நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க இன்னும் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். நம் ராஜ்ய ஊழியம், ஜூலை 2001, பக்கம் 8-ஐக் குறிப்பிடுங்கள். பிப்ரவரியில் நோவா—கடவுளோடு நடந்தார் (ஆங்கிலம்) வீடியோவை நாம் கலந்தாலோசிப்போம்.
பாட்டு 24, முடிவு ஜெபம்.
டிசம்பர் 31-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். டிசம்பருக்கான வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். புதிய வருடத்திலிருந்து உங்கள் சபைக் கூட்ட நேரங்களில் மாற்றங்கள் செய்யப்படுமானால், அந்த நேரங்களில் தவறாமல் கூட்டங்களுக்கு வரும்படி தயவாய் அனைவரையும் கேட்டுக்கொள்ளுங்கள். அக்கறை காட்டும் அனைவரும் செயலற்றவர்களாய் இருக்கும் எவரேனும் இந்த மாற்றங்களை அறிந்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
35 நிமி:“‘கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்’ மாவட்ட மாநாட்டில் கற்றவற்றை கடைப்பிடிக்கிறீர்களா?” மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றி சபையாருடன் கலந்தாலோசிப்பு; இது காவற்கோபுர படிப்பு நடத்துநரால் கையாளப்படும். ஒரு நிமிட முன்னுரைக்குப் பின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளுக்கும் 10 முதல் 12 நிமிடங்களை ஒதுக்குங்கள். ஒவ்வொரு உபதலைப்புகளிலும் உள்ள முக்கிய குறிப்புகளை சுருக்கமாக எடுத்துரைத்து, (1) அந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு எவ்வாறு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்றும், (2) அவ்வாறு செய்ததால் எவ்வாறு பயனடைந்திருக்கிறார்கள் என்றும், (3) இன்னும் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறார்கள் என்றும் சபையாரிடமிருந்து குறிப்புகளை வரவழையுங்கள். கலந்தாலோசிப்பு விறுவிறுப்பாக இருப்பதற்கு உதவியாக, சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேளுங்கள். தாங்கள் கற்றுக்கொண்டதை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவுங்கள்.
பாட்டு 151, முடிவு ஜெபம்.
ஜனவரி 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள்.
20 நிமி:காற்றுள்ள போதே தூற்றிக்கொள். காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1998, பக்கங்கள் 8-9-ஐக் குடும்பத்தார் கலந்தாலோசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கையில் ஏமாற்றமடைந்துவிடாமல், மகிழ்ச்சியைக் காண்பதற்கு உதவும் ஒரு வழியை தன் குடும்பத்தினர் நாட வேண்டும் என தகப்பன் விருப்பம் தெரிவிக்கிறார். பகுத்துணர்வுக்கான தேவையையும், பலன் தரும் முன்னுரிமைகளையும், யெகோவாவின் மேல் நம்பிக்கையையும் குறித்து கவனமாக சிந்திப்பதன் மூலம், தங்கள் மகிழ்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ள அந்தக் கட்டுரையிலுள்ள வேதப்பூர்வ புத்திமதியை அவர்கள் மறுபடியும் கலந்தாராய்கின்றனர். ஒரு குடும்பமாக எந்தெந்த விதங்களில் நடைமுறை மாற்றங்களை செய்யலாம் என திட்டமிடுகின்றனர்.
15 நிமி:நம் ராஜ்ய மன்றத்தை கூர்ந்து கவனித்தல். ஒரு மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. ராஜ்ய மன்றத்தின் நிலையை சற்று கவனியுங்கள். அது எப்போதும் பளிச்சென்று, சுத்தமாக, கவர்ச்சியாக இருக்கிறதா? இருக்கைகள், ஒலி அமைப்பு, காற்றோட்ட வசதி ஆகியவை சௌகரியமாக கூட்டங்களை அனுபவிக்க உதவுகின்றனவா? கழிப்பறைகள் நல்ல நிலையில் வைக்கப்பட்டுள்ளனவா? கட்டடத்தின் சுவர்கள் உள்ளேயும் வெளியேயும் சரியாக பராமரிக்கப்பட்டிருக்கின்றனவா? சுற்றுப்புறம் எவ்வாறு உள்ளது? ஒழுங்குப்படி ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வதற்கான அட்டவணை பின்பற்றப்படுகிறதா? கவனம் செலுத்தப்பட வேண்டிய, அல்லது முன்னேற்றம் செய்யப்பட வேண்டிய அம்சம் ஏதாவது இருந்தால் தெரிவியுங்கள். நினைவு ஆசரிப்பு நாளுக்கு முன்பு முழுமையாக துப்புரவு செய்ய என்னென்ன திட்டங்கள் போடப்பட்டு வருகின்றன? அதற்கு முன்பு என்னென்ன ரிப்பேர் வேலைகள் செய்யப்பட வேண்டும்? சபையார் எவ்வாறு உதவலாம் என்று விளக்குங்கள். நாம் வணக்கத்திற்காக கூடிவரும் இடம், யெகோவாவின் வீட்டுடன் சம்பந்தப்படுத்திப் பேசப்படும் அழகையும் மேன்மையையும் பிரதிபலிக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வதின் தேவையை வலியுறுத்துங்கள்.—சங். 84:1.
பாட்டு 126, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.