அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை சேர்த்து அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களை மறுசந்திப்பு செய்கையில், அமைப்புடன் நிரந்தர தொடர்பு வைத்திராமல், நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கோ மட்டும் வந்து போகும் நபர்களையும் சந்தியுங்கள். கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அவர்களிடம் அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சந்திப்போரிடம், முக்கியமாக அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் சிலரிடம் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி செய்ய வேண்டும். ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள். தங்களுக்குக் குழந்தைகள் இல்லையென சொல்லுபவர்களுக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள். அந்த சிற்றேட்டை உபயோகித்து பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்துங்கள். ஜூலை, ஆகஸ்ட்: நம் ராஜ்ய ஊழியத்தில் கிடைக்குமென பட்டியலிடப்பட்டுள்ள சிற்றேடுகள்.
◼ அனைத்து நடத்தும் கண்காணி, செயலர் ஆகியோரின் தற்போதைய விலாசங்களும் தொலைபேசி எண்களும் கிளை அலுவலகத்திடம் இருப்பது அவசியம். எப்போதாவது இவற்றில் மாற்றம் ஏதாவது இருந்தால், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்ற படிவத்தை (S-29) சபையின் ஊழியக்குழு பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு உடனடியாக கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி ஏரியா கோட் நம்பரில் மாற்றம் இருந்தால் அதையும் இப்படிவத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்ப படிவத்தையும் (S-205) துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்ப படிவத்தையும் (S-205b) சபை செயலர்கள் போதுமானளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தில் (S-14) இவற்றை ஆர்டர் செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தேவையானவை கைவசம் இருக்க வேண்டும். ஒழுங்கான பயனியர் விண்ணப்ப படிவங்கள், விண்ணப்பிப்பவரின் முழுக்காட்டுதல் தேதி உட்பட முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
◼ வருடம் முழுவதும் உபயோகிப்பதற்கு லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து படிவங்களுக்கும் தயவுசெய்து ஆர்டர் செய்யவும். இதற்காக தயவுசெய்து தனி கடிதத்தை அல்லது லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மை அனுப்ப வேண்டாம்; மாறாக ஏப்ரல் மாத பிரசுர ஆர்டரில் இவற்றிற்கும் சேர்த்து ஆர்டர் செய்யவும். மேலுமான தகவல்களுக்கு, உவாட்ச்டவர் பிரசுரங்களை வரவழைக்கும் முறை, பகுதி 4, பக்கம் 1-ல் “இயர்லி காலண்டர் ஆஃப் லிட்ரேச்சர் ஐடம்ஸ்” என்பதில் தயவுசெய்து பார்க்கவும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (சிறிய பாட்டுப் புத்தகம்) —தமிழ்
தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! —உருது
யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? (சிற்றேடு) —உருது
துன்பத்திற்கு விடிவுகாலம் வருமா? (துண்டுப்பிரதி எண் 75) —அசாமீஸ், கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், மிஸோ, ஹிந்தி
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் —தமிழ்