ராஜ்ய மன்ற கட்டுமான திட்டம் முன்னேறுகிறது
1 ஐக்கிய மாகாணங்களில் 1983-ல் நடைபெற்ற “ராஜ்ய ஒற்றுமை” மாவட்ட மாநாடுகளில் ஓர் அறிவிப்பு செய்யப்பட்டது. ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் ராஜ்ய மன்றங்களை கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் பொருளுதவி செய்வதற்கென ஒரு விசேஷித்த நிதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. அந்த சிறிய ஆரம்பத்திலிருந்து மாபெரும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என அவர்கள் அப்போது நினைக்கவில்லை. இவ்விஷயத்தில், “கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்” என்று சங்கீதம் 92:4 குறிப்பிடுவதை இன்னும் முழுமையாக அவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்னர், பொருளாதார ரீதியில் நலிவடைந்த ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய நாடுகளிலுள்ள சகோதரர்களுக்கு உதவும் விதத்தில் நிதியைப் பயன்படுத்துவதற்கு இத்திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
2 இப்போது செய்யப்படுபவற்றைக் கண்டு நாம் அனைவரும் பெரிதும் மகிழ்கிறோம். தற்போது உலகளவில் ராஜ்ய மன்ற கட்டுமான திட்டம் வெகு மும்முரமாக முன்னேறி வருகிறது. ஆனால் இந்தியாவிலுள்ள நாம் இந்தத் திட்டத்திற்குப் பங்களிக்கும் சிலாக்கியத்தைப் பெற முடியுமா? இந்த நாட்டில் செய்யப்படும் ராஜ்ய மன்ற கட்டுமான வேலையை ஆதரிப்பதன் மூலம் நாம் இதை செய்யலாம்; உள்ளூர் சபைகள் சிறியளவிலோ பெரியளவிலோ அளிக்கும் பண நன்கொடையையே இது இப்போது சார்ந்திருக்கிறது. தங்களிடம் உள்ள சாதனங்களையும் நேரத்தையும் ஆற்றலையும் திறமையையும்கூட அநேக சகோதரர்கள் முன்வந்து அளிக்கவும் செய்யலாம். நாம் எந்தளவுக்கு கொடுத்தாலும் சரி, நாம் ஒன்றுபட்டவர்களாக சேர்ந்து எடுக்கும் முயற்சியை யெகோவா வழிநடத்தி, ஆதரித்து, அபரிமிதமாய் ஆசீர்வதிப்பதே இந்த முழு ஏற்பாட்டின் வெற்றிக்கும் காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.—சங். 127:1, 2.
3 நாடு முழுவதிலுமுள்ள ராஜ்ய மன்றங்களில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது; அதில் ராஜ்ய மன்ற நிதிக்கு பிரஸ்தாபிகள் நன்கொடைகளைப் போடுகின்றனர். மேலும், தங்கள் சபை நிதியிலிருந்து அநேக சபைகள் மாதாமாதம் நன்கொடைகளை அனுப்ப தீர்மானித்திருக்கின்றன. இன்னும் சில சபைகள், தங்கள் சேமிப்புகளை வைப்பு நிதியில் சேமித்து வைப்பதற்கு பதிலாக அதை ராஜ்ய மன்ற நிதிக்காக அனுப்பியிருக்கின்றன; காரணம் தங்களுக்கென ஒரு ராஜ்ய மன்றம் கட்ட வேண்டிய சமயத்தில் தாங்கள் அனுப்பிய பணத்திலிருந்து மட்டுமல்லாமல் தற்போது ராஜ்ய மன்றம் தேவைப்படாத பிற சபைகள் அனுப்புகிற நன்கொடையிலிருந்தும் பயனடைய முடியும் என்ற நம்பிக்கை அவற்றிற்கு இருப்பதாலேயே.
4 அப்போதிலிருந்து சபைகள் எவ்வாறு பிரதிபலித்துள்ளன? கடந்த மார்ச் மாதத்தில் பிரஸ்தாபிகள் இந்தப் புதிய ஏற்பாட்டை அறிந்தது முதற்கொண்டு இரண்டு புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டி முடிப்பதற்குத் தேவையானவற்றை ஏற்கெனவே அனுப்பியிருக்கிறார்கள். இந்த நிதியின் உதவியால் ஏற்ற ராஜ்ய மன்றங்களை ஏற்கெனவே கட்டியிருப்பவர்களும்கூட தங்களைப் போல மற்ற சபைகளும் பலனடைவதற்காக இன்னமும் தொடர்ந்து நன்கொடை அனுப்பி வருவது உற்சாகத்தை அளிக்கிறது. தற்போது தங்களுக்கென சொந்த ராஜ்ய மன்றத்தைக் கட்ட முடியாதவர்கள் மாதாமாதம் நன்கொடைகளை அனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நாட்டின் ஏதோவொரு பகுதியில் உடனடியாக ஒரு மன்றத்தைக் கட்டுவதற்கு இந்த நிதி பயன்படும் என்பதை அறிந்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; உரிய நேரத்தில் அவர்களுக்கென மன்றம் கட்டப்படுகையில் இதுபோன்ற நன்கொடைகள் அவர்களுக்கும் உதவும்.
5 இந்தத் திட்டத்தின் மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருப்பதற்கான அத்தாட்சியை பிற நாடுகளில் காண முடிகிறது. அங்கு கட்டப்பட்டுள்ள சில ராஜ்ய மன்றங்களை படங்களில் நீங்கள் காணலாம். அப்படிப்பட்ட கட்டுமானம் அந்த நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்! பின்வரும் மூன்று அம்சங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது: நம் உலகளாவிய சகோதரத்துவத்தின் ஒற்றுமை, உள்ளூர் மக்கள்மீது பாதிப்பு, சபைக் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு. ஆப்பிரிக்காவில் கட்டப்பட்ட ராஜ்ய மன்றங்களை இந்த உட்சேர்க்கை சிறப்பித்துக் காட்டினாலும், இனி வரவிருக்கும் நம் ராஜ்ய ஊழியம், இந்தியாவிலும் ராஜ்ய மன்ற கட்டுமான திட்டம் முன்னேறும் விதத்தை சிறப்பித்துக் காட்டும் என நம்புகிறோம். இந்தத் திட்டத்திலிருந்து உங்கள் சபை பயனடையுமா? இந்தத் திட்டத்தில் முடிந்த மட்டும் பங்களிக்கையில் யெகோவா உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பாராக.
[பக்கம் 5-ன் படங்கள்]
பிம்போ, பங்குய்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
பகூவா, பங்குய்
[பக்கம் 6-ன் படங்கள்]
யூகாங்கா, டான்ஜானியா
சலாலா, லைபீரியா
பெமீ, டோகோ
ஸோகோடே, டோகோ
கரோயீ, ஜிம்பாப்வே